நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகளிடம் இருந்து தற்போது வரை எந்த ஒரு விளக்கமும் வரவில்லை!

சென்னை: 6ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்தாரா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகளிடம் இருந்து தற்போது வரை எந்த ஒரு விளக்கமும் வரவில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. ஆனால், இரட்டை குழந்தை விவகாரம் குறித்து நயன் தம்பி நேற்று (ஞாயிறு) விசாரணைக் குழுவிடம் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக பிரபல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. ஆனால், இன்று தங்களிடம் எந்தவொரு தகவலும் வரவில்லை  சுகாதாரத்துறை மறுத்துள்ளது. இது  சலசலபை ஏற்படுத்தி … Read more

கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கில் நவ.7-ம் தேதி இறுதி விசாரணை

சென்னை: கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கில், நவ.7-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திமுக எம்.எல்.ஏ. எழிலன் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

9 மணிநேரம் மூளை அறுவை சிகிச்சை… சாக்ஸபோன் வாசித்தபடி ஒத்துழைத்த நோயாளி!

போராட்டங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை. அந்தப் போராட்டங்களிலும், எந்தளவுக்கு மனோதிடத்துடன், சந்தோஷமாக அச்சூழலை எதிர்கொள்கிறோம் என்பதுதானே முக்கியம். அப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம்தான் சமீபத்தில் அரங்கேறி உள்ளது. இத்தாலியில் GZ என அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு, ரோமில் உள்ள பைடியா என்ற சர்வதேச மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டது. இந்தச் சிகிச்சையின்போது இவரின் நரம்பியல் செயல்கள் தொடர்ந்து செயல்பட, இவர் விழித்திருக்க வேண்டும். இந்த அறுவை சிகிச்சை, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டாக்டர் கிறிஸ்டியன் ப்ரோக்னா … Read more

பலரும் கண் வைத்ததால் இப்படி ஆகிவிட்டது! சமீபத்தில் மகாலட்சுமியை மணந்த ரவீந்தர் வருத்தம்… காரணம் இதுதான்

எல்லோரும் கண் வைத்ததால் இப்படி ஆகிவிட்டது என ரவீந்தர் புலம்பியபடி வீடியோ வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும், நடிகை மகாலட்சுமிக்கும் திருமணம் நடந்தது பெரியளவில் வைரலானது. இதையடுத்து தம்பதிகள் பல்வேறு தளங்களில் பேட்டி கொடுத்தபடி இருந்தனர். இந்த நிலையில் பலரும் கண் வைத்து விட்டதால்தான் தனக்கு ஒரு வாரம் உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது என்று ரவீந்தர் வருத்தத்துடன் கூறி இருக்கிறார். news18 அதன்படி மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்ததால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து ரிவ்யூ … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் சொத்து வாடகை வசூலிக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி விதித்த அபராதத்தை எதிர்த்து ஆணையர் மேல்முறையீடு செய்திருந்தார்.

மும்பை சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளரை திரும்ப பெற்ற பாஜக – என்ன காரணம் தெரியுமா?!

மும்பையில் அந்தேரி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.ரமேஷ் காலமானதால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு வேட்பு மனுத்தாக்கல் ஏற்கனவே முடிந்திருந்தது. இன்று வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். வரும் 3-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. சிவசேனா சார்பாக ரமேஷ் மனைவி ருதுஜாவும், பாஜக சார்பாக முர்ஜி பட்டேலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்தனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ருதுஜாவை வேட்பாளராக நிறுத்தவிடாமல் தடுக்க பாஜகவும், ஏக்நாத் ஷிண்டேயும் முயற்சி செய்து பார்த்ததாக … Read more

அந்தியூரில் வெள்ளம் பாதித்த இடங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

அந்தியூர்: அந்தியூரில் வெள்ளம் பாதித்த இடங்களில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி நேரில் ஆய்வு செய்தார். அண்ணாமடுவு, அந்தியூர் பெரிய ஏரி, கெட்டி சமுத்திரம் ஏரி உள்ளிட்ட இடங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்: பணிநீக்கம் செய்யப்பட்ட விடுதி காப்பாளரை மீண்டும் பணியமர்த்தக் கோரி மாணவிகள் போராட்டம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி இயங்கிவருகிறது. இந்த விடுதியில் 75 மாணவிகள் தங்கி அருகேவுள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதி மாணவிகள் சிலர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கடந்த மாதம் புகார் எழுந்தது.  அதனடிப்படையில், சமூக பாதுகாப்புத்துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தனர். இதையடுத்து, பழநி அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர் உட்பட 4 பேரைக் கைதுசெய்தனர். இதற்கிடையே, “விடுதி முறையாக நடத்தப்படவில்லை. காப்பாளர், காவலாளியே மாணவிகள் தவறாக … Read more

இலங்கை 'இந்து தமிழர்கள்' இந்திய குடியுரிமை பெறலாம்! சென்னை உயர்நீதிமன்றம்

இலங்கையில் துன்புறுத்தப்படும் இந்து தமிழர்கள் CAA சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெறலாம்: சென்னை உயர்நீதிமன்றம். இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த இலங்கையைச் சேர்ந்த அபிராமி, 29, தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அக்டோபர் 16, ஞாயிற்றுக்கிழமை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், 2019 குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் கொள்கைகளை, இலங்கையை கைவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்துத் தமிழர்களுக்குப் பயன்படுத்தலாம் என்று கூறியது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் ஒற்றை நீதிபதி பெஞ்ச், இலங்கை CAA-ன் கீழ் … Read more

அதிமுகவுக்கு சரியான வழிகாட்டி இல்லை! அன்வர்ராஜா ஆதங்கம்

சென்னை: அதிமுகவுக்கு சரியான வழிகாட்டி இல்லை என்றும், சரியான வழிகாட்டி இன்றி  அ.தி.மு.க தொண்டர்கள் தவிக்கிறார்கள் என அதிமுகவில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டுள்ள அன்வர்ராஜா  தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக, எடப்பாடி, ஒபிஎஸ் என இரு பிரிவாக உள்ளனர்.  அதிமுகவில் உள்ள மொத்த எம்எல்ஏக்கள் 65 பேரில்,  எடப்பாடி பழனிச்சாமிக்கு 61 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளன. ஆனால், ஓபிஎஸ்-க்கு அவரையும் சேர்த்து 3 பேர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில், இன்று … Read more