உக்ரைன் மருத்துவ மாணவர்களுக்காக தனி இணையதளம்: உச்சநீதிமன்றம் உத்தரவு| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ இணையதளத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டனர். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும் போது, இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றார். புதுடில்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வியை இந்தியாவில் நிறைவு … Read more

சீனா வேண்டாம்.. திருப்பதி இருக்கு போதும்..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களும், எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுக்குமான வர்த்தகச் சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைய முடியாத போட்டி மிகுந்த இந்திய சந்தையில், உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களும், எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் தயாரிப்புக்கு மிகவும் முக்கியமான ஒன்று பேட்டரி. பேட்டரி தயாரிப்பில் பல முக்கிய மாற்றங்களையும் புதுமைகளையும் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் செய்து வருகிறது. ஆனால் இந்தியாவில் ஒரு லித்தியம் பேட்டரி தொழிற்சாலை கூட இல்லாத நிலையில் இந்திய தயாரிப்புகளை … Read more

பெண் பெயரில் ஃபேஸ்புக் ஐடி; நிர்வாண சாட்டிங் – பணம் கேட்டு மிரட்டியதால் இளைஞர் தற்கொலை!

புதுச்சேரி வாட்ஸ்-அப் குழுக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முன்பு பேசிய வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், “ஹாய் பிரண்ட்ஸ், ஃபேஸ்புக்கில் எனக்கு ஒரு பிரண்ட் மெசேஜ் செய்து, வீடியோ கால் செய்து நான் முழு நிர்வாணமாக இருந்தேன். அந்த வீடியோவை எனக்கே அனுப்பி மிரட்டி என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறான். அதனால் நான் சாகப் போகிறேன். அவர் நம்பரை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். அவனை விட்டுடாதீங்க ப்ரோ..” என்று முடிகிறது. அதையடுத்து அந்த இளைஞர் … Read more

மகாராணியின் இறப்பிற்கு காரணம் என்ன? முதல்முறையாக கசிந்துள்ள ஒரு தகவல்

மகாராணி எலிசபெத் எலும்பு பிரச்சனை காரணமாக இறந்ததாக கூறும் Lady Colin Campbell. Lady Colin Campbell அரச குடும்ப வரலாற்று ஆய்வாளர் ஆவார். பிரித்தானிய மகாராணி எலிசபெத் எலும்பு தொடர்பான பிரச்சனையால் உயிரிழந்தார் என அரச குடும்ப வரலாற்று ஆய்வாளர் Lady Colin Campbell தெரிவித்துள்ளார். ராணியார் கடந்த 8ஆம் திகதி அமைதியாக உயிரிழந்தார் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு என்ன உடல்நலப்பிரச்சனை இருந்தது என்பது தொடர்பில் தற்போது அரச குடும்ப வரலாற்று ஆய்வாளர் Lady Colin Campbell … Read more

10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் வகையில் புதிய டைடல் பார்க்! தொழில்துறை மதுரை மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: 10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் வகையில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என இன்று மதுரையில் நடைபெற்ற, மதுரை மண்டல தொழில்துறை மாநாட்டில் பேசிய  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” எனும் … Read more

முறையாக பணி செய்யாமல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் முறையாக பணி செய்யாமல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப போக்குவரத்துத் துறை செயலாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

'நட்பு நாடுகள் கூட எங்களை பிச்சைக்காரர்கள் என நினைக்கிறாங்க'.. புலம்பும் பாகிஸ்தான் பிரதமர்

International oi-Mani Singh S இஸ்லாமாபாத்: ”நட்பு நாடுகள் கூட நம்மை பிச்சைக்காரர்கள் என இப்போது நினைக்க தொடங்கி விட்டனர் என்றும், நமது நட்பு நாட்டிற்கு நாம் சென்றாலோ அல்லது போன் செய்தாலோ கூட.. பணம் கேட்டு பிச்சை எடுக்க வந்துவிட்டார்கள் என்பதே அவர்களின் நினைப்பாக உள்ளது என்றும்” பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத கனமழை பெய்ததால், நாட்டின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. குறிப்பாக அந்நாட்டின் மூன்றில் … Read more

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் ‛அம்பேத்கரும் மோடியும்’ புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (செப்.,16) வெளியிட்டார். டில்லியில் ‘புளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனம் சார்பில், ‘அம்பேத்கரும் மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல் வீரர்களின் நடவடிக்கையும்’ என்ற ஆங்கில புத்தகம் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான இளையராஜா அணிந்துரை எழுதியிருந்தார். புத்தகத்தில், அம்பேத்கரின் லட்சியங்களுக்கும் புதிய இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்துக்கும் இடையிலான … Read more

உலகின் டாப் பில்லியனர்கள் லிஸ்டில் 2வது இடத்தில் கெளதம் அதானி.. முதலிடம் எப்போது?

ஆசியாவின் முதல் பணக்காரரும், உலகின் மூன்றாவது பெரிய பில்லியனருமாக இருந்து வந்த இந்திய தொழிலபதிர் கெளதம், தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இது அதானி குழும பங்குகள் தொடர்ந்து நல்ல ஏற்றம் கண்டு வரும் நிலையில், இந்த முன்னேற்றமானது ஏற்றம் கண்டுள்ளது. போர்ப்ஸ்-ன் ரியல் டைம் அறிக்கையின் படி, அதானியின் நிகர மதிப்பு 155.7 பில்லியன் டாலராகும். இது 5.5 பில்லியன் டாலர் அல்லது கிட்டதட்ட 4% ஏற்றத்தில் உள்ளது. மதுரை, தூத்துக்குடி, விருதுநகர்-க்கு ஜாக்பாட்.. ஸ்டாலின் … Read more

“தமிழ்நாட்டில் 4 முதலமைச்சர்கள் இருக்கின்றனர்… ஸ்டாலின் பொம்மை முதல்வர்” – எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் மின்கட்டண உயர்வு அறிவிப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “திமுக அரசு பொறுப்பேற்று … Read more