தங்கம் விற்பனை அமோகம்.. தீபாவளி-க்கு முன்பே இப்படியா..?

ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை 4 சதவீதம் வீழ்ச்சியடைந்து 10 கிராமுக்கு ₹50,400 ஆக இருந்தது இதன் மூலம் இந்தியாவில் பண்டிகைக் காலத்துக்கு முன்னதாகத் தங்கத்தின் விற்பனை சூடுபிடித்துள்ளது. மலபார் கோல்ட் & டயமண்ட்ஸ், சென்கோ கோல்டு & டயமண்ட்ஸ் மற்றும் ஜோய் அலுக்காஸ் போன்ற முன்னணி தங்க நகை சில்லறை விற்பனையாளர்கள் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கடைகளுக்கு எதிர்கொண்டு உள்ளனர். மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்திப் பண்டிகையையொட்டி தங்கம் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், சராசரி … Read more

இரட்டை தலை ஆமையின் 25-வது பிறந்த நாள்! இரண்டு தலைகளும் வெவ்வேறு குணாதிசயங்கள்…

ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளைப் போல, சுவிட்சர்லாந்தில் இரண்டு தலைகளைக் கொண்ட ஆமை ஒன்று உள்ளது. இரண்டு தலைகளைக் கொண்ட ரோமானிய கடவுளான `ஜானஸ்’ என்ற பெயர், இந்த ஆமைக்கு சூட்டப்பட்டுள்ளது. ஜெனீவாவில் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தில் உள்ள இந்த ஆமைக்கு, தேவையான அனைத்து உபசரிப்புகளும் அங்கேயே பூர்த்தி செய்யப்படுகிறது. `இதற்குப் பேசாமல் நாமும் ஆமையாகவே பிறந்திருக்கலாம்’ என்பதுபோல அங்குள்ளவர்கள் ஜானஸை கவனித்து கொள்கின்றனர். Green Tea அதி தீவிர `வீகன்’ உணவு, இறந்துபோன குழந்தை, தாய்க்கு … Read more

படகில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல திட்டமிட்ட 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது

இலங்கையில் இருந்து 11 பேர் படகு மூலம் தமிழகத்திற்கு மிக நெருக்கமாக உள்ள கேரள பகுதிக்கு முதலில் வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்து கடல் மார்க்கமாக நேரடியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்த 11 இலங்கையர்கள் தங்கும் விடுதியில் இருந்து கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து தப்பி இந்தியாவிற்கு வந்த அவர்கள் கேரளாவில் தங்கியிருப்பதாக, தமிழக கியூ பிராஞ்ச் பொலிஸாருக்கு முதலில் தகவல் கிடைத்தது. Representative … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்ந்து 59,251 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்ந்து 59,251 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 125 புள்ளிகள் உயர்ந்து 17,664 புள்ளிகளில் வணிகமாகிறது.

ரேஷனில் பொருள் வாங்குவது போல.. எம்எல்ஏக்களை வாங்கும் பாஜக.. நம்பிக்கை வாக்கெடுப்பில் விளாசிய சோரன்

India oi-Halley Karthik ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக அம்மாநில முதலமைச்சர் ஹேமந் சோரன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தற்போது இம்மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாக குற்றச்சாட்டு மேலெழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஹேமந்த் சோரன் மீது நடவடிக்கை எடுக்க மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்து. இந்நிலையில் … Read more

இந்திய கிரிக்கெட் வீரர் பற்றி விக்கிபீடியாவில் அவதூறு: பாக்., ரசிகர்கள் துவேஷம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஆசியக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேட்சை தவறவிட்ட இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங்கை பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர் காலிஸ்தானை சேர்ந்தவர் என விக்கிபீடியாவில் அவர்கள் மாற்றியிருந்தனர். இதனை பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்கள் செய்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து விக்கிபீடியா அதிகாரிகளுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் … Read more

10 நாட்களில் விற்று தீர்ந்துவிட்ட லம்போகினி புதிய ஸ்போர்ட்ஸ் கார்.. டெலிவரி எப்போது?

லம்போர்கினி ஹுராகன் டெக்னிகா என்ற புதியவகை கார் அறிமுகப்படுத்தப்பட்ட 10 நாட்களுக்குப் பிறகு விற்றுத் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த மாடலின் டெலிவரி அடுத்த ஆண்டு முதல் காலாண்டு இறுதியில் அல்லது இரண்டாம் காலாண்டு தொடக்கத்தில் தான் டெலிவரி செய்யப்படும் என்று இந்தியாவின் லம்போர்கினி கார் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய மாடல் கார் இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து லம்போர்கினி மேலும் சில மாடல்களை அறிமுகம் … Read more

`கொலை செய்ய வைக்குமா பொறாமை உணர்வு?' – காரைக்கால் சோகம்… நிபுணர் கருத்து!

‘படிப்பில் என் மகளை முந்துவதா’ – இந்தப் பொறாமை எண்ணத்தால், மகளுடன் படிக்கும் 13 வயது மாணவனுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ளார் பெண் ஒருவர். காரைக்காலை அடுத்த நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருகிறார்கள் ராஜேந்திரன் – மாலதி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண்ணும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களின் இரண்டாவது மகன் பாலமணிகண்டன் படிப்பு, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியுள்ளான். வீட்டுக்கு அருகிலுள்ள தனியார் பள்ளியில் … Read more

பிரித்தானியாவில் எதிர்காலத்தை தீர்மானிக்க திணறும் இலங்கை இளம்பெண்: அகதிகளை கைவிடும் பிரித்தானிய கல்விமுறை

பிரித்தானிய கல்விமுறை அகதிகளுக்கும், புகலிடம் கோருபவர்களின் பிள்ளைகளுக்கும் ஆதரவளிக்கத் தவறிவருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, அடுத்த கல்வியாண்டில் இணைவதற்காக இந்த மாணவர்கள் நீண்ட காலம் காத்திருக்கவேண்டியுள்ளது. பிரித்தானிய கல்விமுறை, உயர் கல்வி கற்க விரும்பும் அகதிகளுக்கும், புகலிடம் கோருபவர்களின் பிள்ளைகளுக்கும் ஆதரவளிக்கத் தவறிவருவதாக தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. தங்களிடம் ஒன்லைன் வாயிலாக கல்வி தொடர்பில் உதவி கோரி வரும் அகதிகள் மற்றும் புகலிடம் கோரும் இளைஞர்களின் எண்ணிக்கை சமீபத்தைய சில ஆண்டுகளாகவே குறிப்பிடத்தக்க … Read more

ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு…

திருவனந்தபுரம்: கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு  நாளை (செப்டம்பர் 6ஆம் தேதி)  மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துஉள்ளது. கேரளாவில் கொண்டாடும் ஓணம் பண்டிகையான,  திருவோணம் பண்டிகை செப்டம்பர் 7முதல் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. செப்டம்பர் 8இல் கொண்டாடப்படு கிறது. இதையொட்டி அம்மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது, ஓணம் பண்டிகையையட்டி,  தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் வரும் 8ம் தேதி … Read more