இந்தியர் கைக்கு வரும் மற்றொரு அமெரிக்க நிறுவனம் ‘ஸ்டார்பக்ஸ்’..!

அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்களுக்கு இந்தியர்கள் சிஇஓ-வாக இருக்கும் வேளையில் தற்போது புதிதாக ஒரு மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியம் இந்தியர் கைகளுக்கு வந்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்களின் நிர்வாகத் திறன் மீது அதிகளவிலான நம்பிக்கை வைத்திருக்கும் காரணத்தாலும், அதை இந்தியர்கள் பல முறை நிரூபித்துக் காட்டுவதாலும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் இந்தியர்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு ரஷ்யா உட்பட உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் … Read more

இப்படியும் நடந்ததா? – நள்ளிரவில் வீட்டின் மீது விழுந்த கற்கள்; பில்லி சூனியமா? விலகாத மர்மம்!

சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது. இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும். இப்படியும் நடந்ததா? ஜூன் 11, … Read more

தயாரிப்பாளருடன் மறுமணம்! பிரபல நடிகை வெளியிட்ட மிக உருக்கமான பதிவு இதுதான்

சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துள்ள நிலையில், மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. நடிகை மகாலட்சுமி சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்பு நடிகையாக வலம் வரும் இவர் வெள்ளித்திரையிலும் தற்போது நடிக்க ஆரம்பித்துள்ளார். மகாலட்சுமியின் இரண்டாம் திருமணம் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த நிலையில் இவர் தன்னுடைய முந்தைய வாழ்க்கையை மறந்து புது வாழ்க்கையில் அடி எடுத்து வைத்திருப்பதற்கு … Read more

‘மாயாஜால்’ தியேட்டருக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தனியார் திரையரங்கு வாகன நிறுத்தத்துக்கு வழங்கப்பட்ட, 2 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், பிரபலமான திரையரங்கான  ‘மாயாஜால்’ திரையரங்கு மற்றும் பொழுதுபோக்கு பூங்கா  செயல்பட்டு வருகிறது. அந்த திரையரங்கு அமைந்துள்ள நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள 2 ஏக்கர் இடம், அந்த தியேட்டரின் வாகன நிறுத்தமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது .அரசுக்கு சொந்தமான இந்த … Read more

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி: காலிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் பிரணாய்

ஜப்பான்: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரணாய் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதிக்கு முந்தய சுற்றில் முன்னாள் உலக சாம்பியன் கியனை பிரணாய் வீழ்த்தினார்.

ஐடி ஊழியர்கள் எடுக்கும் அதிரடி முடிவு.. அட்ரிஷன் அதிகரிக்க இது தான் காரணமா?

ஐடி நிறுவனங்களில் சமீபத்திய காலாண்டுகளாகவே அட்ரிஷன் விகிதமானது மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றது. இது ஐடி நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. குறிப்பாக ஐடி ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள அதிக செலவிடும் நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதனால் பல நிறுவனங்களும் மார்ஜின் விகிதத்தில் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன. நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களாக டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட ஐடி ஜாம்பவான்களும், இத்தகைய பிரச்சனையை எதிர்கொண்டுள்ளன. கிட்டதட்ட 2 மாத சரிவில் தங்கம் விலை.. இன்று … Read more

“திருத்தணியில் 10 ரூபாய் உப்பும் மிளகும் அற்புதம் செய்யும்” – காதல் சரண்யா வீட்டு வி.ஐ.பி பூஜை அறை!

‘ஆன்மிகம் என்பது நம்மை மட்டும் சார்ந்ததாக நிச்சயம் கிடையாது.. நான் என்றைக்குமே எனக்காக மட்டும் வேண்டிக் கொண்டதில்லை. எல்லாருக்காகவும் வேண்டிப்பேன்!’ எனப் புன்னகைத்தார், ‘காதல்’ படத்தின் மூலம் நமக்கு அறிமுகமான சரண்யா. இவர் தன் வாழ்வில் திருத்தணி முருகன் நிகழ்த்திய ஒரு அற்புதத்தையும் தன் வீட்டு பூஜை அறை பொக்கிஷம் குறித்தும் நம்மோடு பேசினார். “திருத்தணி முருகன் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சில ஆண்டுகளுக்கு முன்பு என் கையில் அலர்ஜி காரணமாகப் பெரிய காயம் மாதிரி வந்தது. … Read more

உலகளவில் 60.85 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.97 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 58.48 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விக்கடன் வருங்கால தலைமுறையினர் மீதான முதலீடு: முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்

சென்னை: கல்விக்கடன் வருங்கால தலைமுறையினர் மீதான முதலீடு என முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஒன்றிய அரசின் அலட்சிய போக்கால் கடந்த 8 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படவில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

4ம் தேதி சண்டே மார்க்கெட்டை மூட நகராட்சி ஆணையர் வேண்டுகோள்| Dinamalar

புதுச்சேரி : ‘புதுச்சேரியில் வரும் 4ம் தேதி விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் செல்வதையொட்டி சண்டே மார்க்கெட் கடைகளை வைக்க வேண்டாம்’ என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி கமிஷனர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வரும் 4ம் தேதி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைக்கப்பட உள்ளது.இந்த ஊர்வலம் செல்லும் வழித்தடங்களில், போக்குவரத்து தடையின்றி செல்ல ஏற்பாடு செய்திட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, … Read more