முடியாது என மறுத்த பள்ளி மாணவி.. அடித்தே கொன்ற அதிகாரிகள்: பதறவைக்கும் சம்பவம்

மாணவிகளை கொடூரமாத தாக்கிய பொலிசார், அவர்களை பின்னர் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஹிஜாப் முறையாக அணியாத விவகாரத்தில் பொலிசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு Mahsa Amini மரணம் ஈரானில் உச்ச தலைவருக்கு ஆதரவான பாடலை பாட மறுத்த பள்ளி மாணவியை சிறப்பு பொலிசார் அடித்தே கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை வாழ்த்தி ஆதரவாளர்களால் பாடப்படும் பாடலையே குறித்த மாணவி பாட மறுத்துள்ளார். வியாழன் அன்று ஷாஹித் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறித்த … Read more

வேலையிலிருந்த பெற்றோர்; ஏழு மாதக் குழந்தையைக் கடித்துக் குதறிய தெரு நாய்! – டெல்லியில் அதிர்ச்சி

டெல்லி மற்றும் அதையொட்டிய நொய்டாவில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த நாய்கள் கடித்து பொதுமக்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு நாய் கடித்து வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டார். இதனால் உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத்தில் வீட்டில் ஒரு நாய்க்கு மேல் வளர்க்கக் கூடாது என்று உத்தரவே பிறப்பித்துவிட்டனர். அதோடு சில வகை நாய்கள் மிகவும் ஆக்ரோஷத்துடன் இருப்பதால் அவற்றை வீட்டில் வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், டெல்லி அருகிலுள்ள நொய்டாவில் தெரு … Read more

காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவி சடலமாக மீட்பு! – தாய் கண்முன் நடந்த சோகம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள சிங்களகோம்பை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் மகள் பெயர் ஜீவிதா. ஜீவிதா, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஜீவிதா நேற்றும் வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை பெய்த மழையால், அவரால் பேருந்தில் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் தாய் கவிதா, கல்லூரிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று, அங்கிருந்த தன் மகள் ஜீவிதாவை அழைத்துக் கொண்டு, கொக்குவாரி ஆறு … Read more

ஆபத்தான பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டும் குட்டி இளவரசர் ஜார்ஜ்! கவலையில் இளவரசி கேட்

இளவரசர் வில்லியமின் மூத்த மகன் இளவரசர் ஜார்ஜ் தற்காப்புக் கலை பயில விருப்புகிறார். ஆபத்தான போர்ழுதுபோக்கில் ஆர்வம் காட்டுவதாக இளவரசி கேட் பயப்படுவதாக தகவல். இளவரசி கேட் மிடில்டன் தனது மூத்த மகன் இளவரசர் ஜார்ஜ் (9), தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதால் கொஞ்சம் கவலையாக இருப்பதாக கூறப்படுகிறது. வேல்ஸ் குடும்பம் வின்ட்சர் மற்றும் இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ் ஆகியோருக்கு ஒரு புத்தம் புதிய பள்ளியில் தொடங்கியதைத் தொடர்ந்து, ஜார்ஜ் … Read more

"இந்தியா முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பற்ற இடம்!" – பரபரப்பை கிளப்பிய அமெரிக்க விளம்பரம்

“நீங்கள் இந்தியாவில் முதலீட்டாளர்களாக இருந்தால், அடுத்து பாதிக்கப்படுவர் நீங்கள் தான்”என்று அமெரிக்க நாளிதழ் வெளியிட்டுள்ள விளம்பரம் இந்தியாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலக வங்கியின் வருடாந்தர கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பதின் முக்கியத்துவம் என்ன? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காகக் கடந்த வாரம் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 13-ம் தேதி வால் ஸ்ட்ரீட் (Wall Street) என்ற … Read more

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.  11மாவட்டங்களில் இன்றும், 23 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதன்படி இன்று, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கன்னியாகுமரி, தென்காசி, சேலம், திண்டுக்கல், … Read more

தனித்தனியா பட்டாசு வாங்குறது, கிப்ட் பாக்ஸ் வாங்குறது – எது பெஸ்ட்? டிப்ஸ் தரும் பட்டாசு கடைக்காரர்

இதோ, தீபாவளி வந்தாச்சு. துணிக்கடை முதல் பட்டாசுக் கடை வரை எல்லாமே தூள் கிளப்பிக்கிட்டு இருக்கு. அங்கே, இங்கேன்னு புதுசுபுதுசா பட்டாசுக் கடைகள் முளைச்சுகிட்டு இருக்கும். ராமநாதபுரத்துல ஒவ்வொரு வருஷமும் தீபாவளி அப்ப தவறாம பட்டாசு கடை போடும் இராமநாதபுரம் பட்டாசு சங்கத் தலைவர் வன்னியராஜனை சந்தித்து, பட்டாசு விற்பனை பத்தி கேட்டோம். நிறைய விஷயங்களை அவர் சொன்னார். நீங்க எத்தனை வருஷமா பட்டாசு வியாபாரம் செய்றீங்க? ‘‘1996-ல நான் தனியாக பட்டாசு வியாபாரம் பண்ண ஆரம்பிச்சேன். … Read more

புடினுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை! உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அதிரடி

மின் நிலையங்களை ரஷ்யா அழைத்ததைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார் கீவ் பகுதியில் ரஷ்யா நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில், குடியிருப்பில் இருந்த ஐந்து பேர் பலியாகினர்   உக்ரைனில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில் கஜகஸ்தான் மாநாட்டில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என உக்ரைன் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய … Read more

ஜெயலலிதா மரண அறிக்கை குறித்த கருத்து கூற ஓபிஎஸ் மறுப்பு…

சென்னை; சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட  ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து, அப்போது துணைமுதல்வராக இருந்த  ஓ.பன்னீர்செல்வம் கருத்து சொல்ல மறுத்து விட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தர்மயுத்தம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெ.மறைந்த உடனே, முதல்வராக அவசரம் அவசரமாக பதவி ஏற்றதுடன், சசிகலாவின் பதவி ஆசையால், தனதுபதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளானார். இதையடுத்து ஜெ.சமாதிக்கு சென்று தர்மயுத்தம் நடத்தி … Read more

எல்லோருக்கும் சமமான படிக்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கியது திராவிட இயக்கம் தான்: கனிமொழி,எம்பி

சென்னை: எல்லோருக்கும் சமமான படிக்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குவது தான் திராவிட இயக்கம் என்று கனிமொழி, எம்பி கூறியுள்ளார். மதிய உணவு திட்டத்தை உண்மையான சத்துணவு திட்டமாக மாற்றியவர் கலைஞர். இன்று பல மாநிலங்கள் அதை பின்பற்றி  வருகின்றனர் என்று கனிமொழி, எம்பி தெரிவித்துள்ளார். சாமானிய பிள்ளைகள் படிக்க அரசு மருத்துவ கல்லூரிகள் உருவாக்கினால் நீட்டை கொண்டு வந்து இடமில்லை என்ற நிலைமையை பாஜக உருவாக்கியுள்ளது என்றும் நிச்சயம் அதற்கான நீதி நியாயத்தை முதலமைச்சர் பெற்றுக்கொடுப்பார் என்று கனிமொழி,எம்பி … Read more