விடுதலை செய்யப்பட்ட 4 இலங்கை குற்றவாளிகளும் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்! ஆட்சியர் தகவல்…

திருச்சி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குற்றவாளிகளில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் எங்கு செல்வார்கள் என்பது கேள்விக்குறியானது. இந்த நிலையில், விடுதலை செய்யப்பட்ட 4 பேர் சொந்த நாடான இலங்கை அனுப்பப்படுவர் என்று இன்று திருச்சி சிறப்பு முகாமில் ஆய்வு செய்த  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மறைங்நதராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் 7 பேரில் ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட … Read more

மாணவி ஸ்ரீமதியின் செல்போனை ஒப்படைக்க பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை பெற்றோர் விசாரணைக்கு ஒப்படைக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நியாயமான விசாரணை நடைபெற மாணவி ஸ்ரீமதியின் செல்போனை ஒப்படைக்க பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் செல்போன் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அதனை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போக்சோ சட்டம்: சிறார்கள் சம்மதத்துடன் உறவு கொள்வதை குற்றமாக கருத முடியாது – டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு!

புதுடெல்லி, 17 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கில், கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டமாகும். 18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். டெல்லியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அவள் குடும்பத்தால் ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.ஆனால் சிறுமி … Read more

“பல விபத்துகளைத் தாண்டிதான் சினிமாவுக்கே வந்தேன்!" – `புதிய பாதை' பார்த்திபன் @ 1989

ஒரு சினிமா நிஜமான கதை! பொறந்ததுலேருந்து ஒரு குழந்தை படுத்து. புரண்டு, குப்புற விழுந்து நெத்தியில அடிபட்டு, சுவத்தைப் புடிச்சு எழுந்து, ரெண்டு கையையும் விட்டுட்டு, எந்தப் புடிப்புமே இல்லாம சுத்தியிருக்கறவங்களை மிரண்டு மிரண்டு பாக்குமே… அந்த மாதிரியான மனநிலையிலதான் இப்போ நான் இருக்கேன். இது ஒண்ணும் ஒரு பெரிய சாதனையாளனோட ஃபிளாஷ்பேக் இல்லை! ‘திரும்பிப் பார்க்கிறேன்’ – `பின்னோக்கிச் செல்கிறேன்’ – மாதிரியான பெரிய விஷயமும் இல்லை. ஆனாலும் இதை நான் சொல்ல ஆசைப் படறத்துக்கு … Read more

கண்ணீருடன் கணவர் முருகனை தேடி வந்து நலம் விசாரித்த நளினி! தொடரும் பிரிவு

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள கணவர் முருகனை சந்தித்து நளினி கண்ணீருடன் அவரிடம் நலம் விசாரித்துள்ளார். முகாமில் உண்ணாவிரதம் அப்போது, அவரது கணவர் உள்ளிட்ட நால்வரும் முகாமில் தங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டி உண்ணாவிரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முகாமிற்கு நேரடியாக வருகை தந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார். ஆட்சியரிடம் நளினி கோரிக்கை அப்போது … Read more

மழைநீர் தேங்கவில்லை என்பது பொய்: சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

சென்னை: ஆலந்தூர் பகுதியில் மழைநீர் வடியாத பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது, சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்பது பொய் என திமுக அரசு மீது குற்றம் சாட்டினார். வடகிழக்கு பருவமழையையொட்டி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதி கனமழை பெய்து ஓய்ந்த நிலையில் இன்னும் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து வருகிறது. கனமழை பெய்த காரணத்தால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. … Read more

மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 170 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 170 புள்ளிகள் சரிந்து 61,624 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 20 புள்ளிகள் குறைந்து 18,329  புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் கட்டாய மதமாற்றம்; 10 பேர் மீது பாய்ந்தது வழக்கு

தமோ, மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் உள்ள அனாதை இல்லங்கள் மற்றும் கிறிஸ்தவ மிசனெரிகளால் நடத்தப்படும் குழந்தைகளின் காப்பகம் ஆகியவற்றிற்கு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் தலைவர் பிரியங் கனூங்கோ நேற்றிரவு திடீர் ஆய்வுக்காக சென்றுள்ளார். அவரது வருகை பற்றி மாவட்ட அதிகாரிகளுக்கு மட்டும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. அவருடன் மத்திய பிரதேச மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் உறுப்பினர் ஓம்கார் சிங் மக்ராம் மற்றும் உயரதிகாரிகள் பலர் சென்றுள்ளனர். இந்த ஆய்வில், கிறிஸ்தவ … Read more

சென்னை: வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வியாபாரி – சொத்துப் பிரச்னையால் நடந்த பயங்கரம்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். அவர் இந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். பொன்ராஜின் உறவினரான அந்தோணிராஜ் சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் நீண்ட நாள்களாகவே சொத்து பிரச்னை இருந்துவந்துள்ளது. உறவினர்களான இவர்கள் சமீபத்தில்தான் சொந்த ஊருக்குச் சென்று வந்துள்ளனர். அந்தோணிராஜ், பொன்ராஜ் இரண்டு தினங்களுக்கு முன்பு பொன்ராஜ், சென்னை திரும்பியுள்ள நிலையில், அந்தோணிராஜும் சென்னை வந்துள்ளார். சென்னை வந்தவர், பொன்ராஜின் வீட்டுக்குச் சென்று சொத்து பிரச்னை விவகாரம் … Read more

டிசம்பர் 13ந்தேதி மாநிலம் முழுவதும் தர்ணா! தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்சங்கம் அறிவிப்பு…

சென்னை: டிசம்பர் 13ந்தேதி மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்படும்என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்து உள்ளது. தமிழகஅரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஒய்வூதியம் பணப்பலன் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக போராட்டம் அறிக்கப்படுவதும், பின்னர் பேச்சுவார்த்தை நடைபெறுவதும் வாடிக்கையாகி வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சில கோரிக்கைகள் ஏற்க மறுத்ததால் மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர், அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை … Read more