விமானப்படை வீரர் தற்கொலை அதிகாரிகள் மீது கொலை வழக்கு| Dinamalar

பெங்களூரூ : விமானப்படை பயிற்சி வீரர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஆறு அதிகாரிகள் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுடில்லி உத்தம்நகரை சேர்ந்தவர் அங்கிங் குமார் ஜா, 27. விமானப்படைக்கு தேர்வான இவர், கர்நாடகமாநிலம் பெங்களூரூ விமானப் படை பயிற்சி கல்லுாரியில் பயிற்சி வீரராக இருந்தார்.கடந்த 21ம் தேதி விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் ஏழு பக்க கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், உயர் அதிகாரிகள் ஆறு பேர் … Read more

கேரளா: சட்டம், ஒழுங்கை காப்பாற்ற பினராயி விஜயன் அரசு தவறி விட்டது – ஜே.பி.நட்டா கடும் தாக்கு

கோட்டயம், கேரள மாநிலம் கோட்டயத்தில் அவாஸ் யோஜனா திட்ட நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் அவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா மற்றும் கிசான் யோஜனா போன்ற பல்வேறு திட்டங்கள் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் நாடு முழுவதும் கோடி கணக்கான மக்கள் பயனடைந்து உள்ளனர். கேரளாவில் ஆட்சியில் உள்ள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு … Read more

உள்நாட்டு வழித்தடங்களை விரிவுபடுத்தும் ஆகாசா.. மேலும் 2 நகரங்களுக்கு சேவை!

சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனம் குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை தலைமையிடமாக கொண்ட ஆகாசா நிறுவனம் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மும்பையில் இருந்து அகமதாபாத் வரை தனது முதல் விமான சேவையை தொடங்கிய ஆகாச விமானம் தற்போது படிப்படியாக தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இரண்டு … Read more

செப்டம்பர் 26: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 128-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 128-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,540,297 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.40 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,540,297 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 620,237,082 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 600,269,819 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,976 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஐகோர்ட் பதிவாளருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்| Dinamalar

புதுடில்லி : சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட உத்தரவை மாற்றி, மீண்டும் பதிவேற்றம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்கும்படி, நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது. நிதி பரிமாற்றம் தொடர்பான ஒரு வழக்கை சமீபத்தில் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘ஸ்மைல் மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம், 111 கோடி ரூபாயை நிரந்தர வைப்புத் தொகையாக டிபாசிட் செய்ய வேண்டும் என்றும், அடுத்த உத்தரவு … Read more

எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், காஷ்மீரில் குப்வாரா மாவட்டம் மசில் செக்டார் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக நேற்று அதிகாலையில் 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். சரியான நேரத்தில் அதை கவனித்து விட்ட ராணுவ வீரர்களும், போலீசாரும் அந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகளும் திருப்பி சுட்டதால், கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகளும் பலியானார்கள். இதன் மூலம், ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. … Read more

இதை செய்தால் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு.. Zerodha சி.இ.ஓவின் போனஸ் அறிவிப்பு!

இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டாக் டிரேடிங் நிறுவனங்களில் ஒன்றான Zerodha, நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் சிஇஓ நிதின் காமத் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உடல்நலனை சரியான அளவில் பேணுபவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு என அறிவித்துள்ளார் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்து வருவதால் அவர்களது உடல்நலம் முக்கியம் என்றும் உடல்நலம் தொடர்பான முயற்சிகளில் கவனம் செலுத்திவரும் ஊழியர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் போனஸ் அளிக்கப்படும் என்றும் … Read more

உலகளவில் 62.02 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.02 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.02 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.40 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 60.02 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்.26: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.