சென்னை தேனாம்பேட்டையில் விபத்தில் சிக்கிய நபருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில்  விபத்தில் சிக்கிய நபருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்துள்ளார். விபத்தில் சிக்கியவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முதலமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார்

இந்திய இருமல் மருந்துகளால் 66 குழந்தைகள் பலி: "இது மிகவும் தீவிரமான பிரச்சினை" – உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி

புனே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகளால், காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் இறந்தது ஒரு தீவிரமான பிரச்சினை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறினார். அரியானாவின் சோனிபட்டில் உள்ள மெய்டன் மருந்து நிறுவனம் 4 வகையான இருமல் மருந்துகளை தயாரித்து வருகிறது. இவை ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. இந்ந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், காம்பியா நாட்டில் இந்த மருந்துகளை எடுத்துக்கொண்ட 66 குழந்தைகள் … Read more

INDvPAK: `நாக் அவுட் முதல் நெட் பிராக்டீஸ் வரை!' இந்தியா பாகிஸ்தான் மோதலின் 5 சுவாரஸ்யமான சம்பவங்கள்

டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொள்ளும் போட்டியே அதிக எதிர்பார்ப்புமிக்க போட்டியாக இருக்கிறது. அத்தனை பேரின் ஆர்வத்தையும் தூண்டியிருக்கும் அந்த போட்டிக்கு முன்பாக இந்தியா பாகிஸ்தான் மோதல்களில் இதுவரை நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் சிலவற்றை பற்றி இங்கே பார்ப்போம். 1996 உலகப் கோப்பை: பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த1996 உலகக் கோப்பையின் காலிறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியிருந்தன. நவ்ஜோத் சித்துவின் அற்புதமான 93 ரன்கள் மற்றும் … Read more

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டிடங்களை  முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சிமூலம் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 48 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான இரண்டு கூடுதல் விடுதிக் கட்டடங்கள், மாணவியர்களுக்கான இரண்டு கூடுதல் விடுதிக் கட்டடங்கள் மற்றும் நூலகக் கட்டடம் ஆகிய கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

உலகக்கோப்பை டி20 : தொடரில் இருந்து வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் அணி

டி 20 உலக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது. வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வீழ்த்தியது. இதனை தொடர்ந்து அயர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கும் தகுதி பெற்றது.

உத்தரகாண்ட்: ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்தில் பிரதமர் மோடி வழிபாடு

கேதார்நாத், உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெள்ளத்தில் ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடம் சேதமடைந்தது. பின்னர், மறுசீரமைக்கப்பட்ட நினைவிடத்தை கடந்த ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி ரூ. 3 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் இன்று காலை கேதார்நாத் கோயிலில் வழிபட்ட பிரதமர் மோடி ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்திற்கு சென்றார். அங்கு மறுசீரமைக்கப்பட்ட நினைவிடத்தை பார்வையிட்டு வழிபாடு … Read more

பிக் பாஸ் 6 நாள் 11: `பயமா இருக்கு; வெளிய அனுப்பிடுங்க!' அசல் – தனலட்சுமி சண்டை; அலறிய வீடு!

பிக் பாஸ் வீட்டின் இரண்டாவது சண்டை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த முறையும் தனலஷ்மிதான் இதன் மையமாக இருந்தார். ‘நல்லா வெச்சிக்கிட்டாம்ப்பா பேரு’ என்பது மாதிரி அசல் கோளாறு உண்மையிலேயே கோளாறு பிடித்த ஆசாமியாக இருக்கிறார். தன்னிச்சையான ஆணாதிக்கத்தனம் நிரம்பிய, மனம் முதிராத இளைஞர்களின் பிரதிநிதியாக இவரை உதாரணம் காட்டத் தோன்றுகிறது. தனலஷ்மி ஏடிகேவாவாது அவ்வப்போது தன் இசைத்திறமையைக் காட்டுகிறார். ஆனால் அசல் காட்டும் திறமை பெரும்பாலும் வில்லங்கமானதாகவே இருக்கிறது. அல்லது அதை மட்டும்தான் காட்டுகிறார்களோ, என்னவோ! … Read more

முதலமைச்சர் கான்வாய் பாதுகாப்புக்கு நிற்ககூடிய காவலர் எண்ணிக்கை குறைப்பு

சென்னை: முதலமைச்சர் பாதுகாப்பு, பொதுமக்களின் நலனுக்காக சாலைகளில் நிற்கக்கூடிய காவலர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் கான்வாய் செல்லும் வழியில் போக்குவரத்தை சீர்செய்ய 2 0அடிக்கு ஒரு காவலர் நிற்பது வழக்கம். முதல்வர் செல்லும் வழியில் சில நொடிகள் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு எளிதில் கான்வாய் செல்ல வழி செய்யப்படும். முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி சாலையில் நிற்கக்கூடிய காவலர்கள் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,119 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,119 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,38,636 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 25,037- ஆக உள்ளதுகொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,84,646- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் … Read more

`கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்?’… `தகவல்கள் இல்லை’ – ஆர்டிஐ கேள்விக்கு மத்திய அமைச்சகம் பதில்

அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் திட்ட மேலாண்மை நிறுவனம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, எப்போது தொடங்கும் என தெரியாது என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆர்.டி.ஐ கேள்விகளுக்கு கொடுத்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எய்ம்ஸ் சமீபகாலமாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டப்படும் என்பது காமெடியாகி வருகிறது. இந்நிலையில் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு 90 சதவிகிதம் நிதி ஒதுக்கி பூர்வாங்கப்பணிகள் முடிந்து விட்டதாக கடந்த மாதம் … Read more