லக்னோ நகரில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 9 பேர் பலி

India bbc-BBC Tamil உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். லக்னோவில் உள்ள தில்குஷா எனும் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். பெங்களூரூ வெள்ளம்: ஐ.டி. தலைநகர் நீரில் மூழ்கியபோது குடும்பங்கள் உதவிக்கு போராடியது எப்படி? கேரள பெண் விஞ்ஞானி அன்னா மணி யார்? … Read more

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க.. நல்ல திட்டம்.. நிலையான வருமானம்..!

பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்பது முதியோர்களைப் பாதுகாப்பதற்காகவும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMF) சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்ட மத்திய அரசு திட்டமாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 60 வயதை அடைந்த பிறகு குறைந்தபட்சம் 3,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவார் என்பதால் வறுமையில் இருக்கும் பல கோடி விவசாயிகளை இத்திட்டம் மூலம் பலன் பெற முடியும். இந்தத் திட்டத்தில் யாரெல்லாம் முதலீடு செய்ய முடியும்..? எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்..? போன்ற … Read more

பிடிவாத EPS…திகைப்பில் பாஜக!-'பொம்மை முதல்வர்' – தமிழிசை வருத்தம்-'டயட்' சரியா?|விகடன் ஹைலைட்ஸ்

இறங்கி வர மறுக்கும் இ.பி.எஸ்… கையைப் பிசையும் பாஜக! அமித் ஷா, மோடி எப்போதுமே 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு மேல் உள்ளபோதிலும், தேர்தலை எதிர்கொள்வதற்கான களப்பணிகளை இப்போதிருந்தே தொடங்க ஆயத்தமாகி விட்டது திமுக. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக… விருதுநகரில் நேற்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ” ஜி.எஸ்.டி, நீட் தேர்வுகள் மூலம் நம் நிதி, கல்வி உரிமை பறிக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் சட்டங்கள் அனைத்தும் … Read more

உக்ரைனில் இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைக்க மத்தியஅரசு உதவும்! உச்சநீதிமன்றத்தில் தகவல்

டெல்லி:  உக்ரைனில் இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைப்பதை மத்தியஅரசு உறுதி செய்யும் என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர முடியாது என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து விட்டது. இதனால் உக்ரைன் ரிட்டன் மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களின் கல்விக்கு உதவிபுரியுறுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை பரிசிலிக்க உச்சநீதிமன்றம் மத்திய … Read more

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரை

புதுச்சேரி: புதுச்சேரியில், காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

\"உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது நியாயம்தான்..\" சொல்வது போப் ஆண்டவர்

International oi-Jackson Singh வாடிகன்: “உக்ரைனுக்கு சில நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது நியாயப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்” என்று கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். பொதுவாக, உலகில் எங்கேனும் போர் நடந்தால், அதன் உள் விவகாரங்களில் தலையிடாமல் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றுதான் போப்பாக பதவி வகிப்பவர்கள் கூறுவார்கள். ஆனால், போர் பிரான்சிஸ் உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைன் – ரஷ்யா போர் 6 மாதங்களையும் தாண்டி நடைபெற்று வருகிறது. இதில் … Read more

3 இன்ச்-க்காக 6 லட்சம் செலவு செய்யும் டெக் ஊழியர்கள்.. இப்ப இதுதான் டிரெண்ட்..!

உலகளவில் காஸ்மெட்டிக் சர்ஜரி தாக்கம் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, கடந்த சில வருடங்கள் முன் வரையில் பெண்கள் மட்டுமே இதில் இருந்த நிலையில் தற்போது ஆண்களும் அதிகளவில் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்யத் துவங்கியுள்ளனர். குறிப்பாகப் பெரிய நிறுவனங்களில் அதிகச் சம்பளம் வாங்குவோர் தங்களது ப்ரொபஷனல் வாழ்க்கையைத் தொடர்ந்து மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவது போல, தங்களுடைய தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் சர்ஜரி செய்கின்றனர். அப்படி ஆண்கள் கடந்த 2 வருடத்தில் அதிகப்படியாகச் … Read more

“மோடி, நிரூபியுங்கள் அல்லது அதானியின் அறிவுரைப்படி சீனாவிடம் சரணடையுங்கள்!" – சுப்பிரமணியன் சுவாமி

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லைப்பிரச்னையென்பது, கடந்த சில மாதங்களாகவே பெரிய அளவில் பேசுபொருளாகிவருகிறது. அதுவும், இந்திய-சீன எல்லையில், சீனா தனி கிராமம் ஒன்றை உருவாக்கியிருப்பது செயற்கைக்கோள் படங்கள் வாயிலாகத் தெரியவர அது இன்னும் பிரச்சினையைக் கிளப்பியது. மோடி அதைத் தொடர்ந்து அரசியல் எதிர்க்கட்சிகள் பலவும் ஆளும் பா.ஜ.க-வைச் சாடிவந்தன. அதோடு காங்கிரஸும், `இந்திய நிலத்தை மோடி சீனாவுக்குத் தாரைவார்த்துவிட்டார்’ என விமர்சனம் செய்துவந்தது. இந்த நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமியும், தற்போது இந்த … Read more

சீனாவின் 42 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ….

பிஜிங்: சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கட்டிடத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீனாவின் ம த்திய ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷா நகரில் உள்ள 42 மாடிகள் கொண்ட சீனா டெலிகாம் கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீ பிடித்தது. அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சைனா டெலிகாம் அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்கி  வருகிறது. … Read more

திமுக ஆட்சியை அனைத்து தரப்பிலும் பாராட்டுகிறார்கள்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: திமுக ஆட்சியை அனைத்து தரப்பிலும் பாராட்டுகிறார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15 மாதங்களை கடந்து சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. சொத்து வரி உயர்வு குறித்து பல பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி. சொத்து வரி உயர்த்தாவிட்டால் மானியங்கள் நிறுத்தப்படும் என்று ஒன்றிய அரசு கூறியது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.