பெட்ரோல் குண்டு வீச்சு: “தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை!"- ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை

“பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார். அஸ்ரா கார்க் நாடு முழுவதும் பி.எஃப்.ஐ அலுவலகங்களில் என்.ஐ.ஏ சமீபத்தில் நடத்திய சோதனையைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் வீடுகள்மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கோவை, ஈரோடு, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. நேற்று இரவு மதுரை … Read more

சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் வழியில் மூச்சுத் திணறலால் மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் வழியில் மூச்சுத் திணறலால் மேலும் ஒரு பக்தர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நடராஜ் என்பவர் கோரக்கர் குகை அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

மண்ணெண்ணெய் குண்டு சம்பவங்கள்: திருமாவளவன், சீமான் எழுப்பிய சந்தேகமும், ஐ.ஜி. எச்சரிக்கையும்

India bbc-BBC Tamil Getty Images சித்தரிப்புப் படம் சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீசிய வழக்கில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் நெருப்பு பற்ற வைத்து, வீட்டின் முன்பு மர்ம நபர்கள் வீசியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதில் எந்தவித சேதமும் … Read more

இந்தியாவில் மேலும் 4,777 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,777 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,777 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,68,114 ஆனது.கடந்த 24 மணி நேரத்தில், 5,196 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,39,95,610 ஆனது. தற்போது 43,994 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கோவிட் காரணமாக மேலும் 12 … Read more

நீண்ட கால முதலீடாக எல்.ஐ.சி பங்கில் பணத்தை போடலாமா?

ரூ.950 வரை சென்ற எல்.ஐ.சி பங்கு இப்போது ரூ.650 என்கிற நிலையில் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் நீண்ட கால முதலீடாக எல்.ஐ.சி பங்கில் முதலீடு செய்யலாமா என பார்ப்போம். ஒரு கம்பெனி பங்கின் விலை அக்கம்பெனியின் தற்போதைய வருவாய் மற்றும் எதிர்கால வருவாயைக் கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விகிதம் P/E விகிதம் என்று அழைக்கப்படும். பங்கு வர்த்தகம் அரசு நிறுவனங்களுக்குப் பொருள்களை விற்று, லட்சக் கணக்கில் லாபம் சம்பாதிக்க உதவும் ‘ஜெம்’…! ஒரு நிறுவனத்தின் … Read more

மூன்லைட்டிங்கிற்கு ஆதரவு.. விப்ரோவும் ஸ்விக்கியும் ஒன்றல்ல.. ஹர்ஷ் கோயங்கா பரபர கருத்து!

moonlighting: மூன்லைட்டிங்கிற்கு எதிராக சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலரும் இதற்கு எதிர்ப்பு குரலையே கொடுத்து வருகின்றனர். குறிப்பாக மூன்லைட்டிங்கினை காரணம் காட்டி விப்ரோ பணி நீக்கம் செய்தது பெரும் விவாத பொருளாகவே மாறியுள்ளது. ஒரு தரப்பு கூடுதல் வருமானத்திற்காக வேலை நேரம் போக மற்ற நேரத்தில் மற்றொரு பணியில் ஈடுபடுவதை தவறல்ல என்று கூறினாலும், பலரின் வாதமும் இது சரியான நெறிமுறையல்ல. பணிபுரியும் நிறுவனத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற கருத்தினையே பலரும் முன் வைக்கின்றனர். சம்பளம் … Read more

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்; `தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டிருக்கிறது!' – மத்திய அமைச்சர்

தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கார் எரிப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழக முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு … Read more

அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்… முதல் நாளில் இருந்தே காய் நகர்த்திய மேகன் மெர்க்கல்

மேகன் மெர்க்கலின் பிடிவாத குணமே அவரையும் ஹரியையும் ராஜகுடும்பத்தில் இருந்து வெளியேற வைத்தது தம்மை அரண்மனை வெறுத்து வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டார்  பிரித்தானிய ராஜகுடும்பம் தம்மை வெறுத்து வெளியேற்ற வேண்டும் என்பதே முதல் நாளில் இருந்தே மேகன் மெர்க்கலின் விருப்பமாக இருந்தது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேகன் மெர்க்கலின் அந்த பிடிவாத குணமே அவரையும் இளவரசர் ஹரியையும் ராஜகுடும்பத்தில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேற வைத்தது எனவும் கூறுகின்றனர். @getty மேலும், மேகனுக்கு … Read more

விராலிமலை முருகன் கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

புதுக்கோட்டை: விராலிமலை முருகன் கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டு வீசப்படுவதன் எதிரொலியாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்கில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தீப்பெட்டி சைஸ்.. நூலில் சுற்றப்பட்டு இருந்த மர்ம பொருள்.. கை வைச்சதும்.. விவசாயிக்கு நேர்ந்த கதி

Tamilnadu oi-Halley Karthik செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே மர்ம பொருள் வெடித்ததில் விவசாயி ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெடித்த பொருள் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மர்ம பொருள் வெடித்ததில் விவசாயி படுகாமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரேபோடு செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ் அத்திவாக்கம் கிராமத்தில் விவசாயி வெங்கடாச்சலம் வயல்வெளியில் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்துள்ளார். அப்போது … Read more