இதயம் கனக்கும் தீபாவளி… தீபாவளியை கொண்டாட தயாராகும் சாமானிய மக்கள்…

கடந்த மாதம் 340 ரூபாய் விற்ற ஒரு கிலோ நல்லெண்ணய் இந்த மாதம் 377 ரூபாயாக அதிகரித்துள்ளது ஆகஸ்ட் மாதம் இதே எண்ணெய் ஒரு கிலோ ரூபாய் 325 க்கு விற்றது இந்த அதிரடி விலையேற்றம் சாமானியர்களின் இதயத்தை கனக்க வைத்திருக்கிறது. அரிசி பருப்பு முதல் மின்சார கட்டணம் வரை அனைத்தும் விலை ஏற்றம் பெற்றுள்ளது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத தீபாவளி தமாக்கா இந்த ஆண்டு மின் கட்டண உயர்வால் கிடைத்திருக்கிறது. தீபாவளி … Read more

தென்காசியில் 4 பேருக்கு எலிக்காய்ச்சல்

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் அருகே 4 பேருக்கு எலிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. எலிக்காய்ச்சல் உறுதியானதை தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஜெய்ப்பூர் அரண்மனையில் நடிகை ஹன்சிகாவுக்குத் திருமணமா? டிசம்பரில் குறிக்கப்பட்ட தேதி!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ‘சின்ன குஷ்பு’ என்று தமிழ்நாட்டில் தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்காகத் தன்னார்வல அமைப்பு மற்றும் ஒரு காப்பகத்தையும் நடத்தி வருகிறார். சில குழந்தைகளின் படிப்புச் செலவை ஹன்சிகாவே ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் ஹன்சிகா மிகவும் அழகாக ஓவியங்கள் வரைபவர், தான் … Read more

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? இந்த நான்கு பானங்களை தவறாமல் எடுத்து கொண்டாலே போதும்!

 பொதுவாக பருவநிலை மாறுவதால் பொதுவாக உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தினசரி ஏற்படும் வானிலை மாற்றத்தால் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பவர்கள் எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த வேண்டும். அந்தவகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு சில எளிய பானங்கள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம். இஞ்சியை தோல் சீவி நறுக்கி கொள்ளவும். துளசி இலைகளை சுத்தமாக கழுவி … Read more

சர்க்கரை ஆலை நிலுவைத்தொகை கேட்டு போராட சென்ற விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்பட பல விவசாயிகள் கைது!

திருச்சி; சர்க்கரை ஆலை நிலுவைத்தொகை உடனே வழங்க வலியுறும்தி அரசுக்கு எதிராக  போராட சென்ற விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்பட  விவசாயிகள்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஏராளமான சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக விருத்தாசலம், சித்தூர் ஆகிய ஊர்களில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகளில் விவசாயிகள் கொடுத்த கரும்புக்கு உரிய பணம் இதுவரை கொடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  கடந்த 2016 ஆண்டிலிருந்து இன்று வரை  35 … Read more

ஆண்டுக்கு 2 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக தரப்படும் என குஜராத் அரசு அறிவிப்பு

சூரத்: ஆண்டுக்கு 2 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக தரப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. இமாச்சலுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிடுவதற்காக குஜராத்தில் மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது

பெரும்பாலான முதலிரவில் முழுமையான உறவு நிகழ்வதில்லை; காரணங்களும் தீர்வுகளும்! #VisualStory

முதலிரவில் முழுமையான தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லையென்றால், அது குறித்து இன்றைய இளம் தலைமுறையினர் பலர் மிகவும் அச்சம், சோர்வு கொள்கிறார்கள். Marriage பெற்றோர் செய்து வைத்த திருமணம் என்றாலும், காதல் திருமணமாக இருந்தாலும், இளம் தம்பதி ஆர்வத்துடன் காத்திருப்பது முதலிரவுக்காகத்தான். முதலிரவுக்காகவும், முதல் உறவுக்காகவும் ஏங்குவதே மனித இயல்பு. இப்படி நிகழ்ந்தால் இயல்பாக இருக்கிறார்கள் என அர்த்தம். love couple ஆனால், திருமணமான அனைத்து தம்பதிகளுக்குமே, முதலிரவு முழுமையாக நிகழ்ந்திருக்கும், தாம்பத்திய உறவு சக்சஸ்ஃபுல்லாக நிறைவுற்றிருக்கும் … Read more

பசும்பொன் தேவர் தங்க கவசத்தை நானே எடுத்து செல்வேன்! காந்தி மீனாள்

கமுதி : பழனிசாமியும் வேண்டாம். பன்னீர்செல்வமும் வேண்டாம். தங்க கவசம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தந்தது. அதனால் நானே எடுத்து செல்ல அனுமதி கேட்பேன்,” என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் தெரிவித்துள்ளார். பசும்பொனில் தேவரின் 60வது குருபூஜை மற்றும் 115வது ஜெயந்தி விழா அக்., 28, 29, 30 ல் நடக்கிறது. அங்குள்ள தேவர் சிலையை மெருகூட்டும் வகையில், கடந்த  2014ம் ஆண்டு,  அ.தி.மு.க., சார்பில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 13.5 … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: பச்சை நிறமாக மாறிய கடல்; காரணம் என்ன?

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அருகில் பெரிய கடற்கரை உள்ளது. இந்தக் கடற்கரையின் அருகில் நடை பயிற்சி மேடை, சிறுவர் பூங்கா, மாதா ஆலயம் உள்ளிட்டவைகள் உள்ளதால் இந்தக் கடற்கரை பகுதிதான் உள்ளூர் மக்களின்  பொழுதுபோக்கு தலமாக உள்ளது. இங்கிருந்து 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இந்த நிலையில், இன்று வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. மேலும், கடல் அலைகளும் அதிக ஆர்ப்பரிப்புடனும் ஆக்ரோஷ்மாகவும் காணப்பட்டது. இதனால், கடற்கரையின் அருகில் … Read more