ஆள் இல்லா விமானம்; காஷ்மீரில் தீவிர ரோந்து| Dinamalar

ஜம்மு : ஜம்மு – காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் பறப்பதாக கிடைத்த தகவலைஅடுத்து அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்கள், ஜம்மு – காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில் பறப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் மாநில போலீஸ் இணைந்து, சம்பா மாவட்ட எல்லையோர கிராமங்களில் நேற்று தீவிர தேடுதல் வேட்டை … Read more

இதுல முதலீடு செய்யுங்க.. இதைமட்டும் செய்யாதீங்க.. ரூ.25 கோடி லாட்டரி பரிசு விழுந்தவருக்கு அட்வைஸ்!

கேரளாவில் நேற்று நடைபெற்ற ஓணம் பண்டிகை சிறப்பு லாட்டரி குலுக்கலில் ரூ.25 கோடி பரிசு ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவர் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு ஓணம் பண்டிகை பம்பர் லாட்டரி வென்றவர் அவருக்கு ஒரு அட்வைஸ் செய்திருக்கிறார். தயவுசெய்து பரிசு பணத்தை பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யவும் என்றும் உறவினர்கள் யாருக்கும் உதவி செய்ய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவறான வங்கி … Read more

Motivation Story: `ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் கிங்' ஸ்டீவ் வாக் அம்மாவுக்குக் கொடுத்த அந்த வாக்குறுதி

`பிறருக்கு உதவுவதைவிடச் சிறந்தது வேறு ஒன்றுமில்லை என்பதுதான் நாம் முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.’ – மார்ட்டின் லூதர் கிங் ஸ்டீவ் வாக் (Steve Waugh)… சொன்னாலே கிரிக்கெட் ரசிகர்களின் நாடி நரம்புகளில் உற்சாகம் பாய்ச்சும் பெயர். ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர். மலைக்கவைக்கும் ரெகார்ட் படைத்தவர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இவர் போட்டியிட்ட டெஸ்ட் மேட்சுகள் 57; அவற்றில் 41 மேட்சுகளில் வெற்றி. ஒரு நாள் … Read more

இராணுவ சீருடையில் அவமானப்படுத்தப்பட்ட இளவரசர் ஹரி; மன வேதனையுடன் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்திய பேரன்

மகாராணியின் 8 பேரக்குழந்தைகளில் மிகவும் மனமுடைந்த நிலையில் வேதனையுடன் இறுதி மரியாதை செய்துள்ளார் இளவரசர் ஹரி. இராணுவ சீருடையில் தனது பாட்டிக்கு இறுதி மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டாலும் இளவரசர் ஹரி ஒருவகையில் அவமானபடுத்தபட்டுள்ளார். சனிக்கிழமை மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அவரது எட்டு பேரக்குழந்தைகளும் பிரித்தானிய அரச குடும்ப பரம்பரியப்படி இறுதி மரியாதையாக சவப்பெட்டியைச் சுற்றி காவல் நின்று (Vigil) தங்கள் கடமையை செய்தனர். இந்த நடைமுறையின்போது, இராணுவத்தில் பணியாற்றிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இளவரசர் வில்லியம் மற்றும் … Read more

குருவாயூர் கோவிலுக்கு அம்பானி நன்கொடை

திருச்சூர்: குருவாயூர் கோவிலுக்கு தொழிலதிபர் அம்பானி ரூ. 1.51 கோடி நன்கொடை அளித்தார். கேரளாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். இளைய மகன் ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவியுடன் வந்திருந்த அவர், கோவில் அன்னதான நிதியாக 1.51 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்தார். இந்நிலையில், கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘கோவில் வளாகத்தில் 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட … Read more

வங்கி மேலாளர் வீட்டில் கார் திருட்டில் ஈடுபட்ட பிரபல திருடன் நிக்சன் கைது: போலீஸ் விசாரணை

சென்னை : சென்னை கிழக்கு தாம்பரத்தில் வாங்கி மேலாளர் கிருபா வீட்டில் கைவரிசை கட்டிய பிரபல திருடன் நிக்சன் கைது செய்தனர். பிரபல திருடன் நிக்சன் மீது விருதுநகர், ராஜபாளையம் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது. கிருபா வீட்டை உடைத்து சென்றபோது எதுவும் சிக்காததால் வாயிலில் நின்றிருந்த காரை திருடி சென்றான். காரை திருடி சென்ற நிக்சனை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் தேடி வந்தது இந்நிலையில் பல்லாவரம் அருகே சுற்றிவளைத்தபோது காரை விட்டுவிட்டு … Read more

செயல்படாத 1,256 சங்கங்கள் கலைப்பு: புதுச்சேரியில் அதிரடி உத்தரவு| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு, செயல்படாமல் பெயரளவில் உள்ள 1,256 சங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளளன. இந்த சங்கங்களை கலைக்க, சங்கங்களின் பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரியில் கல்வி, கலை, இலக்கியம், பொது நலன் மேம்பாடு என பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, சங்கங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த சங்கங்கள், பதிவு சட்டத்தின்படி, அந்தந்த மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து, பதிவு செய்ய வேண்டும். 25 ஆயிரம் சங்கங்கள் கூட்டுறவு சங்கம், குடியிருப்போர் நலச் சங்கம், அடுக்குமாடி வீட்டு … Read more

இந்தியாவில் ஹைட்ரஜனில் இயங்குவது எப்போது? ரயில்வே அமைச்சர் தகவல்

உலகிலேயே முதல் முறையாக ஜெர்மனி ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் ரயில் சேவையை சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் ரயில்களுக்கு பதிலாக ஹைட்ரஜன் ரயிலை இயக்குவதால் புவி வெப்பமாகி வருவதை முற்றிலும் தடுக்க முடியும் என்றும் இந்த ரயில் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது என்றும் ஜெர்மனி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஜெர்மனியை அடுத்து இந்தியாவிலும் விரைவில் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் … Read more

“தி.மு.க அத்தியாயம் ஸ்டாலினோடு முடிவடைகிறது” – சொல்கிறார் ஹெச்.ராஜா

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டை திலகர் திடலில் பா.ஜனதா சார்பில் கபடி போட்டி நடைபெற்றது. இதில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திடீரென  வேட்டியை மடித்து கட்டி, களத்தில் இறங்கி கபடியும் ஆடினார். மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பனுடன் மல்லுக்கட்டினார். இது அங்கிருந்த பாஜவினர் அனைவரையும் உற்சாகமடைய செய்தது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ”இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸ் நிலையங்களில் … Read more

இறுதிச்சடங்கிற்கு முன் பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட ராணி எலிசபெத்தின் யாரும் கண்டிராத உருவப்படம்!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு முன்பு, இதுவரை யாரும் காணாத அவரது புதிய உருவப்படம் வெளியிடப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு வின்ட்சர் கோட்டையில் புகைப்படக் கலைஞர் ரனால்ட் மெக்கெக்னி இந்த படத்தை எடுத்தார். மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மகிழ்ச்சியுடன் சிறுக்கும் புதிய உருவப்படத்தை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மே மாதம் எடுக்கப்பட்டது. வின்ட்சர் கோட்டையில் வீட்டில் இருக்கும் போது ராணி சிரிப்புடன் பிரகாசமாக தோன்றுவதை … Read more