“சி.வி.சண்முகத்துக்கும் எனக்கும் இடையே சிண்டு முடியப் பார்க்கிறார்கள்!’’ – கே.பி.முனுசாமி
அதிமுக எம்.எல்.ஏ-வும் அந்தக் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், ‘‘உங்களுக்கும் சி.வி.சண்முகத்துக்கும் ‘ஈகோ’ பிரச்னை நிலவுவதாகவும், அதனால் எடப்பாடி பழனிசாமியை நீங்கள் சந்திக்கச் செல்லவில்லை என்ற தகவல் உலாவுகிறதே?’’ என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘“விஷமத்தனமான இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கே நான் வெட்கப்படுகிறேன். கொள்கைப்பிடிப்புடைய ஒரு தொண்டன் நான். சி.வி.சண்முகம் என்னுடைய தம்பியைப் போன்றவர். அவர் மீது கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான எண்ணம் எந்த … Read more