'வட இந்தியா vs தென் இந்தியா' : சிறப்பாகச் செயல்படுவதற்காக வஞ்சிக்கப்படுகிறதா தென்னிந்தியா?

India bbc-BBC Tamil Getty Images சத்துணவு திட்டம் கல்வி, சுகாதாரம், பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றில் இந்திய வட மாநிலங்களை விட தென் மாநிலங்கள் சிறப்பான நிலையில் இருக்கின்றன. மத்திய அரசுக்கு கூடுதலாக வரியைச் செலுத்தும் தென் மாநிலங்கள் முன்னேறிய நிலையில் இருப்பதற்காக தண்டிக்கப்படுகின்றனவா என்ற கேள்வியை எழுப்புகிறது புதிய புத்தகம் ஒன்று. இந்தியாவில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான நிதிப் பகிர்வு குறித்து தொடர்ந்து எழுதிவரும் சென்னையைச் சேர்ந்த புள்ளி விவர நிபுணரான ஆர்.எஸ். … Read more

பெண்ணை அடித்து கொலை செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல்| Dinamalar

புதுச்சேரி: பெண்ணை அடித்து கொலை செய்த கரும்பு வெட்டும் தொழிலாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது. புதுச்சேரி, கோர்க்கோடு ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் சாந்தி,45; இவர் கடந்த 2020ம் ஆண்டு அக்டோர் 31ம் தேதி தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு கடற்கரையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர். அதில் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த சின்னபாபுசமுத்திரத்தை சேர்ந்த கரும்பு … Read more

இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்யும் நெஸ்லே.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

நெஸ்லே நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே பல ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ரூ.5000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. நெஸ்லே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஷ்னைடர் என்பவர் இது குறித்து கூறிய போது இந்தியாவில் 2025-ஆம் ஆண்டுக்குள் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் நெஸ்லே நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாகும் என்றும் அதுமட்டுமின்றி படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 11 … Read more

பாலியல் தொழிலுக்கு மறுத்த இளம்பெண்; கொலைசெய்து உடலை வீசிய பாஜக தலைவர் மகன்! – உத்தரகாண்டில் பரபரப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடத்தி வருகிறது. அங்கிருக்கும் ரிஷிகேஷில் மூத்த பா.ஜ.க தலைவரும் முன்னாள் அமைச்சருமான வினோத் ஆர்யாவுக்குச் சொந்தமான ரிசார்ட் அமைந்திருக்கிறது. இந்த ரிசார்ட்டை அவர் மகன் புல்கித் ஆர்யா கவனித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம், ரூ.10,000 சம்பளத்துக்கு வரவேற்பாளராக பவுரி கர்வால் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், அந்தப் பெண் திடீரென மாயமாகியிருக்கிறார். அவரது 2 செல்போன்களும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கின்றன. போலீஸ் பல … Read more

விமான நிலைய பாதுகாப்பு செலவைக் குறைக்க சி.ஐ.எஸ்.எஃப்.க்கு பதிலாக தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகள் நியமனம்…

விமான நிலையங்களில் முக்கிய பணிகள் தவிர மற்ற பணியிடங்களுக்கு தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகளை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக நாட்டில் உள்ள 60 விமான நிலையங்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு (சி.ஐ.எஸ்.எஃப். – CISF) தனியார் பாதுகாப்பு ஏஜென்சி (பி.எஸ்.ஏ – Private Security Agency PSA) பாதுகாப்புப் பணியாளர்களை பயன்படுத்த உள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் பெயரில் … Read more

அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வரும் நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வரும் நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அகவிலைப்படி வழங்கியது குறித்து நவம்பர் 25-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நிதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.   

கணவர் இறந்ததை ஏற்க முடியவில்லை.. கோமாவில் இருப்பதாக நம்பி.. 18 மாதங்களாக சடலத்துடன்.. ப்ச் பரிதாபம்

India oi-Jackson Singh கான்பூர்: தனது கணவர் இறந்து போனதை நம்ப முடியாமல் தவித்த மனைவி, அவர் கோமாவில் இருப்பதாக தன்னை தானே ஏமாற்றிக் கொண்டு அவர் சடலத்துடன் 18 மாதங்களாக இருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எத்தனை உறவுகள் இருந்தாலும் கணவன் – மனைவி உறவு தனித்துவமான ஒன்றுதான். தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் ஆகியோருடனான உறவு இயற்கையானது. ரத்த உறவுகள் என்பதால் இயற்கையாகவே அவர்கள் மீது ஒரு பற்றுதல் அனைவருக்குமே இருக்கும். ஆனால் கணவன், … Read more

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பிஎப்ஐ திட்டம்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பீஹார் மாநிலம் பாட்னாவில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்பு திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. மேலும், உ.பி.,யில் பதற்றம் நிறைந்த பகுதிகள் மற்றும் தனி நபர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரித்துள்ளது. கேரளாவில் கைது செய்யப்பட்ட பிஎப்ஐ உறுப்பினர் ஷபீக் பயீத்திடம் கைப்பற்றப்பட்ட குறிப்புகளில் கூறப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை 12ல் பிரதமர் மோடி … Read more

11 மாதம் ஆச்சு, இன்னும் லெட்டர் வரல.. விப்ரோ செயலால் ஐடி ஊழியர்கள் கடுப்பு..!

இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ கடந்த சில மாதங்களாகவே பல்வேறு சர்ச்சையில் மாட்டிக்கொண்டு வருகிறது. முதலில் வேரியபிள் பே கட், மூன்லைட்டிங் காரணமாக 300 ஊழியர்கள் பணிநீக்கம் ஆகிய அறிவிப்புகளுக்கு மத்தியில் தற்போது விப்ரோ அதிகப்படியான ஐடி ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்துவிட்டுப் பணி நியமன கடிதத்தை அனுப்பாமல் உள்ளது. விப்ரோ நிறுவனத்தின் செயலால் பல ஐடி ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிய தொலைத்தொடர்பு மசோதா.. வாட்ஸ் அப் கால், ஜூம் அழைப்புகளுக்கு … Read more

ராஜபாளையம்: திமுக எம்.எல்.ஏ மணல் கொள்ளைக்கு உடந்தையா? – சர்ச்சை ஆடியோவும், விளக்கமும்!

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகப் பணியாற்றி வருபவர் தி.மு.க-வைச் சேர்ந்த தங்கப்பாண்டியன். இவரின் ஆட்கள், தேவதானம் கிராமத்துக்கு அருகே உள்ள நகரகுளத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளுவது தொடர்பாக வழக்கறிஞர் பால்வண்ணன் என்பவர் வருவாய் அலுவலரிடம் போனில் புகார் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், எம்.எல்.ஏ-வின்‌ ஆட்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக நகரக்குளத்தில் மண் அள்ளி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த வழக்கறிஞர் பால்வண்ணன், வருவாய் அலுவலரை போனில் தொடர்புகொண்டு, மீண்டும் புகார் தெரிவித்திருக்கிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், … Read more