Rashmika: "அப்போது அவர் உடைந்து போய் அழுதுகொண்டிருந்தார்" – ராஷ்மிகா குறித்து ராகுல் ரவீந்திரன்

இயக்குநர் மற்றும் நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், ராஷ்மிகா நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘தி கேர்ள்ஃப்ரெண்ட்’. ஆணாதிக்க சிந்தனை நிறைந்த உலகத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண்ணின் போராட்டங்களை அப்படம் பேசுகிறது. பார்வையாளர்களிடம் அப்படம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. The Girlfriend சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பு இயக்குநர்களின் ரவுண்ட்டேபிள் நேர்காணலை நடத்தியிருந்தது. அதில் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் ‘தி கேர்ள்ஃப்ரெண்ட்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான காட்சியைப் படம்பிடித்த விதம் குறித்து … Read more

கர்நாடகா: "நானே முதல்வராகத் தொடர்வேன்" – சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?

மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பின்னர் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில், இருவரும் மாறி மாறி மற்றவரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தினர். சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். சித்தராமையா, டி.கே.சிவகுமார் கூட்டாகப் பேசும்போது, இருவரும் காங்கிரஸ் மேலிடம் சொல்வதைக் கேட்கப்போவதாகவும் கூறினார்கள். இந்த நிலையில், சித்தராமையாவின் வார்த்தைகளால், மீண்டும் இருவருக்கும் இடையே மோதல் … Read more

விருதுநகர்: அறுவடை காலத்தில் தொடரும் அவதி; அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், கான்சாபுரம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. சுமார் 6,500 ஏக்கரில் நெல் விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது நெல் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், சில பகுதிகளில் கோடை நெல் அறுவடைப் பணிகளை விவசாயிகள் … Read more

பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' – மீண்டும்‌ சர்ச்சை

இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். அங்கே பட்டம் வாங்க வந்த முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பைப் பிடித்து இழுக்க முயன்றார். இது பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியது. ‘நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும்’ என்று காங்கிரஸ் கண்டனக் குரல் எழுப்பியது. ‘நிதிஷ் குமார் மனநிலை நல்ல நிலையில் இருக்கிறதா?’ என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியது. பட்டமளிப்பு விழா புகைப்படங்களில் ஒன்று ‘நிதிஷின் மனநலம் … Read more

நெல்லை: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா; முதல்வர் பங்கேற்பு | Photo Album

திருநெல்வேலி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் விழா.! “GSDP 16% வளர்ச்சியை ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில்தான் தமிழ்நாடு பெற்றுள்ளது” – தங்கம் தென்னரசு Source link

காட்டில் விறகு சேகரிக்க சென்ற முதியவரை அடித்துக்கொன்ற புலி

திருவனந்தபுரம், கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வண்டிக்கடவு பகுதியை சேர்ந்த முதியவர் மாறன் (வயது 60). இவர் தனது சகோதரியுடன் கேரள-கர்நாடக எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதிக்கு இன்று காலை விறகு சேகரிக்க சென்றுள்ளார். கன்னரும்புலா ஆறு அருகே விறகு சேகரித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த புலி, மாறனை இழுத்து சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த மாறனின் சகோதரி கிராமத்திற்கு விரைந்து சென்று புலி தாக்கியது குறித்து கூறியுள்ளார். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர், புலி … Read more

ஸ்ரீநிவாசன் மறைவு: `தனிப்பட்ட வகையில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது'- கேரள முதல்வர் பினராயி விஜயன்

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநிவாசன் (69) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். எர்ணாகுளம் மாவட்டம், உதயம்பேரூரில் உள்ள வீட்டில் தங்கியிருந்த அவர் உடல் உபாதைகளுக்காக சிகிச்சை பெற்றுவந்தார். டயாலிசிஸ்-க்காக அழைத்துச் சென்ற சமயத்தில் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, திருப்பூணித்துறை அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் மரணமடைந்தார். அவரின் உடல் கொச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதிச்சடங்கு நாளை (டிச.21) காலை 10 மணிக்கு அரசு மரியாதையுடன் எர்ணாகுளத்தில் நடைபெற உள்ளது. நடிகர் ஸ்ரீநிவாசன் மறைவுக்கு … Read more

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து புதுமண தம்பதி பலி

ஐதராபாத், ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் கருகுபில்லி பகுதியை சேர்ந்தவர் சிம்மாசலம் ( வயது25). இவரது மனைவி பவானி (வயது19). இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். சிம்மாசலம், ஜகத்கிரி குட்டாவில் தங்கி இருந்து ரசாயன தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக செகந்திராபாத்தில் இருந்து மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். கணவன், மனைவி இருவரும் ரெயிலின் வாசல் அருகே நின்றுகொண்டு … Read more