சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ பிராத்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ரூ.1.97 லட்சம் கள்ள நோட்டுடன் சர்வதேச கும்பல் புதுடில்லியில் கைது| Dinamalar

புதுடில்லி : நம் நாட்டில் மிகப் பெரிய அளவில் கள்ள நோட்டு வினியோகத்தில் ஈடுபட்டு வந்த சர்வதேச மோசடி கும்பலை சேர்ந்த இருவரை புதுடில்லி சிறப்பு படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். புதுடில்லியின் ஆன்ந்த் விஹார் ரயில் நிலையத்தில் வைத்து, மாபியா கதுான், 35, என்ற பெண்ணையும், முனிஷ் அகமது, 57, என்பவரையும் சிறப்பு படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து, 97 ஆயிரத்து 500 ரூபாய் … Read more

மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – சேலத்தில் அதிர்ச்சி!

சேலம் இரும்பாலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர் தனது குடும்பத்தோடு இரும்பாலையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரும்பாலை முதல் கேட்டில் சக்திவேல் பாதுகாப்பு பணியில் இருந்தார். மதியம் 2 மணியிலிருந்து இரவு 9 மணி வரை அவருக்கு பணி நேரமாகும். இந்நிலையில் மாலை 3 மணியளவில் சக்திவேலிடம் இருந்த இன்சாஸ் … Read more

மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை; மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ., காரைக்காலில் இருந்து கிழக்கு தென் கிழக்கே 200 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. அடுத்து 3 மணி நேரத்தில் தீவிர புயல் என்ற நிலையில் இருந்து புயலாக மாண்டஸ் வலுவிழக்கக்கூடும் தொடர்ந்து வடமேற்கு திசையை … Read more

சொத்து குவிப்பு வழக்கு: உத்தவ் தாக்கரேக்கு சிக்கல்| Dinamalar

மும்பை : மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக முதல் கட்ட விசாரணை துவங்கி உள்ளதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி குழு பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு முன்னாள் முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே அளவுக்கு அதிகமான சொத்து குவித்துள்ளதால் இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் … Read more

மாண்டஸ் புயல்: விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?! – ஆட்சியர் தகவல்

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘மாண்டஸ்’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலானது, இன்று நள்ளிரவு சமயத்தில் புதுவை – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையே கடக்க வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்நிலையில், மாவட்ட வாரியாக புயல் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் மழையின் அளவை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, … Read more

சீகூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கபட்டது மக்னா யானை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கபட்ட PM2 மக்னா யானை, ரேடியோ காலர் கருவி பொருத்தபட்டு சீகூர் வனப்பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பாக விடுவிக்கபட்டது. 18 நாள் தீவிர முயற்சியால் யானை பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

Cyclone Mandous Live: “சென்னையிலிருந்து 320 கி.மீ தொலைவில் மாண்டஸ்… காற்றின் வேகம் அதிகரிக்கும்’ – வானிலை ஆய்வு மையம்

`85 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும்’ வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், காரணமாக புதுச்சேரி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் படிப்படியாக காற்றின் வேகமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாண்டஸ் புயலானது இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என … Read more

கத்தார் உலகக் கோப்பையில் சிறந்த வீரர் யார்? போட்டியில் 8 பேர்

கத்தார் உலகக் கோப்பை போட்டிகள் இரண்டாவது சுற்று முடிவடைந்து காலிறுதிக்கு நுழைந்துள்ளது. மொத்தம் 8 அணிகள் காலிறுதியில் போட்டியிட உள்ளன. இதில் நான்கு அணிகள் 14 மற்றும் 15ம் திகதிகளில் அரையிறுதியில் மோத இருக்கிறது. தங்கப் பந்தை வென்றுள்ள 10 வீரர்கள் அத்துடன் மதிப்புமிக்க தங்கப் பந்து விருதினை யார் தட்டிச்செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 1982ல் முதன்முறையாக இந்த விருது அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரை 10 வீரர்கள் தங்கப் பந்தை வென்றுள்ளனர். @getty கடைசியாக 2018ல் குரோஷியாவின் … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி: மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது

சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலியாக மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 10 அடி உயரத்திற்கு அலைகள் ஆக்ரோஷமாக வீசுகின்றன; இன்றிரவு இப்பகுதியில் புயல் கரையை கடக்க உள்ளது.