விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி நிறுவனம்: சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் சாலை மறியல்!

சேலம்: சேலம் மாவட்டத்தில், விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி நிறுவனம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் ஆட்சியர் அலுவலகம்  விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த கெங்க வல்லி அடுத்த மண்மலை ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு … Read more

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்க விவகாரத்தில் ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை

சென்னை: சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்க விவகாரத்தில் ஒன்றிய அரசு, திருச்சி சுங்கச்சாவடி நிறுவனம் பதில் தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு சுங்கச்சாவடி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கே.காரல் மாக்ஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒன்றிய அரசு, திருச்சி சுங்கச்சாவடி நிறுவனம் பதில் தர உத்தரவிட்டு வழக்கை அக்.27-க்கு ஒத்திவைத்துள்ளனர்.

“நான் வாங்கித்தர பூவையும் சாமி படத்துல தொங்கவிட்ருவா'' |ஜன்னலோரக் கதைகள் – 6

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், புறப்படத் தயாராக நான்காம் நடைமேடையில் நின்றது. பைகளுடன் ஏறிய நானும் என் தோழியும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சீட்டை தேடினோம். வட்டமேசை அமைக்கப்பட்டிருக்கும் நடு சீட் கிடைத்தது. பைகளை லக்கேஜ் வைக்கும் பகுதியின் மேல் வைத்துவிட்டு, ஃபோனை கையில் எடுத்துக்கொண்டேன். அது மூன்று பேர் அமரும் சீட். எதிரெதிரே என்பதால் மொத்தம் ஆறு சீட்டுகள் இருந்தன. எங்களுக்கு எதிர் சீட்டில் இளம் காதல் … Read more

யாத்திரைக்கு 3 நாள் லீவு? ஆந்திராவில் குழந்தையை தோளில் சுமந்து யாத்திரை மேற்கொண்ட ராகுல் – வீடியோ

டெல்லி : ஆந்திராவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, யாத்திரையில் கலந்துகொண்ட குழந்தையை தோளில் சுமந்து கொண்டு யாத்திரை மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கிடையில்,  தீபாவளி பண்டிகை மற்றும் புதிய காங்கிரஸ் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற இருப்பதால், இந்திய ஒற்றுமை பயணத்தில் இருந்து ராகுல்காந்தி 3 நாள் விடுமுறை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல், பாஜகவின் மக்கள் விரோத போக்கு … Read more

தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று உத்தரவிடகோரிய மனுதாரரின் மனுவினை தேனி மாவட்ட ஆட்சியர் பரிசீலினை செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. தேனியை சேர்ந்த சிவகுமார் என்பவர் உயர்நநீதிமன்ற  மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் உத்தரவு அளித்துள்ளது. மனுவை பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

"தயவு செய்து அவரைப்பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்"- பிரசாந்த் கிஷோர் மீது நிதிஷ் குமார் தாக்கு

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார், பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்த பிறகு, நிதிஷ் குமாரை பா.ஜ.க ஒருபக்கம் விமர்சிக்க, மறுபக்கம் தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோரும் அவரை விமர்சித்துவருகிறார். இரண்டு நாள்களுக்கு முன்புகூட, “நிதிஷ் குமார் இன்னும் பா.ஜ.க-வுடன் தொடர்பில் இருக்கிறார். அதற்கான சூழல் வரும்போது மீண்டும் அவர் பா.ஜ.க-வுடன் இணைவார்” என பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். பிரசாந்த் கிஷோர் இந்த நிலையில், பிரசாந்த் கிஷோரின் இத்தகைய பேச்சுக்கு, நிதிஷ் குமாரும் தன்னுடைய பதில் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். பிரசாந்த் கிஷோர் குறித்து செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய நிதிஷ் குமார், … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பணியில் இருந்த 3 தாசில்தார் சஸ்பெண்டு!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பணியில் இருந்த 3 வட்டாட்சியர்களை சஸ்பெண்டு செய்து  மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில்  ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது,  அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் வெளியிடப்பட்டது. இதில் அப்போதைய ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு … Read more

தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தால் ஜாமின் கிடையாது: சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவு

சென்னை: தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்து கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க முடித்து என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஈரோட்டை சேர்ந்த ஆசிப் முஸ்தகீன் என்பவரின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கின் புலன் விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் ஜாமின் வழங்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனியில் சிறுத்தை உயிரிழந்த வழக்கு… ஓபிஎஸ் மகனுக்கு வனத்துறை சம்மன்!

​தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத்-க்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த ​மாதம் ஆண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டது. சிறுத்தை இறந்த விவகாரம் தொடர்பாக தோட்டத்தில் ஆட்டு கிடை அமைத்திருந்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தோட்ட மேலாளர்களான ராஜவேல் மற்றும் தங்கவேல்​ ஆகியோர்​ மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.   பலியான சிறுத்தை சிறுத்தை மரணம்… சிறை வைக்கப்பட்ட அப்பாவி விவசாயி! ​எம்பி மீது வழக்குப்பதிவு செய்யாமல் … Read more