"நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாலும்…" – இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடும் புவனேஷ்வர்

இந்திய அணியில் ரெட் பால், ஒயிட் பால் என இரண்டிலும் சிறந்த ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க இரண்டாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார். கடைசியாக 2022 நவம்பரில் நியூசிலாந்துக்கெதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் ஆடியிருந்தார். கடந்த ஐ.பி.எல் சீசனில் ஆர்.சி.பி அணியில் 17 விக்கெட்டுகள் வீழ்த்திய புவனேஷ்வர் குமார், 18 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக ஆர்.சி.பி கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றினார். புவனேஷ்வர் குமார் தற்போது, உத்தரப்பிரதேச டி20 … Read more

ஒசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோடு அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்….

ஓசூர்: தொழில்நகரமான ஒசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோட அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி,   ஒசூர் புதிய பேருந்து நிலையம் அருகே துவங்கி ஜெனாபெண்டா வரை 6 கி.மீ. தூரத்துக்கு ரிங் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.138 கோடியில் ரிங் ரோடு அமைக்க நெடுஞ்சாலைத் துறை கருத்துரு தயார் செய்து ஆட்சியருக்கு அனுப்பி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 44ல் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஓசூர் அவுட்டர் … Read more

ADAS பாதுகாப்புடன் டாடா நெக்ஸான்.இவி விற்பனைக்கு அறிமுகமா.?

டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற நெக்ஸான்.இவி காரில் கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளில் தற்பொழுது பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முக்கியத்துவம் கொடுத்து வரும் லெவல்-2 ADAS அம்சத்தை பெற உள்ளது. சந்தையில் நெக்ஸான்.இவி அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் 45kWh மற்றும் 30kWh என இரு விதமான பேட்டரியை பெற்றுள்ளது. தற்பொழுது டாப் வேரியண்ட் Empowered+ விற்பனையில் உள்ள நிலையில் கூடுலாக ADAS பெறுவதனால் Empowered+ A என்ற வேரியண்ட் பெறக்கூடும். குறிப்பாக கர்வ்.இவி காரில் உள்ளதை போன்றே … Read more

யாரெல்லாம் வெளியிடங்களில், புதுநபரோட செக்ஸ் பண்ணக்கூடாது! | காமத்துக்கு மரியாதை – 256

”வீடு தாண்டி வெளியிடங்களில், புதுநபர்களோட செக்ஸ் வைத்துக்கொள்வது சகஜமாகிக்கொண்டே இருக்கிறது. இதெல்லாம் இப்போதுதான் இருக்கிறதா என்றால், இது எல்லா காலத்திலும் இருந்ததுதான். ஆனால், பார்ட்டி, மது, போதை, பாதுகாப்பில்லாமல் புதுநபர்களுடன் செக்ஸ் என இப்போது அதிகரித்திருக்கிறதை அனுபவத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். செக்ஸ் புதுநபர்களுடன் ஏன் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது? ‘ஒரு த்ரில்லுக்காக, ஒரு சேஞ்சுக்காக புது இடத்துல புது நபரோட செக்ஸ் வெச்சுக்கிட்டேன் டாக்டர். எனக்கு ஏதாவது பால்வினை நோய் வந்திடுமா’ என அச்சப்படுபவர்கள் ஒருபக்கம்… இன்னொருபக்கம் தாம்பத்திய வாழ்க்கை … Read more

சிப்கள் ‘டிஜிட்டல் வைரங்கள்’: இந்தியாவில் தயாரிக்கப்படும் ‘சிப்’ உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி திட்டவட்டம்

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார். சிப் சிறியதாக இருக்கலாம். ஆனால் உலகின் முன்னேற்றத்துக்கு தேவையான சக்தியை அது கொண்டுள்ளது. கடந்த நூற்றாண்டை எண்ணெய் தீர்மானித்தது. அடுத்துவரும் நூற்றாண்டை சிப் தீர்மானிக்கப்போகிறது. எண்ணெய் கருப்பு தங்கம் என அழைக்கப்படுகிறது. அதே நேரம் இந்த சிப்கள் டிஜிட்டல் வைரங்கள் என அழைக்கப்படும். சீர் திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தை … Read more

ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

மேக்ஸி ஸ்டைல் பெற்ற அட்வென்ச்சருக்கு ஏற்ற ஜூம் 160 ஸ்கூட்டர் ஜனவரி 2025ல் விலை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது முன்பதிவு நடைபெற்று வருவதனால் விநியோகம் நடப்பு செப்டம்பரில் துவங்க உள்ளதாக தனது சமூக ஊடகப்பக்கங்களில் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஜூம் 160 ஆனது பிரீமியா ஹீரோ டீலர்களில் மட்டுமே கிடைக்கும் என்பதனால் முக்கிய நகரங்களில் மட்டுமே முதற்கட்டமாக டெலிவரி வழங்கப்பட உள்ளது. ஏரோக்ஸ் 155 மற்றும் வரவிருக்கும் என்டார்க் 150 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்ற ஜூம் 160ல் லிக்யூடு கூல்டு … Read more

Gold Loan: தங்கம் விலை மட்டுமல்ல, தங்க நகை அடமானக் கடனும் எகிறுதுங்கோ! என்னதான் காரணம்?

தங்கம் விலை ஒருபக்கம் கிடுகிடுவென உயர்ந்துகொண்டிருக்க, மக்கள் மேலும் மேலும் தங்கத்தை வாங்கிக் குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். தங்கம் விலை என்றைக்கு அபாரமாக உயர்கிறதோ, அன்றைக்கெல்லாம் தங்க நகைக் கடைகளில் அதிகமான கூட்டத்தையே பார்க்க முடிகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மக்கள் தங்களிடம் இருக்கும் நகையை வங்கிகள், வங்கி அல்லாத நிறுவனங்களில் அடமானம் வைத்து பணம் பெறுவதும் ஏகத்துக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் தங்கத்தை அடமானமாக வைத்துப் பணம் பெறுவது 122% அதிகரித்திருக்கிறது. தங்க … Read more

சிகரத்தை நோக்கி… தங்கத்தின் விலை! சவரன் ரூ.78ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தங்கத்தின் விலை இன்று புதிய உச்சமாக பவுன் ரூ.78,000-ஐ கடந்துள்ளது. இது சாமானிய மக்களின் வயிற்றில் இடியை இறக்கி உள்ளது.  நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை சிகரத்தை நோக்கி பறந்துகொண்டிருக்கிறருது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு பவுனுக்கு ரூ.640 உயர்ந்து  ஒரு சவரன் தங்கம்  ரூ.78,440–ஐ கடந்துள்ளது. இது  நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய மக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்​வ​தேச பொருளா​தார சூழல், … Read more

BNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசுகி விக்டோரிஸ்

இன்றைக்கு சந்தைக்கு வந்துள்ள மாருதி சுசுகியின் புதிய விக்டோரிஸ் எஸ்யூவி மாடலை BNCAP சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் முதல் மாருதி மாடலாக ADAS பாதுகாப்புடன் குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் என இருவர் பாதுகாப்பிலும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. குறிப்பாக விக்டோரிஸின் சோதனை முடிவுகளில் பெரியவர்கள் பாதுகாப்பில் 32-ல் 31.66 புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49-ல் 43.00 புள்ளிகளையும் பெற்றுள்ளது. மாருதியின் அரினா டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள விக்டோரிஸில் 6 ஏர்பேக்குகளை பெற்று … Read more

US: வரி முதல் வழக்கு வரை ட்ரம்ப் அதிரடியால் அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடுகிறதா?

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, அமெரிக்காவில் ‘தொழிலாளர் தினம்’ கொண்டாடப்பட்டது. இதனால், அன்று அமெரிக்காவில் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. ஆக, நேற்று தான் அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்தின் முதல் வர்த்தக நாள் நடைபெற்றது. இந்த நிலையில், முதல்நாளிலேயே அமெரிக்க பங்குச் சந்தை கிட்டத்தட்ட 250 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது இதற்கான காரணத்தை விளக்குகிறார் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் “அமெரிக்க பங்குச்சந்தையின் இந்தத் தள்ளாட்டம் நான்கு காரணிகளைப் பொறுத்து … Read more