"தயவு செய்து அவரைப்பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்"- பிரசாந்த் கிஷோர் மீது நிதிஷ் குமார் தாக்கு
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார், பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்த பிறகு, நிதிஷ் குமாரை பா.ஜ.க ஒருபக்கம் விமர்சிக்க, மறுபக்கம் தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோரும் அவரை விமர்சித்துவருகிறார். இரண்டு நாள்களுக்கு முன்புகூட, “நிதிஷ் குமார் இன்னும் பா.ஜ.க-வுடன் தொடர்பில் இருக்கிறார். அதற்கான சூழல் வரும்போது மீண்டும் அவர் பா.ஜ.க-வுடன் இணைவார்” என பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். பிரசாந்த் கிஷோர் இந்த நிலையில், பிரசாந்த் கிஷோரின் இத்தகைய பேச்சுக்கு, நிதிஷ் குமாரும் தன்னுடைய பதில் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். பிரசாந்த் கிஷோர் குறித்து செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய நிதிஷ் குமார், … Read more