மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி கல்வி! இந்திய சிமென்ட்ஸ் விழாவில் அமித்ஷா..

சென்னை:  மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி கல்வியை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும், ,தமிழகம் மீது பிரதமர் தனிக்கவனம் செலுத்து கிறார் என்றும்,. இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன விழாவில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று நள்ளிரவில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை, மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தொண்டர்கள் … Read more

இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 7,881 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அடுத்த மாதம் 8ம் தேதி குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குகளுடன் எண்ணப்படும். இமாச்சல் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருமா? அல்லது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? என்பது டிசம்பர் 8ம் தேதி தெரிந்துவிடும்.

ICC T20 WC 2022: ஏற்ற இறக்கங்கள் தாண்டி வந்த இரு அணிகள்; பாகிஸ்தான், இங்கிலாந்து கடந்து வந்த பாதை!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் சுற்று, சூப்பர் 12 சுற்று என பல அணிகள் பங்குபெற்ற இந்தத் தொடரில் தற்போது பாகிஸ்தானும் இங்கிலாந்தும் மட்டுமே எஞ்சியுள்ளன. இரு அணிகளும் தங்கள் குரூப்பில் இரண்டாவது இடம்பிடித்த அணிகள்தான். முதலிடம் பிடித்த இந்தியாவும் நியூசிலாந்தும் அரையிறுதியில் தோல்வியைச் சந்தித்து வெளியேறிவிட்டன. இங்கிலாந்து, பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே தங்கள் கடைசி லீக் போட்டியில்தான் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தனர். அவர்கள் கடந்து வந்த பாதை எப்படியிருந்தது? … Read more

காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 57 லட்சம் பேர் பலி… ஆய்வு தகவல்..

லண்டன்: காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 57 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர் கனடாவைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆய்வு தகவல் தெரிவிக் கிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள மாநிலமாக தலைநகர் டெல்லி திகழ்கிறது. காற்று மாசு காரணமாக அங்குள்ள பள்ளிக்குழந்தைகள் சுவாசிப்பதற்கே சிரமப்படுகின்றனர். இதையடுத்து, காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில், உலகம் முழுவதும் ஆண்டுக்கு 57லட்சம் … Read more

மூணாறு பகுதியில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு

மூணாறு: மூணாறு பகுதியில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பதுக்கடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு காரணமாக வட்டவடை சாலையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரிசை திரும்பக்கேட்ட முன்னாள் காதலன்; கூலிப்படை மூலம் தாக்கிய மாணவி – புதிய காதலன் மீதும் வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்த செங்கோடி மாத்தார் பகுதியை சேர்ந்தவர் பிரவின்(22). டிப்ளமோ முடித்து வெல்டராக பணியாற்றும் இவருக்கும் அணைக்கரை பகுதியை சேர்ந்த சேர்ந்த ஜெஸ்லின்(19) என்ற கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஜெஸ்லின் வீட்டில் வெல்டிங் வேலைக்குச் சென்ற அறிமுகத்தால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நெருங்கி பழகிய நிலையில் ஜெஸ்லின் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்கும்படி பிரவினிடம் கூறியுள்ளார். இதையடுத்து பிரவின் தனது பெற்றோர்களுடன் சென்று ஜெஸ்லின் வீட்டில் பெண் கேட்டுள்ளார். இரு … Read more

உலக கோப்பை கால்பந்து திருவிழாவுக்கு தயாரானது கத்தார்… வீடியோ…

22வது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இந்த மாதம் 20 ம் தேதி துவங்குகிறது. கத்தார் தலைநகர் தோகா-வைச் சுற்றி எட்டு கால்பந்து மைதானங்கள் இதற்காக தயார் நிலையில் உள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டேடியங்கள் நட்சத்திர விடுதிகளை மிஞ்சும் அளவுக்கு உள்ளது. 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடர் மொத்தம் 29 நாட்கள் நடைபெறுகிறது. 8 குரூப்பில் தலா நான்கு அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் மொத்தம் 48 லீக் போட்டிகள் நடைபெற … Read more

ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை

மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த 6 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

“முக்கிய தலைவர்கள் கட்சியில் சேர இருக்கிறார்கள்" – மோடி, அமித் ஷா விசிட்-க்குப் பின் அண்ணாமலை

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளச் சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிகழ்ச்சி முடிந்ததும், பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்துக்குச் சென்றார். அங்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த அமித் ஷா, அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அமித் ஷா பின்னர் அங்கிருந்து விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அதையடுத்து அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர், `அமித் ஷா தலைமையில் முக்கியமான ஒருவர் … Read more

மாஞ்சா நூலில் சிக்கி மரத்தில் இருந்து உயிருக்குப் போராடிய காகம்

சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் மாஞ்சா நூலில் சிக்கி மரத்தில் இருந்து காகம் உயிருக்குப் போராடியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள், காகத்தை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து பறக்கவிட்டனர்.