“மணமகன் தேவை; ஆனால் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்ஸ் வேண்டாமே பிளீஸ்!"- இணையத்தில் விவாதப்பொருளான விளம்பரம்

முதலில் எல்லாம் திருமணம் என்பதே, பல மாதங்களுக்கு முன்பாக பேசி முடிவெடுத்து, நாலு பேரை விசாரிச்சு, நேரில் சென்று பார்த்து பாக்கு வெற்றிலை மாற்றி சம்பந்தம் பேசி முடிப்பது எனப் பல வேலைகள் நடக்கும். ஆனால், இன்றைய நவீன வாழ்க்கையில், மேற்சொன்னவையெல்லாம் மலையேறிப்போக, இணையத்தளத்திலேயே, மணமகன், மணமகள் பற்றிய படிப்பு, சாதி, வேலை, சம்பளம் என விவரங்கள் அனைத்தையும் பார்த்து, அது ஒத்துப்போன பிறகு நேராகத் திருமணம்தான் என மாறிவிட்டது. இத்தகைய முறை பெரும்பாலும் நகரவாசிகளிடையே காணப்படுகிறது. திருமணம் … Read more

மும்பையில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட சமூகம் எது? சர்ச்சையில் சிக்கிய சிபிஎஸ்இ வினாத்தாள்…

சென்னை: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பருவதேர்வு நடைபெற்று வரும் நிலையில், 6ம் வகுப்பு கேள்வித்தாளில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சி.பி.எஸ்.இ.  6-ம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பருவத்தேர்வு கேள்வித் தாளில் தீண்டாமை குறித்து கேள்வி இடம் பெற்றுள்ளது மும்பை மாகாணத்தில் எந்த சாதி தீண்டத்தகாத சாதியாக இருந்தது என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.  இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், 6-ம் வகுப்பிற்கான … Read more

ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது

விழுப்புரம்: ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட அஜித்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ராகுல் காந்தி படத்துடன் தமிழக பாஜக பிரமுகர் பகிர்ந்த ட்வீட் – ஏன் சர்ச்சையானது?

India bbc-BBC Tamil BBC ராகுல் காந்தி ராகுல் காந்தியின் படத்துடன் தமிழ்நாடு பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணியின் மாநில தலைவர் சி.டி. நிர்மல் குமார் வெளியிட்ட ட்வீட் சர்ச்சை ஆகியிருக்கிறது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளப் பிரிவின் தலைவராக உள்ள சி.டி. நிர்மல் குமார் ஞாயிற்றுக்கிழமையன்று ராகுல் காந்தியை கிண்டல் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். காலில் விழும் … Read more

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1.02 கோடி நன்கொடைவழங்கிய இஸ்லாமிய தம்பதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருப்பதி :திருமலை ஏழுமலையானுக்கு இஸ்லாமிய தம்பதி, 1.02 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினர்.சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அப்துல் கனி – சுபினா பானு தம்பதி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 1.02 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினர். வி.ஐ.பி., பிரேக் தரிசனம் முடித்த பின், அவர்கள் தங்கள் குடும்பத்துடன் ரங்கநாயகர் மண்டபத்தில் இதற்கான வரைவோலையை செயல் அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கினர். இதில், அன்னதான அறக்கட்டளைக்கு 15 லட்சம் ரூபாயும், திருமலையில் … Read more

“நேரு குடும்பத்தை அங்கீகரிப்பவர்களுக்கு மட்டுமே வாக்களிப்போம்!" – கேரள காங்கிரஸ் எம்.பி திட்டவட்டம்

காங்கிரஸ் கட்சி, தொடர்ச்சியாக இரண்டு மக்களவைத் தேர்தல்களில் தோல்வியடைந்ததையடுத்து மார்ச்சில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றயத் தேர்தலிலும் தோல்வியடைய, கட்சியின் தலைமை பொறுப்புக்குத் தேர்தல் நடத்தவேண்டும் என்று கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்தன. அதன்மீதான ஒரு நடவடிக்கையாகத்தான், வரும் அக்டோபர் 17 அன்று, காங்கிரஸின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்த காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டிருக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கலும் வரும் 24-ம் தேதிமுதல் 30-ம் தேதிவரை நடைபெறுகிறது. ராகுல் காந்தி -சசி தரூர் இந்த அறிவிப்புகள் வெளியாகி பல … Read more

துருக்கி துறைமுகத்தில் பாரம் தாங்காமல் கடலில் மூழ்கிய கப்பல்… வீடியோ

துருக்கி நாட்டின் இஸ்கென்டிரன் துறைமுகத்தில் கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று பாரம் தாங்காமல் கடலில் மூழ்கியது. செப்டம்பர் 17 ம் தேதி பின்னிரவு அல்லது 18 ம் தேதி அதிகாலை நடைபெற்ற இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. மத்தியதரைக்கடல் பகுதியில் துருக்கியின் தென் பகுதியில் உள்ள இந்த துறைமுகத்துக்கு 17 ம் தேதி மதியம் வந்த ‘சீ ஈகள்’ என்ற சரக்கு கப்பலில் கன்டெய்னர்களை ஏற்றும் பணி நடந்து வந்தது. கப்பலில் கன்டெய்னர்கள் ஏற்றிக் … Read more

சோழவரம் ஆத்தூர் தனியார் கிடங்கில் சுமார் 100 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர்: சோழவரம் ஆத்தூர் தனியார் கிடங்கில் சுமார் 100 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி உள்ளிட்ட மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்தனர். அரிசியை ஆந்திராவிற்கு கடத்த முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூர் டூ நெல்லை: ஆம்னி பேருந்தில் குட்கா கடத்தல்! – சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீஸ்

கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் காவல்துறையினர் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால் கடந்த சில மாதங்களாக வெளியிடங்களிலிருந்து கடத்திக் கொண்டுவரப்படும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. விரட்டிப்பிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்து இந்த நிலையில், நெல்லை மாநகர காவல்துறையினர் வழக்கமான போதைப்பொருள் தடுப்புப் பணியில் ஈடுபட்டனர். அதற்காக நெடுஞ்சாலையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரிலிருந்து நெல்லை வழியாக … Read more

சுமார் 80 விமானிகளை சம்பளம் இல்லாமல் 3 மாதம் கட்டாய விடுமுறையில் அனுப்பிய SpiceJet நிறுவனம்

சென்னை: சுமார் 80 விமானிகளை சம்பளம் இல்லாமல் 3 மாதம் கட்டாய விடுமுறையில் அனுப்பிய SpiceJet நிறுவனம். நிதி பற்றாக்குறையை சரி செய்ய தற்காலிகமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.