BB Tamil 9 Day 75: அலப்பறை செய்த சான்ட்ரா; பாருவை வென்ற திவ்யா – 75வது நாளில் நடந்தது என்ன?

ரயில் பயணங்களில் பக்கத்து இருக்கைக்காரரிடம் சில மணி நேரங்கள் பழகி விட்டாலே நமக்கு முகதாட்சண்யம் ஏற்பட்டு விடுகிறது. அவருடைய தவறுகளை சகித்துக் கொள்கிறோம்.  ஆனால் பிக் பாஸ் வீட்டில் பல நாட்கள் பழகிய ஒருவருடன், ஒரு சிறிய பிரச்னைக்காக பரம்பரை விரோதி மாதிரி எப்படி சண்டை போட முடிகிறது என்று தெரியவில்லை. கவனத்தை ஈர்க்கவா, கேம் ஸ்ட்ராட்டஜியா, அந்த வீடு அப்படி ஆக்கி விடுமா என்பதும் புரியவில்லை.  BB TAMIL 9 Day 75 நாள் 75பிக் … Read more

முதலமைச்சரின் உழைப்பால் வெற்றி மேல் வெற்றி காண்கிறது தமிழ்நாடு! அரசு பெருமிதம்

சென்னை: முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கடும் உழைப்பால் வெற்றி மேல் வெற்றி காண்கிறது தமிழ்நாடு என அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கடும் உழைப்பால் தமிழ்நாடு வெற்றி மேல் வெற்றி காண்கிறது என தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அறிவுசார் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னணி மாநிலம் தமிழ்நாடு. தொழில் வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய காப்புரிமைப் பதிவுகளில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. மற்ற மாநிலங்களைவிட 23% வளர்ச்சி கண்டு … Read more

சூதாட்ட செயலி விளம்பரம்: யுவராஜ் சிங், உத்தப்பா, நடிகர் சோனுசூட்டின் ரூ.7.93 கோடி சொத்து பறிமுதல்

கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டவிரோத சூதாட்ட செயலி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த மொபைல் செயலி மூலம் சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதில் வரக்கூடிய வருமானத்திற்கு முறையாக கணக்கு காட்டுவது கிடையாது. இந்த சட்டவிரோத மொபைல் செயலிகளுக்கு எதிராக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 1xBet என்ற சட்டவிரோத கிரிக்கெட் சூதாட்ட மொபைல் செயலியை விளம்பரப்படுத்துவதில் கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் ஈடுபட்டனர். இதன் மூலம் 1xBet மொபைல் செயலி இந்தியாவில் சட்டவிரோதமாக … Read more

சென்னையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர் தற்கொலை! அன்புமணி கண்டனம்

சென்னை: சென்னையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ரவிகுமார் என்ற தூய்மை பணியாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது மற்ற தூய்மை பணியாளர்கள் பத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,  தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளியிருப்பதை மன்னிக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்த்துள்ளதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர்.  தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட … Read more

நாஞ்சில் சம்பத்: `வேறு ஏதாவது இருக்குமானு தெரிஞ்சுக்கணுமா?' – ஈரோடு பரப்புரையில் பங்கேற்காதது ஏன்?

ஈரோட்டில் நடந்த தவெக-வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அந்தக் கட்சியில் புதிதாகச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கலந்து கொள்ளாதது குறித்து சமூக ஊடகங்களில் பலவிதமான தகவல்கள் உலா வருகின்றன. ‘கட்சியில் பரப்புரைச் செயலாளரா நியமிக்கப் பட்டார். இந்தக் கூட்டம் பரப்புரைக் கூட்டம் தானே? ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண் ராஜ் எல்லாரும் பேசினாங்க. கொங்கு ஏரியாவுல இருந்து கட்சிக்கு வந்தாலயும் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததுல முக்கியப் பங்கு வகித்ததாலயும் செங்கோட்டையனும் வேனில் நின்னு … Read more

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை! ஆளுநர் ஆர்.என்.ரவி அதிர்ச்சி தகவல்

கோவை: தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை,  இதன்மூலம்  ‘தற்கொலைகளின் தலைநகரமாக  தமிழகம் திகழ்கிறது என தமிழ்நடு ஆளுநர் ஆர்.என்.ரவி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார். கோவை மாவட்டம் துடியலுார் அருகே கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில் நடைபெற்ற கருத்தரங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய கவர்னர் ரவி,   ”தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டிலேயே தற்கொலைகளின் தலைநகரமாக தமிழகம் உள்ளது,” என கூறினார். சென்னை தென்னிந்திய ஆய்வுகள் மையத்துடன் இணைந்து கோயம்புத்தூரில் … Read more

மதுரை மடப்புரம் காளியம்மன் : நோய் நீக்கும் தலம்… பொய்சாட்சி சொல்பவர்களை தண்டிக்கும் சத்தியக்கல்!

கலியுகத்தில் பக்தர்களுக்கு அற்புதம் நிகழ்த்தி அருள் செய்யும் அம்மன் தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று மதுரை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில். தேவாரத் திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது இந்தத் தலம். மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்ட சக்திகள் மிரண்டு ஓடும் என்பார்கள். அந்த அளவுக்கு ஆங்கார காளியாகவும் கருணை பொழிவதில் காக்கும் அன்னையாகவும் திகழ்கிறாள் மடப்புரம் காளி. மதுரை மடப்புரம் காளியம்மன் கோயில் இங்கு அம்மனின் தோற்றம் மிகவும் … Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள்!

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத வாக்காளர்கள்,  புதிய வாக்காளர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காக வரும் டிசம்பர் 20, 21 ஆகிய நாட்களில் மாநிலம் முழுவதும் உள்ள  அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்கள்  இன்றும், நாளையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட … Read more

பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

சென்னை : சுத்தமான, பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டது. இது தொடர்பாக  சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்ட செய்தியில், “பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் 21.05.2025 அன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் பிரிவு 5-ன்படி, பொதுப் பாதுகாப்பையும் நகரத் தூய்மையையும் உறுதி செய்வதற்காக உயர் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள அனைத்து கட்டுமானப் பொருட்கள், … Read more

மது வாங்க ரூ. 10 தராததால் முதியவரை குத்திக்கொன்ற சிறுவன் – அதிர்ச்சி சம்பவம்

அமராவதி, ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த முதியவர் டாடாஜி (வயது 50). இவர் இன்று அப்பகுதியில் உள்ள மதுக்கடை அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் வந்த 17 வயது சிறுவன் மது வாங்க ரூ. 10 தருமாறு டாடாஜியிடம் கேட்டுள்ளான். சிறுவன் கேட்ட ரூ. 10 கொடுக்க டாடாஜி மறுத்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் போதையில் இருந்த சிறுவன் தான் வைத்திருந்த கத்தியால் டாடாஜியை சரமாரியாக குத்தியுள்ளான். இந்த … Read more