38-வது மெகா தடுப்பூசி முகாம்: 4 மணி நிலவரப்படி 6.35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரவும் 38-வது மெகா தடுப்பூசி முகாமில் 6.35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 21,590 பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியும், 1.28 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 4 லட்சத்து 85 ஆயிரத்து 100 பேர் செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தேர்தல் வந்தாலே போதும்.. இந்து முஸ்லீம் மோதலை கிளப்புவதே பாஜகவின் வேலை..! பாயும் ஓவைசி

India oi-Vigneshkumar காந்திநகர்: குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அசாரூதின் ஓவைசி பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 99 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. இப்போது பூபேந்திர பட்டேல் தலைமையிலான பாஜக ஆட்சியை நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜகவை எப்படியாவது தோற்கடித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் பல எதிர்க்கட்சிகள் களமிறங்கி உள்ளன. … Read more

எஸ்பிஐ Vs அஞ்சலக FD திட்டங்கள்.. முதிர்வு காலத்தில் ரூ.10 கிடைக்க எவ்வளவு முதலீடு?

SBI Vs post office FD: பிக்சட் டெபாசிட் திட்டங்கள் இன்றும் சாமானிய மக்கள் மத்தியில் பிரபலமான திட்டங்களாக உள்ளன. இன்று என்ன தான் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், எஃப்டி என்பது சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனினும் இந்த எஃப்டி திட்டத்தில் எது சிறந்தது? எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட்டா, அஞ்சலகத்தின் டைம் டெபாசிட்டா? இதில் எதில் வட்டி விகிதம் அதிகம்? எது சிறந்த தேர்வாக இருக்கும்? எதில் வருமானம் அதிகம் கிடைக்கும்? ரிஸ்க் இல்லா … Read more

Gpay பார்கோடு குளறுபடி; ரூ.550-க்கு போட்ட பெட்ரோலுக்கு ரூ.55,000 செலுத்திய நபர்!

மகாராஷ்டிரா தானேவில் தன்னுடைய ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போடச் சென்ற ஒருவர் பங்க் ஊழியருக்கு ரூ.550 கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக ரூ.55,053 செலுத்தியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த நபர் தன்னுடைய ஸ்கூட்டருக்கு தானேவில் உள்ள ஷெல் பெட்ரோல் பங்க்கில் டேங்க் ஃபுல் செய்திருக்கிறார். அதற்கு பில் ரூ.550 வந்திருக்கிறது. அந்த வாடிக்கையாளரும் கூகுள் பே மூலம் பணம் செலுத்த முயற்சி செய்தார். அப்போது QR குளறுபடியால் ரூ.550-க்கு பதில் ரூ.55,053 என தவறுதலாக பில் பதிவாகியிருக்கிறது. கூகுள் … Read more

அக்.,2ல் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி

சென்னை: வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த கூட்டம், ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி அக்.,2 காலை 11 மணியளவில் நடைபெறும் என தெரிவித்துள்ளது. குறைவெண் வரம்பின் படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு. கிராம சபை கூட்டம் நடைப்பெற உள்ள இடம் நேரம் ஆகியவை கிராம … Read more

என்னை \"அங்கெல்லாம்\" தொட்டார்கள்! அப்புறம்.. பாஜக நிர்வாகி மகன் கொடுமை! லீக்கான பெண்ணின் வாட்ஸ்அப் சாட்

India oi-Halley Karthik டேராடூன்: தனது சொகுசு விடுதியில் ரிஷப்ஷனிஸ்ட் ஆக பணியாற்றிய 19 வயது இளம்பெண் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவரை கொலை செய்த சம்பவத்தில் பாஜக மூத்த தலைவர் ஒருவரின் மகன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் இளம் பெண்ணின் உடல் நீண்ட தேடுதலுக்கு பின்னர் ஒரு கால்வாயிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. உடற்கூறாய்வு அறிக்கையில், இளம்பெண்ணின் உடலில் காயங்கள் அதிக அளவில் இருந்ததும், நீரில் மூழ்கி … Read more

பயங்கரவாதிகள் தாக்குதல் 2 தொழிலாளர்கள் காயம்| Dinamalar

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீஹாரை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் கர்போரா என்ற இடத்தில் பீஹாரை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று இங்கு பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், சம்ஷத் மற்றும் பைசான் குவாஸ்ரி ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். … Read more

கன்னியாகுமரி: தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! – போலீஸ் தீவிர விசாரணை

நாடு முழுவதும் கடந்து மூன்று நாள்களுக்கு முன்பு பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில் நிர்வாகிகள் பலர் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், கருமன்கூடல் பகுதியில் உள்ள தொழிலதிபர் கல்யாணசுந்தரம் என்பவர் வீட்டில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கல்யாணசுந்தரத்தின் … Read more

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பான அறிவிப்பில், இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த … Read more

தனக்கு தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும், கடுமையான நடவடிக்கை: தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை

மதுரை: குண்டு வீச்சில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும், கடுமையான நடவடிக்கை என ஐஜி அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.