மாண்டஸ் புயல்: சென்னை, காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…

சென்னை; மாண்டஸ் புயல் மிரட்டல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம்  உள்பட 9 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மாண்டஸ் புயல் நாளை இரவு … Read more

இமாச்சலில் காங்கிரஸ் வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி சிறிய கட்சி; தற்போது தேசியக் கட்சி!" – நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்

நாட்டு மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் தேர்தலில், பா.ஜ.க வெற்றிபெரும் என்ற கருத்துகணிப்பு முடிவுகளுக்கும் ஒருபடி மேலாக, பா.ஜ.க ஒரு வரலாற்று வெற்றியை பதிவுசெய்யப் போகிறது. காலையில் தொடங்கப்பட்டு நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில், மாலை 6 மணி நிலவரப்படி 150 இடங்களில் வெற்றி, 6 இடங்களில் முன்னிலை என மொத்தம் 156 இடங்களை பா.ஜ.க கைப்பற்றவிருக்கிறது. இது குஜராத் அரசியலில் எந்தவொரு கட்சியும் பெற்றிராத வெற்றியாக அமையவிருக்கிறது. பாஜக -மோடி, அமித் ஷா இதில் பா.ஜ.க-வுக்கு மாபெரும் … Read more

இளவரசர் ஹரியின் வாழ்வே மாறப்போகிறது: மகாராணியாரின் மரணத்தை கணித்தவர் பரபரப்பு தகவல்

வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பிரேசில் நாட்டவரான Athos Salomé (36) என்பவர், இளவரசர் ஹரி மற்றும் மேகன் வாழ்வில் நடக்கப்போகும் விடயங்கள் குறித்த சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.  பின்னால் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிவிப்பவர் இந்த Athos, பிரித்தானிய மகாராணியாரின் மரணம், உக்ரைன் போர் மற்றும் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்குவது போன்ற விடயங்களை துல்லியமாக கணித்தவர் ஆவார்.  தற்போது அவர், அடுத்து இளவரசர் ஹரி மற்றும் மேகன் வாழ்வில் நடக்கப்போகும் சில முக்கிய விடயங்கள் குறித்து … Read more

ஜல்லிக்கட்டு வழக்கில் வாதங்கள் முடிந்தது: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா தொடர்ந்த வழக்கில் அனைத்து  தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளன.இந்த வழக்கு  உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் பகுதியாகும் என்றும்,  ஒரு … Read more

மாண்டஸ் புயல் காரணமாக அரியலூர், தஞ்சை மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தஞ்சை: புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாண்டஸ் புயல் காரணமாக அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்; கண்டறிவது எப்படி? #COPD | #VisualStory

breathing மூச்சுக்குழாயில் நீண்ட நாள்களாக அடைப்பு ஏற்பட்டு, சுவாசித்தல் சிரமமாகும் பிரச்னையே `நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்’ (Chronic Obstructive Pulmonary Disease – COPD).   அறிகுறிகள்: ஆரம்பநிலையில் எந்த அறிகுறிகளும் தெரியாது. நோயின் பாதிப்பு முற்றிய நிலையில்தான் அறிகுறிகள் வெளிப்படும். மூச்சு விடுவதில் சிரமம், வீசிங், நெஞ்சில் இறுக்கம்,  நுரையீரலில் அதிக அளவு  சளி சேர்வது, தொண்டையில் அடைப்பு, தொடர் இருமல், வெள்ளை, மஞ்சள் அல்லது இளம் பச்சை நிறத்தில் சளி வருதல். உதடு மற்றும் … Read more

எனக்கு மருத்துவருடன் திருமணம், பின்னர் தொழிலதிபருடன்..மனம் திறந்த நடிகை தமன்னா

திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். 17 ஆண்டுகால சினிமா தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. கடந்த 2005ஆம் ஆண்டு இந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா, அடுத்த ஆண்டே தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை தமன்னா … Read more

இமாச்சலில் காங்கிரஸ் வெற்றி எதிரொலி: பதவியை ராஜினாமா செய்தார் பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அங்கு தோல்வியை சந்தித்த ஆளும் பாஜக அரசின் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 35 இடங்களை பாஜக கைப்பற்றத் தவறியதால், முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற்றது. இந்த வாக்குகள் கடந்த … Read more

நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்

சென்னை: நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பெட்டி, மின்கலங்கள், குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.