பணியிலிருக்கும் ஆசிரியர்களும் TET தேர்வுக்கு விண்ணப்பம்; இணையதளம் முடங்கியதால் காலஅவகாசம் நீட்டிப்பு

‘ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்’ எனச் செப்டம்பர் 1ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ‘அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லையென்றால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம்’ எனவும் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள் என ஆசிரியர்கள் கூட்டணி சங்கங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றன. இது பணியில் இருக்கும் ஆசிரியர்களிடையே … Read more

பராமரிப்பு பணி: நாளை முதல் 40 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, நாளை (செப் 9 முதல்) முதல் 19-10-2025 வரை  40 நாட்கள் மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக,   சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 09.09.2025 முதல் 19.10.2025 வரை மாற்றம் என தெரிவித்துள்ளது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் … Read more

MG Motor GST Price benefits – ரூ.3.04 லட்சம் வரை எம்ஜி மோட்டார் ஜிஎஸ்டி விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு எதிரொலியாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டாரின் ஆஸ்டர், ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் மற்றும் குளோஸ்டெர் எஸ்யூவிகளின் விலை ரூ.54,000 முதல் ரூ.3,04,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, இந்நிறுவனம் விற்பனை செய்கின்ற எலக்ட்ரிக் கார்களுக்கு வரியில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 5% விதிக்கப்படுகின்றது.  புதியதாக செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி விதிமுறைகள் முன்பாகவே செப்டம்பர் 7 முதலே நடைமுறைக்கு வருவதாக ஜேஎஸ்டபியூ எம்ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ராணிப்பேட்டை: காதலனை தாக்கி, இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 இளைஞர்கள் அட்டூழியம்!

ராணிப்பேட்டையில், பாலாறு – பொன்னை ஆறு சங்கமிக்கும் படுகையையொட்டி, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்திருக்கிறது `நவ்லாக்’ அரசுப் பண்ணை (State Horticulture Farm – Navlock). நவாப் ஆட்சிக்காலத்தில், பழவகைகள் உட்பட 9 லட்சம் பயன் தரும் மரங்களுடன் இந்தப் பண்ணை உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட நவ்லாக் பண்ணை மேல்பண்ணை, நடுப்பண்ணை, கீழ்ப்பண்ணை என மூன்று வகையாகப் பிரித்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், போதிய பாதுகாப்போ, முறையான பராமரிப்போ இல்லாத காரணத்தால், தனது … Read more

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா பயன்படுத்திய ஜெட் விமானம் பாங்காக்கில் தரையிறங்கியதாக தகவல்…

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா பயன்படுத்திய ஜெட் விமானம் பாங்காக்கில் இன்று தரையிறங்கியதாக ‘பைலட் டிராக்கர்’ மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மிகப்பெரிய பணக்காரரும் அரசியல்கட்சித் தலைவருமான தக்சின் ஷினவத்ரா அந்நாட்டின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்து வருகிறார். 2001 முதல் 2006 வரை தாய்லாந்து பிரதமராக பதவி வகித்த அவர் 2007ம் ஆண்டு பியூ தாய் எனும் கட்சியைத் துவங்கினார். ஆட்சியை இழந்த தக்சின் ஷினவத்ரா மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக … Read more

Kia gst price reduction – ஜிஎஸ்டி., ரூ.4.49 லட்சம் வரை விலை குறையும் கியா கார்கள்

இந்தியாவில் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் புதிய ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் கியா நிறுவன கார்களுக்கு ரூ.48,513 முதல் அதிகபட்சமாக ரூ.4,48,542 வரை விலை குறைய உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து நாட்டின் பல்வேறு வாகன தயாரிப்பாளர்களும் விலை குறைப்பு தொடர்பாக அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில், கியா சொனெட் மாடலுக்கு ரூ.1,64,471 வரையும், செல்டோஸ் மாடலுக்கு ரூ.75,372 வரை அதிகபட்ச விலை குறைக்கப்பட உள்ளது. கூடுதலாக இந்நிறுவனத்தின் பிரீமியம் எம்பிவி கார்னிவல் … Read more

England: இந்திய உணவகத்தில் பில் செலுத்தாமல் சென்ற குடும்பங்கள்; புலம்பும் உரிமையாளர் – என்ன நடந்தது?

