வகுப்புவாதம் மற்றும் வன்முறையை’ கையாள்வதில் சகிப்பு தன்மை கூடாது! என்ஐஏ ரெய்டு குறித்த ராகுல்காந்தி கருத்து

கொச்சி: நாடு முழுவதும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது குறித்த கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வகுப்புவாதம் மற்றும் வன்முறையை’ கையாள்வதில் சகிப்பு தன்மை கூடாது என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று தமிழ்நாடு, கேரளா உள்பட 13 மாநிலங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனையில் பிஎஃப்ஐ, எஸ்டிபி கட்சிகளைச் சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், நாட்டில் கலவரம், வன்முறைகளை நடத்த திட்டமிட்டதாகவும் … Read more

மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய வழக்கில் தலைமை ஆசிரியர் மீது துறைரீதியான விசாரணை நடத்த உத்தரவு

திண்டுக்கல்: மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய வழக்கில் தலைமை ஆசிரியர் மீது துறைரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் கணவாய்ப்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது விசாரணை தொடங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

சொன்னா நம்ப மாட்டீங்க.. பானையில் பத்திரமா இருந்த \"சீஸ்!\" அதுவும் 2600 வருஷமா! எகிப்தில் 8வது அதிசயம்

International oi-Halley Karthik கெய்ரோ: எகிப்தில் சுமார் 2,600 ஆண்டுகள் பழமையான பாலாடைக் கட்டியை (சீஸ்) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை மனித உடல்கள், ஆபரணங்கள், சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சீஸை கண்டுபிடித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பானையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த சீஸ் கிமு 688 மற்றும் 525 காலகட்டத்திற்கு இடையப்பட்டதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பாலாபாலாடைக்கட்டிடைக்கட்டி மனித இனம் பாலை பயன்படுத்திய காலத்திலிருந்தே பாலாடைக்கட்டியான சீஸையும் பயன்படுத்தி வந்திருக்க … Read more

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரிவை கண்ட நிலையில், இன்று மேலும் சரிவை சந்தித்தது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்பை அடுத்து ரூபாயின் மதிப்பு கடுமையான சரிவை கண்டது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக சர்வதேச அரசியலில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாலும் அந்நிய செலாவணி வர்த்தகம் நேற்று மிக மந்தமாக நடந்தது. நேற்று சந்தை இறுதியில் 80.86 … Read more

மஹிந்திரா நிதி நிறுவனத்துக்கு கண்டிசன் போட்ட ஆர்பிஐ.. என்ன தெரியுமா?

கடன் வாங்கியோர் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். சில தவிர்க்க முடியாத சில சமயங்களில் கடனை செலுத்த முடியாமல் தவித்திருக்கலாம். அதுபோன்ற சமயங்களில் கடன் கொடுத்த நிறுவனங்கள் அல்லாமல் மூன்றாம் தரப்பினர் கடனை வசூலித்திருக்கலாம். கடன் வசூலிக்கும் போது மூன்றாம் தரப்பு நபர்களை பயன்படுத்தி கடன் பெற்றவர்களிடம் கடனை வசூலிக்க கூடாது. மறு உத்தரவு வரும் வரை அதனை தொடர வேண்டும் என மஹிந்திரா பைனான்ஸ் நிறுவனத்துக்கு ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. வீட்டுக் கடன், வாகன கடன் வாங்க … Read more

“இறைச்சி உண்ணும் ஆண்கள் உறவு கொள்ளத் தடை விதிக்க வேண்டும்''- சர்ச்சையைக் கிளப்பும் பீட்டா!

தொட்டால் ஷாக் அடிக்கும் விவாதங்களில் சைவம், அசைவம் இந்த இரண்டு வார்த்தைகளும் அடங்கும். உணவை உணவாகப் பார்க்காமல் அவற்றில் அரசியல், மதம், சாதி என அனைத்தையும் கலக்கும்போது தான் இத்தகைய பிரச்னைகள் உருவெடுக்கின்றன. சைவம் உண்பவர்கள் பற்றியும், அசைவம் உண்பவர்கள் பற்றியும் அவ்வப்போது பலர் தங்களின் கருத்துகளைச் சொல்லி, அதனால் விவாதங்கள் நீள்வதுண்டு. இந்நிலையில் “இறைச்சி உண்ணும் ஆண்கள் உடலுறவு கொள்ளத் தடை விதிக்க வேண்டும்” என விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா (People for the … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்! நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்..

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்படும் என தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த, தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பலரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டு, வழக்கு பதியப்பட்டது. இதற்கிடையில், செந்தில்பாலாஜி, திமுகவுக்கு மாறியதும், அவர்மீதான வழக்குகள் ரத்து செய்யப் … Read more

அமைதி பூங்காவன தமிழ்நாட்டை அமளிக்காடாக்க யாரும் துணைபோக வேண்டாம்: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

சென்னை: அமைதி பூங்காவன தமிழ்நாட்டை அமளிக்காடாக்க யாரும் துணைபோக வேண்டாம் என கி.வீரமணி கூறியுள்ளார். அன்று பாபர் மசூதியை இடிக்க அம்பேத்கார் பிறந்தநாளை தேர்ந்தெடுத்தனர், இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தி காந்தி பிறந்தநாளை தேர்ந்தெடுக்கின்றனர் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மேலும் உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது நியாயம் தானா? என கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கிலாந்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: இந்து – முஸ்லிம் சர்ச்சையால் உள்ளூர் மக்கள் கவலை

India bbc-BBC Tamil இங்கிலாந்தின் லெஸ்டர் நகரில் கடந்த வார இறுதியில் நடந்த பெரிய அளவிலான போராட்டத்ததைத் தொடர்ந்து, அதே மாதிரியான போராட்டம் பர்மிங்காமின் ஸ்மெத்விக் நகரில் அமைந்துள்ள துர்கா பவன் கோவில் மற்றும் சமூக மையத்திற்கு வெளியே நடந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவரான சாத்வி ரிதம்பரா இந்தக் கோவிலில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் உரையாற்ற இருந்தார். அவர் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர், பாபர் மசூதி இடிப்பில் முக்கிய பங்குள்ளவர் என்று கூறி … Read more

அரசியலில் நுழைந்தது முதல் பலரை ஏமாற்றியவர் நிதிஷ்: அமித்ஷா தாக்கு| Dinamalar

புர்னியா: பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், அரசியலில் நுழைந்தது முதல் பலரை ஏமாற்றியவர் எனவும், அவரிடம் லாலு கவனமுடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா கூறியுள்ளார். பீஹாரில், பாஜ., கூட்டணியை முறித்து கொண்ட முதல்வர் நிதிஷ்குமார், லாலு கட்சி ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார். இதன் பிறகு முதன்முறையாக அந்த மாநிலத்திற்கு சென்றுள்ள அமித்ஷா, புர்னியா என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நிதிஷால் சிறந்த … Read more