ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டு சிறை: ரயில்வே போலீசார் எச்சரிக்கை

சென்னை: மின்சார ரயிலில் அட்டுழியம் செய்யும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டு சிறை தண்டனை என ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், விஷம செயல்களில் ஈடுபட கூடாது எனவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர் மழையால் மிதக்கும் நொய்டா, குருகிராம்| Dinamalar

புதுடில்லி: டில்லி மற்றும் அதன் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நொய்டா மற்றும் குருகிராம் நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. உ.பி.,யில் பல மாவட்டங்களில் சுவர் இடிந்தும், இடி தாக்கியும் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். பிரோசோபாத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அலிகார்க் நகரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நேற்று மாலை 5:30 மணி முதல் இன்று காலை 8:30 மணி வரையிலான காலகட்டத்தில் டில்லியில் 40.8 மி.மீ., மழை … Read more

18-65 வயது ஆண்களுக்கு விமான டிக்கெட் வழங்க வேண்டாம்.. அரசின் அதிரடி அறிவிப்பு!

18 வயது முதல் 65 வரையிலான ஆண்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்க வேண்டாம் என ரஷ்ய விமான நிறுவனங்களுக்கு ரஷ்ய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ரஷ்ய விமான நிறுவனங்கள் 18 முதல் 65 வயதான ஆண்களுக்கு விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்வதை நிறுத்தி விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய அரசு எதற்காக இந்த கோரிக்கையை விமான நிறுவனங்களுக்கு விடுத்து உள்ளது என்பதை தற்போது பார்ப்போம். டிசிஎஸ்: வாரம் … Read more

கிரீன் டீ, நெல்லிக்காய் மேஜிக் Vs பீசா, பப்ஸ்… எது தவறான உணவுப்பழக்கம்? நிபுணர் விளக்கம்

சில மாதங்களுக்கு முன்பு, விஜய் டிவி `நீயா? நானா?’நிகழ்ச்சியில் நவீன ஆரோக்கிய உணவு முறையைப் பின்பற்றுபவர்களும், அதற்கு எதிர்மறையான கண்ணோட்டத்தில் இருப்பவர்களும் காரசாரமாக உரையாடிய நிகழ்ச்சி, பேசுபொருளாக மாறியது. அதில், கிரீன் டீ மற்றும் நம் பாரம்பர்ய உணவுகளில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் (Antioxidant) அளவு குறித்து மருத்துவர் ஒருவர் புள்ளி விவரங்களுடன் பேசியது, இணையத்தில் இப்போதும் பலராலும் பார்க்கப்படுகிறது. கிரீன் டீ டீ குடித்தால் ஆயுள் அதிகரிக்குமா? ஆய்வு முடிவும் முழுமையான தகவல்களும்! ஆன்டி ஆக்ஸிடன்ட் … Read more

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண்கள் இரட்டைக்கொலை: பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகின

இங்கிலாந்தில் கொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளியினர்களாகிய தாய் மற்றும் மகள் குறித்த தகவல்கள் பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளன. கொலை செய்தவர் என கருதப்படும் நபரைக் குறித்த விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை. இங்கிலாந்தில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியினர்களாகிய தாய் மற்றும் மகள் குறித்த சில புதிய தகவல்கள் பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளன. இம்மாதம் (செப்டம்பர்) 8ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Great Waldingfield என்னும் இடத்தில், வீடு ஒன்றில் ஏதோ பிரச்சினை என பொலிசாருக்குத் தகவலளிக்கப்பட்டுள்ளது. பொலிசார் அங்கு விரைந்தபோது, ஒரு தாயும் … Read more

வாட்ஸப், ஜூம், ஸ்கைப் கால்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! தொலைத்தொடர்பு மசோதா 2022 மசோதாவில் தகவல்

டெல்லி: இணையவழி கால்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. அதன்படி, வாட்ஸ்ஆப், ஸூம், கூகுள் டியோவுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட தொலைத்தொடர்பு மசோதா 2022ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் வளர்ச்சியால், தற்போது, ஆடியோ, வீடியோ கால்கள் மட்டுமின்றி, பெரும்பாலான மக்கள் நல சேவைகளும் இணையவழியிலேயே நடைபெற்று வருகின்றன. நகரம் முதல் கிராமம் வரையிலான  மக்கள் தற்போது டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்த … Read more

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கண்டனம்.

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பொதுக்கூட்டத்தில் பேசும்போது முழு விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்றால் எந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஒரு முதல்வரை அரசியல் காரணங்களுக்காக தரம் தாழ்ந்து பேசுவது சரியல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பி.எப்.ஐ பந்த்; பஸ்கள் உடைப்பு – ஐகோர்ட் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொச்சி: கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பு நடத்திவரும் கடையடைப்பின் போது பல இடங்களில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பு தொடர்புடைய இடங்களில் நேற்று (செப்.,22) சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு … Read more

Sensex 750 புள்ளிகள் சரிவு. வங்கி, ஐடி பங்குகள் அதிகப்படியான பாதிப்பு..!

அமெரிக்கப் பெடரல் வங்கி தனது பென்ச்மார்க் வட்டி வட்டி விகிதத்தை அதிகரித்த நாளில் இருந்து பங்குச்சந்தையும், ரூபாய் மதிப்பும் மோசமான சரிவை எதிர்கொண்டு வருகிறது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சர்வதேச சந்தையின் மந்தமான வர்த்தகத்தின் எதிரொலியாக 750 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை பதிவு செய்துள்ளது. இந்தச் சரிவுக்கு முக்கியமான காரணம் அன்னிய முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனை தான். டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..! வட்டி … Read more

அப்போ இப்போ 3 -`அஜித் சார் மச்சின்னுதான் கூப்பிடுவார்; ஆனா,அமர்க்களத்துக்கு அப்புறம்'- தேவ் ஆனந்த்

` பலரும் இவன் கதை முடிஞ்சதுன்னு சொன்னாங்க.. ஆனா, என்னால முடியும் என்கிற தன்னம்பிக்கையோடு எல்லாத்திலிருந்தும் மீண்டு வந்தேன்! ‘ என்கிறார் தேவ் ஆனந்த். 90களில் இருந்து சின்னத்திரையில் பல தொடர்களில் இவரை பார்த்திருக்கிறோம். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் `ரோஜா’ தொடரிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `தென்றல் வந்து என்னைத் தொடும்’ தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். `அப்போ இப்போ’ தொடருக்காக அவரைச் சந்தித்துப் பேசினோம். தேவ் ஆனந்த் “சின்ன வயசிலேயே நாம செத்தப் பிறகு நம்மைப் பார்க்க மக்கள் கூட்டம் … Read more