இங்கிலாந்தில் உள்ள ஒரு இந்திய உணவகத்தில் சாப்பிட்ட பிறகு தங்களது கட்டணங்களை செலுத்தாமல் சில குடும்பங்கள் சென்றுள்ளன. இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள சாய் சுர்பி உணவகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் ராமன் கவுர் மற்றும் நரிந்தர் சிங் அத்வா ஆகியோர் தங்களது அனுபவங்கள் குறித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில் செலுத்தப்படாத பில்லின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தன. அவர்கள் சாப்பிட்ட உணவின் மொத்த பில்லின் தொகை £200 (இந்திய ரூபாய்க்கு … Read more

செப்டம்பர் 15 ஆம் தேதி சிங்கப்பூர் முழுவதும் சைரன்கள் ஒலிக்கும்… பொது எச்சரிக்கை ஒத்திகை நடத்தப்படும் என SCDF அறிவிப்பு

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு நாடு முழுவதும் உள்ள பொது எச்சரிக்கை அமைப்பு (PWS) மூலம் “முக்கியமான செய்தி” சிக்னலை ஒலிக்க இருக்கிறது. ஒரு நிமிடம் நீடிக்கும் இந்த ஒலிப்பதிவால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று SCDF அதன் வலைத்தளத்தில் அறிவுறுத்தியுள்ளது. SGSecure மொபைல் செயலியுடன் கூடிய அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 20 வினாடிகள் சிக்னல் அணைக்கப்படும் என்றும் செயலி மூலம் அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் … Read more

Nissan Magnite GST Price cut – ஜிஎஸ்டி குறைப்பு.., ரூ.1 லட்சம் வரை நிசான் மேக்னைட் விலை குறைப்பு

இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பின் காரணமாக மேக்னைட் எஸ்யூவி விலை ரூ.52,400 முதல் அதிகபட்சமாக டாப் வேரியண்டிற்கு ரூ.1,00,400 வரை குறைந்துள்ளது. முன்பாக ரெனால்ட் உட்பட மஹிந்திரா, எம்ஜி, டொயோட்டா, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் என பெரும்பாலான நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்துள்ளது. தற்பொழுது கார்களுக்கு 18 % மற்றும் 40 % என இரு பிரிவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு குறைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி மிகப்பெரிய அளவில் விற்பனையை … Read more

Vikatan Play: 'நான் ஒரு ரசிகன்' முதல் 'இருமுடிச்சோழன்' வரை; ஆகஸ்ட் மாத Top 5 Audio Books

பொதுவாக மற்றைய ஆயுதங்களை விட மனிதர்களை, அவர்களின் நுண்ணுணர்வுகளை ஆழமாக ஊடுருவக்கூடிய ஆயுதமாக புத்தகங்களே இருக்கின்றன. வாசிப்பு எப்படி நமக்கு இன்பம் கொடுக்கிறதோ அதைப்போல் நமக்குக் கிடைக்கிற சின்ன சின்ன நேரங்களையும் பயனுள்ளதாக ஆடியோ வடிவில் கேட்டுப் பயன்பெறுவதை நம் மனதை இன்னும் சுவாரசியமாக்குகிறது. அப்படி இந்த ஆகஸ்ட் மாதத்தில் உங்களைச் சுவாரசியமாக்கி விகடன் பிளேயில் அதிகம் கேட்கப்பட்ட 5 ஆடியோ புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். நான் ஒரு ரசிகன் நான் ஒரு ரசிகன் : ஆனந்த … Read more