சகோதரரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் வசிக்கும் இளம்பெண்! விமர்சனங்களுக்கு தந்த பதில்

கனடாவில் வசிக்கும் பிரபலமான இளம்பெண்ணொருவர் மாற்றாந்தாய்க்கு பிறந்த மகனும் தனக்கு சகோதரர் முறை கொண்டவருமான இளைஞரை திருமணம் செய்து கொண்டுள்ளார். கனடாவில் வசிக்கும் தம்பதி இதன் காரணமாக தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 22 வயதான விக்கி பப்பாடகிஸ் என்ற பெண் கிரீஸ் நாட்டை சேர்ந்த பிரபல மொடல் ஆவார். இவருக்கும் மட் கியாட்பிஸ் (22) என்ற இளைஞருக்கும் திருமணம் முடிந்து தம்பதி கனடாவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் விக்கி பப்பாடகிஸ் கடுமையான … Read more

உலகளவில் 63.97 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.97 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.13 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 61.93 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது

சென்னை: சென்னை வேளச்சேரி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சுரங்கப்பாதையை அரிதாக பயன்படுத்துகின்றனர் என போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அனைவரும் ஓட்டளிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்| Dinamalar

சிம்லா: ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு இன்று (நவ.,12) காலை 8 மணிக்கு துவங்கியது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில், 412 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பா.ஜ., ஆட்சியை தக்க வைக்குமா அல்லது காங்கிரஸ் தட்டிப் பறிக்குமா என்பது, அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கும் ஓட்டு எண்ணிக்கையில் தெரிந்து விடும். 55 லட்சத்து, 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் இன்று, தமது ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். தேர்தலையொட்டி 7,884 வாக்கு சாவடிகள் அங்கு … Read more

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் ப்ளீடிங்… ஸ்கேனில் நார்மல்…. கவலைக்குரிய விஷயமா?

Doctor Vikatan: என் சகோதரி ஐவிஎஃப் சிகிச்சை எடுத்து தற்போது 16 வார கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு இரண்டாவது மாதம் தொடங்கி, இப்போதுவரை திட்டுத்திட்டாக ப்ளீடிங் இருப்பதாகச் சொல்கிறார். ஸ்கேன் ரிப்போர்ட்டில் பிரச்னையில்லை என வந்துவிட்டது. ஆனாலும் இதற்கு என்ன காரணமாக இருக்கும்? குழந்தை நன்றாக இருப்பதாக மருத்துவர் சொல்கிறார். ஆனாலும் கவலையாக இருக்கிறது. தங்கள் ஆலோசனை தேவை. – Nandakumar, விகடன் இணையத்திலிருந்து… பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு … Read more

திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.22 கோடி வசூல்

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.22 கோடி வசூல் ஆகியுள்ளது என கோயில் நிர்வாகம் தகவம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி கோயில் வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியலில் இருந்து ரூ.2.22 கோடி பணம், 1,193 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

திண்டுக்கல் டு மதுரை: பிரதமர் மோடியுடன் ஒரே காரில் பயணித்த அண்ணாமலை!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக 36 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்று. இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  பிரதமர் கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திண்டுக்கல் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி தலைமையிலான கட்சியினர் வேடசந்தூரில் வைத்து வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற … Read more

வழக்கு விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவாக இருந்த ரவுடி ஆர்.டி.ஆர். பாலாஜி கைது

சென்னை வழக்கு விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவாக இருந்த ரவுடி ஆர்.டி.ஆர். பாலாஜியை தனிப்படை போலீஸ் கைது செய்தனர். தென்சென்னையைச் சேர்ந்த பிரபல தாதா மயிலாப்பூர் சிவக்குமார் என்பவரை கடந்த 2021-ல் வெட்டிக் கொலை செய்தனர். சிவக்குமார் கொலை வழக்கில் ரவுடி சென்னை ஆர்.டி.ஆர்.பாலாஜியைச் சேர்ந்து 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் உச்ச நீதிமன்றம் அதிருப்தி| Dinamalar

புதுடில்லி : நீதிபதிகள் நியமனத்துக்கான பரிந்துரைகள் மற்றும் உச்ச நீதிமன்ற, ‘கொலீஜியம்’ வலியுறுத்திய பெயர்கள் உள்ளிட்டவைகளை மத்திய அரசு நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருப்பதற்கு, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விபரம்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு அசாதாரணமான தாமத போக்கை கடைப்பிடிக்கிறது. மேலும், உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 11 பெயர்கள் மீதும் முடிவெடுக்காமல் மத்திய அரசு காலம் … Read more

கட்சியினரின் எதிர்பார்ப்பு… தேர்தல் நடக்கும் குஜராத்-க்கு செல்லுமா ராகுலின் ஜோடோ யாத்திரை?!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை தற்போது மகாராஷ்டிராவிற்குள் நுழைந்திருக்கிறது. இந்த யாத்திரை தேர்தலை கருத்தில் கொண்டு திட்டமிடப்படவில்லை. ஆனால் குஜராத், இமாச்சல பிரதேசத்திற்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது. குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைமை இல்லாமல் இருக்கிறது. அதோடு ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கி சூறாவளியாக பிரசாரம் செய்து வருகிறது. ஏற்கனவே டெல்லி, பஞ்சாப்பை காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆம் … Read more