கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அனுமதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அனுமதி அளித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் அலுவலர் மற்றும் போலீஸ் கண்காணிப்பில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி: மதுபான விற்பனை அமோகமாக இருக்கப் போகிறது..!

கோடைக் காலத்தில் சிறப்பான வர்த்தக வளர்ச்சியைக் கண்ட மதுபான நிறுவனங்கள், அக்டோபர் மாதத்தில் பண்டிகைக் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. பொதுவாகப் பண்டிகை காலத்தில் கொண்டாட்டம் அதிகமாக இருக்கும், இப்போது மதுபானமும் முக்கியப் பங்கு வகிக்கும் காரணத்தால் இப்பண்டிகை காலத்தில் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க மதுபான நிறுவனங்கள் இலக்கு வைத்துள்ளன. தொற்றுநோய் குறைந்துள்ள நிலையில் கிட்டதட்ட 2 வருடத்திற்குப் பின்பு எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல் நடக்கும் முழுமையான பண்டிகை காலம் என்பதால் ஆடை, பட்டாசு, FMCG நிறுவனங்கள் … Read more

“கொடநாடு வழக்கை பயன்படுத்தி அதிமுக-வை அச்சுறுத்த முடியாது” – ஜெயக்குமார்

அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஆர்.எஸ்.பாரதி கருணாநிதி வீட்டில் கொத்தடிமை வேலை செய்தார். அதன் காரணமாக அவருக்கு பதவி என்ற பிச்சை கொடுக்கப்பட்டது. அதன் மூலம் வெளியே தெரிந்தவர் தான் ஆர்.எஸ்.பாரதி. இன்று அவர் கோடிக்கணக்கான சொத்துகளுக்கு அதிபதியாக இருக்கிறார். அவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் வழக்கறிஞராக இருந்து சேர்த்து வைத்த சொத்துக்களா?.. அது பற்றிய விவரங்களை வெளியிட முடியுமா? ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தை எவ்வளவு மோசமாக பேசினார் என்பது நாடே … Read more

கோவை காரமடையில் சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளான பெரியார் உணவகம் மீண்டும் திறப்பு…

கோவை: கோயமுத்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக விரோதிகளால்  தாக்கப்பட்ட பெரியார் உணவகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு  கோவை காரமடை அருகே கன்னார்பாளையத்தில் அருண் என்பவர் புதிதாக உணவகம் அமைத்து அதற்கு பெரியார் பெயரை சூட்டி பலகை வைத்திருந்தார். இந்த உணவகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். மர்ம நபர்கள் தாக்குதலில் காயம் அடைந்த அருண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இந்து மத … Read more

முதுகலை ஆசிரியர் பணியிட தேர்வு; மேலும் 13 பாடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் வெளியீடு

சென்னை: முதுகலை ஆசிரியர் பணியிட தேர்வு தொடர்பாக மேலும் 13 பாடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 பாடங்களுக்கான பட்டியல் வெளியான நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

கல்யாணத்தில் தேம்பி தேம்பி அழுத மாப்பிள்ளை! அதுக்கு காரணமே நண்பர்கள் தானாம்! அப்படி என்ன பண்ணாங்க!

News oi-Mohan S கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தந்தையின் புகைப்படத்தை சிறிய கட்அவுட்டாக நண்பர்கள் பரிசு அளித்ததால், உணர்ச்சி வசப்பட்ட மாப்பிள்ளை, தேம்பி தம்பி அழுத சம்பவம், அங்கிருந்த அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கீரி பாண்டு – கௌரி தம்பதியரின் மகன் அறிவழகன். தந்தை இழந்த அறிவழகனுக்கும், மதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13-ம் தேதி திருமணம் கோயில் ஒன்றில் நடைபெற்றது. கோயிலில் … Read more

லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு| Dinamalar

லண்டன்: பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் புறப்பட்டு சென்றார். பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத்,96 கடந்த 8-ம் தேதி வயது மூப்பு உடல்நலக்குறைவால் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மறையில் காலமானார். கடந்த 13-ந்தேதி லண்டன் கொண்டுவரப்பட்டது. செப்.19-ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் அருகே இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மாலை தனி விமானம் … Read more

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. எல்லா நாட்களும் பணத்தை எடுக்க முடியுமா?

மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு தற்போது இந்தியாவில் அதிகமாகி வருகிறது என்றும் ஒவ்வொரு ஆண்டும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும் தொகை அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் பணம் பாதுகாப்புடன் இருப்பது மட்டுமின்றி ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடுகளை விட அதிகமாக வருவாய் கிடைக்கிறது என்பதும் இதில் அதிகமானோர் முதலீடு செய்ய காரணமாக உள்ளது. இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் உடனடியாக பணத்தை திரும்ப எடுக்க முடியுமா? அல்லது … Read more

"சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார். சில உண்மைகள் இன்னும் வெளியில் வரவில்லை!"- ஆமிர் கானின் சகோதரர்

பாலிவுட்டில் வளர்ந்து வந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து போனார். தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். “சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்திதான் தற்கொலைக்குத் தூண்டினார். சுஷாந்தின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.15 கோடியை எடுத்துக்கொண்டார்!” என சுஷாந்த் சிங்கின் தந்தை வெளிப்படையாகவே புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வந்த நிலையில் … Read more

அறநிலையத்துறையில் தேர்வான 22 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: அறநிலையத்துறையில் செயல் அலுவலர்கள் பணிக்கு தேர்வான 22 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டின் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் காலியாகவுள்ள 22 செயல் அலுவலர் நிலை-1 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை, இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை முறையாக பராமரித்தல், பாதுகாத்தல் மற்றும் நிர்வகிக்கும் பணிகளை செயல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த செயல் … Read more