தேனி: வேகமெடுக்கும் நீட் ​தேர்வு​ ஆள்மாறாட்ட வழக்கு​…​ ​மேலும் ​3 இடைத்தரகர்கள்​ கைது!

​தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2019-ம் ஆண்டு முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த சென்னையைச்​ சேர்ந்த மாணவர் உதித்​ ​சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த​தாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேனி சிபிசிஐடி போலீ​ஸார்​ முதற்கட்டமாக மாணவர் உதித் சூர்யா அவரின் தந்தை வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர்.  கைதானவர்கள் ​இதையடுத்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் இதேபோன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக மருத்துவ மாணவர்கள் பிரவீன், ராகுல், இர்பான், மாணவி – … Read more

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு: 2 பொலிஸார் உட்பட 6 பேர் மரணம்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 26 வயதான Rachel McCrow மற்றும் 29 வயதான Matthew Arnold என அடையாளம் காணப்பட்ட இரண்டு கான்ஸ்டபிள்கள், Wiembilla என்ற சிறிய நகரத்தில் உள்ள ஒரு வீட்டில், காணாமல் போன நபர் தொடர்பான விசாரணைக்காக சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்டனர். பின்னர், அதே இடத்தில் மூன்று சந்தேக நபர்கள் கொல்லப்பட்டதாக குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்தனர். பொலிசார் … Read more

கர்நாடகாவில் சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

பெங்களூரூ: கர்நாடகாவில் சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கர்நாடாகாவில் முதல் முறையாக 5 வயது சிறுமிக்கு கிகா வைரஸ் தோற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் தொடரை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

ஈரோடு அருகே பால் பொருள் பண்ணையில் பாய்லர் வெடித்து தொழிலாளி பலி

ஈரோடு: சோலார் அருகே தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு பண்ணையில் பாய்லர் வெடித்து தொழிலாளி பலியானார். அதிகாலையில் பாய்லர் வெடித்ததில் தொழிலாளி ராமன் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கள்ளக்குறிச்சி: கனமழை எதிரொலியால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று(டிச.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கனமழை காரணமாக தமிழகத்தின் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகது.

விழுப்புரம் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மையை அறிய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து 5 நாட்கள் பள்ளிகளுக்கு  விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இன்று பள்ளிகளுக்கு சென்று கட்டிடத்தின் நிலைத்தன்மை, வளாக தூய்மை, கழிப்பிட வசதி குறித்து சோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

உக்ரைன் போரை புடின் முடித்துக்கொண்டால், அதற்கு வாய்ப்பு உண்டு: ஜேர்மன் சான்செலர்

புடின் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்தால் ரஷ்யா ஜேர்மனியுடனான வர்த்தகத்தை மீண்டும் தொடங்கலாம் என ஜேர்மன் சான்செலர் கூறியுள்ளார். உக்ரைனில் ரஷ்யா அதன் போரை முடிவுக்குக் கொண்டுவந்தால், ஜேர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மீண்டும் சாத்தியமாகும் என்று ஜேர்மன் சான்செலர்ஓலாஃப் ஷோல்ஸ் திங்களன்று கூறினார். உக்ரைனில் இருந்து மாஸ்கோ தனது துருப்புக்களை வாபஸ் பெற்று, கீவுடன் சமாதான உடன்படிக்கையை எட்டாத வரை, உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்பிற்கு பதிலடியாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளை மேற்கு … Read more

4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தமிழகத்தின் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,659,638 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.59 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,659,638 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 654,036,946 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 629,493,559 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,536 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வார ராசிபலன்: டிசம்பர் 13 முதல் 18 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link