மரணமடைந்த ராணுவ மோப்ப நாய் ஜும்-க்கு ராணுவத்தினர் சிறப்பான இறுதி மரியாதை… வீடியோ

மரணமடைந்த ராணுவ மோப்ப நாய் ஜும்-க்கு ராணுவத்தினர் சிறப்பான இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்தனர். காஷ்மீரில் ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதிகள் சுட்டதில் ராணுவ மோப்ப நாய் ‘ஜும்’ நேற்று உயிரிழந்தது. அந்தநாக் பகுதியில் இறுதினங்களுக்கு முன்பு நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது தீவிரவாதிகளை மட்டுப்படுத்த அவர்கள் பதுங்கி இருந்த வீட்டுக்குள் ‘ஜும்’ அனுப்பிவைக்கப்பட்டது. ராணுவ மோப்பநாயைக் கண்டதும் தீவிரவாதிகள் அதனை துப்பாக்கியால் சுட்டனர் பின்னர் ராணுவத்தினருடன் நடந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். WATCH … Read more

துணை நடிகை சாந்தினி மருத்துவமனையில் அனுமதி

ராமநாதபுரம்: துணை நடிகை சாந்தினி மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சந்திக்க ராமநாதபுரம் சென்ற போது அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கி காயப்படுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.

ஆஸி.,யில் இந்திய மாணவர் மீது இனவெறி தாக்குதல்?: 11 முறை கத்திக்குத்து| Dinamalar

சிட்னி: ஆஸி.,யில் இந்திய மாணவர் ஒருவர் 11 முறை கத்தியால் குத்தப்பட்டார். அதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது இனவெறி தாக்குதல் என பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். உ.பி., மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் சுபம் கார்க்(28). சென்னை ஐஐடி.,யில் பட்டம் பெற்ற இவர், பிஎச்டி., படிக்க ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு நியூ சவுத்வேல்ஸ் பல்கலையில் படித்து வரும் நிலையில், கடந்த 6ம் தேதி ஏடிஎம் … Read more

“வாழ்நாளில் இரண்டு முறை மனமுடைந்து போனேன்..!" – கல்லூரி நிகழ்ச்சியில் கனிமொழி

கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற `Youth Talks’ என்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடம் உரையாடிய தி.மு.க எம்.பி கனிமொழி, தன் வாழ்வில் நடந்த பல சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, “இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள்தான் இளைஞர்களின் குரலாகவும் சமூக மாற்றத்தின் முன்னோடியாகவும் விளங்குகின்றன. டிஸ்லைக், அவதூறான கமென்ட் இதெல்லாம் நம்மைத் தீர்மானிக்க முடியாது. சமூக வலைதளத்தைப் பொழுதுபோக்குக்கு மட்டுமன்றி ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்த வேண்டும்” என்றார். கல்லூரி மாணவிகள் அதைத் தொடர்ந்து கனிமொழி மாணவர்களின் கேள்விகளுக்கு … Read more

மூளையை உருக்கும்… அந்த பகுதியில் ரஷ்யா அணு குண்டு வீசினால் இது தான் நடக்கும்

அணு ஆயுதம் பயன்பாடு என்பது கதிரியக்க சுனாமிகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை  உக்ரைன் நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்கும் விளாடிமிர் புடின், உலக நாடுகளுக்கும் சேர்த்தே எச்சரிக்கை விடுக்கிறார் கருங்கடல் பிராந்தியத்தில் குவிக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களால் விஷத்தன்மை கொண்ட மேக மூட்டம் உருவாகலாம் எனவும், இது அழுகிய முட்டையின் வாசனையில் இருக்கும் எனவும் நிபுணர்கள் தரப்பு வெளிப்படுத்தியுள்ளனர். கருங்கடலில் ஏற்கனவே ஹைட்ரஜன் சல்பைடு காணப்படுவதால், அப்பகுதியில் அணு ஆயுதம் பயன்பாடு என்பது கதிரியக்க சுனாமிகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை … Read more

பசும்பொன் தேவருக்கு பொருத்தப்பட்டும் தங்கக்கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும்….? எடப்பாடி தரப்பு புது முயற்சி….

சென்னை: பசும்பொன் தேவர் திருமகனுக்கு பொருத்தப்பட்டும் தங்கக்கவசம் தங்களிடம்தான் ஒப்படைக்கப்பட வேண்டும் என இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு வங்கியிடம் முறையிட்டு வரும் நிலையில், தங்கக்கவசம் கட்சியினரிடம் ஒப்படைக்கப்படுமா அல்லது மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தங்க கவசத்தைப் பெற எடப்பாடி தரப்பு புது முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தேசிய தலைவரான தேவர் திருமகனார் நினைவிடம், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ளது.  தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் … Read more

இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம், இந்தி மொழியை அல்ல: அமைச்சர் பொன்முடி

சென்னை: இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம், இந்தி மொழியை அல்ல; நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். நாளை தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும், மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும். நிரந்தர பேராசிரியர்கள்,கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் நடைமுறை விரைவில் தொடங்கும். உரிய தகுதி பெற்றவர்களே பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

“அண்ணாமலைக்கு களமும் தெரியாது, தரவும் தெரியாது!" – செந்தில் பாலாஜி தாக்கு

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் பரஸ்பரம் கருத்துமோதல் நடத்தி வருகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, பிரசாரத்தின்போது, ‘செந்தில் பாலாஜி பல்லை உடைப்பேன்’ என்று பேசியது சர்ச்சையானது. தொடர்ந்து, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சரானார். இந்த நிலையில், அண்ணாமலை, செந்தில் பாலாஜி மீது ஊழல் புகாரைத் தொடர்ந்து சுமத்திவருகிறார். பதிலுக்கு செந்தில் பாலாஜி அண்ணாமலையை, ‘படித்த முட்டாள், வேலைவெட்டி இல்லாதவர்’ என்றெல்லாம் கடுமையாக … Read more

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் நான்குபேரில் ஒருவர் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர் ஆவார். சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் வாழும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட சற்று அதிகரித்து 39 சதவிகிதமாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் வாழும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட சற்று அதிகரித்து 39 சதவிகிதமாகியுள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 1 சதவிகிதம் அதிகம் என்பது … Read more

ரெயில் முன் தள்ளி மாணவி கொலை – சோகத்தில் தந்தை தற்கொலை! குடும்பத்தினருக்கு சென்னை காவல் ஆணையர் ஆறுதல்…

சென்னை: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட நிலையில், அதனால்  சாகமடைந்த மாணவியின் தந்தை விஷம் குடித்து தற்கொலை கொண்டார். இதனால், சோகத்தில் தத்தளிக்கும் அந்த  குடும்பத்தினரை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ஓடும் ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது விசாரணையில், இருவரும் ஒரே பகுதியில் … Read more