பரங்கிமலை ரயில் நிலையம் மாணவி கொல்லப்பட்ட வழக்கில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் சிபிசிஐடி போலீசாரை அணுகலாம்

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி கொல்லப்பட்ட வழக்கில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் சிபிசிஐடி போலீசாரை அணுகலாம் என்று சிபிசிஐடி போலீசார் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் – 9498142494 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

வெறுப்பு பேச்சுகள் கவலையளிக்கின்றன: உச்சநீதிமன்றம் வேதனை| Dinamalar

புதுடில்லி: ஜனநாயகம் மற்றும் மத நடுநிலை தன்மை கொண்ட நாட்டில் வெறுப்பை தூண்டும் பேச்சுகள் கவலை அளிக்கிறது என உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. ஷாகீன் அப்துல்லா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: இது 21ம் நூற்றாண்டு. மதத்தில் பெயரால் நாம் எங்கு சென்று கொண்டு இருக்கிறோம். ஜனநாயகம் மற்றும் மத நடுநிலை நாட்டில் வெறுப்பை தூண்டும் பேச்சுகள் கவலை அளிக்கின்றன என தெரிவித்த நீதிபதிகள், அத்தகைய குற்றங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அடங்கிய … Read more

25 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள ஹாரிபாட்டர் தொடர்; சிறப்பு நாணயங்களை வெளியிடும் ராயல் மின்ட்!

1997ஆம் ஆண்டு, ஜே.கே.ரெளலிங் எழுதிய, உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் ஹாரிபாட்டர் உருவம் பொறித்த நாணயங்களை ராயல் மின்ட் வெளியிடவுள்ளது. இங்கிலாந்தில் நாணயங்களைத் தயாரிக்கவும், அச்சிடவும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக செயல்பட்டு வரும் ராயல் மின்ட் ஹாரி பாட்டர் உருவம் பொறித்த 50p (pence) நாணயங்களை வெளியிட உள்ளது. இதுகுறித்து பேசிய ராயல் மின்ட் நிறுவனம், “ஹாரிபாட்டர் உருவம் பொறித்த சிறப்பு நாணயங்களில் ஹாரியின் முகம் மட்டுமல்லாது, … Read more

போரிஸ் ஜான்சன் பக்கம் சாயும் முக்கிய அமைச்சர்: பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

44 நாட்களிலேயே  பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக லிஸ் டிரஸ் அறிவித்தார். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பக்கம் நிற்க போவதாக அறிவித்த பிரித்தானிய பாதுகாப்பு துறை அமைச்சர். பிரித்தானிய பிரதமர் போட்டியில் இருந்து தான் விலகுவதாகவும் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தான் ஆதரவு வழங்க இருப்பதாகவும் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ்,  பதவியிலிருந்த 44 நாட்களிலேயே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.  … Read more

விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி நிறுவனம்: சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் சாலை மறியல்!

சேலம்: சேலம் மாவட்டத்தில், விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி நிறுவனம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் ஆட்சியர் அலுவலகம்  விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த கெங்க வல்லி அடுத்த மண்மலை ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு … Read more

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்க விவகாரத்தில் ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை

சென்னை: சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்க விவகாரத்தில் ஒன்றிய அரசு, திருச்சி சுங்கச்சாவடி நிறுவனம் பதில் தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு சுங்கச்சாவடி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கே.காரல் மாக்ஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒன்றிய அரசு, திருச்சி சுங்கச்சாவடி நிறுவனம் பதில் தர உத்தரவிட்டு வழக்கை அக்.27-க்கு ஒத்திவைத்துள்ளனர்.

“நான் வாங்கித்தர பூவையும் சாமி படத்துல தொங்கவிட்ருவா'' |ஜன்னலோரக் கதைகள் – 6

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், புறப்படத் தயாராக நான்காம் நடைமேடையில் நின்றது. பைகளுடன் ஏறிய நானும் என் தோழியும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சீட்டை தேடினோம். வட்டமேசை அமைக்கப்பட்டிருக்கும் நடு சீட் கிடைத்தது. பைகளை லக்கேஜ் வைக்கும் பகுதியின் மேல் வைத்துவிட்டு, ஃபோனை கையில் எடுத்துக்கொண்டேன். அது மூன்று பேர் அமரும் சீட். எதிரெதிரே என்பதால் மொத்தம் ஆறு சீட்டுகள் இருந்தன. எங்களுக்கு எதிர் சீட்டில் இளம் காதல் … Read more

யாத்திரைக்கு 3 நாள் லீவு? ஆந்திராவில் குழந்தையை தோளில் சுமந்து யாத்திரை மேற்கொண்ட ராகுல் – வீடியோ

டெல்லி : ஆந்திராவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, யாத்திரையில் கலந்துகொண்ட குழந்தையை தோளில் சுமந்து கொண்டு யாத்திரை மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கிடையில்,  தீபாவளி பண்டிகை மற்றும் புதிய காங்கிரஸ் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற இருப்பதால், இந்திய ஒற்றுமை பயணத்தில் இருந்து ராகுல்காந்தி 3 நாள் விடுமுறை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல், பாஜகவின் மக்கள் விரோத போக்கு … Read more

தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று உத்தரவிடகோரிய மனுதாரரின் மனுவினை தேனி மாவட்ட ஆட்சியர் பரிசீலினை செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. தேனியை சேர்ந்த சிவகுமார் என்பவர் உயர்நநீதிமன்ற  மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் உத்தரவு அளித்துள்ளது. மனுவை பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.