குவைத் நாட்டில் உயிரிழந்த முத்துக்குமரனின் உடலுக்கு அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி
திருச்சி: குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரனின் உடல் திருச்சி கொண்டுவரப்பட்டது. வீட்டு வேலைக்காக குவைத் சென்ற முத்துக்குமரனுக்கு பணி கொடுக்காமல் ஒட்டகம் மேய்க்க சொன்னதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மன உளைச்சலில் இருந்த முத்துக்குமரன் தாயகம் திரும்ப முயற்சி செய்துவந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். முத்துகுமரனின் உடலுக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.