கைது பயத்தில் எஸ்கேப்.. பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையான 11 பேரும் சொந்த கிராமத்தை விட்டு ஓட்டம்

India oi-Nantha Kumar R காந்திநகர்: பில்கிஸ் பானு வழக்கில் நன்னடத்தை அடிப்படையில் சிறையில் இருந்து விடுதலையான 11 பேரும் மீண்டும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் சொந்த கிராமத்தை விட்டு ஓடியுள்ளனர். இதுபற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு சபர்மதி ரயில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக கலவரம் வெடித்தது. இதில் குஜராத்தின் பல இடங்களில் கோரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான … Read more

உலகை ஆளும் இந்திய பெண்கள்.. பெருமை சேர்க்கும் சாதனை பெண்கள்!

இந்தியர்களின் திறமையால் இன்று பல அண்டைகளின் நாடுகளின் முன்னணி நிறுவனங்களின், தலைமை பொறுப்புகளிலும் தலைமை வகித்து வருகின்றனர். இந்தியர்களின் கடும் உழைப்பு, திறமை, நாணயம், பொறுமை, விசுவாசம் உள்ளிட்ட அம்சங்களை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. இதனால் தான் தலைமை பொறுப்புகளில் இந்தியர்களை அமர வைக்கின்றன என்பதை, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். உலகை ஆளும் இந்தியா வம்சாவளியை சேர்நத CEOக்கள்.. எந்தெந்த நிறுவனங்களில்? தேவிகா புல்சந்தனி,ஓகில்வி ஓகில்வி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வரும் … Read more

சென்னை: நீட் தேர்வில் தோல்வி; தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி!

சென்னை, அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜராஜன். இவரின் மகள் சுவேதா (19). இவர் அம்பத்தூரில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 17.7.2022-ம் தேதி நடந்த நீட் தேர்வை சுவேதா எழுதியிருக்கிறார். நீட் தேர்வின் ரிசல்ட் 8.9.2022-ம் தேதி அதிகாலை வந்தது. அதில் சுவேதா தோல்வியடைந்ததும் மனமுடைந்தார். பின்னர் தன்னுடைய அறைக்கு சுவேதா … Read more

சென்னையில் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு 20 சதவீதம் கொலைகள் குறைந்துள்ளது! சங்கர் ஜிவால்

சென்னை: தமிழ்நாட்டில், கொலை, தற்கொலை, முதியோர் கொலை போன்றவை அதிகரித்துள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் கொலைகள் குறைந்துள்ளது என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குற்றங்கள் நடைபெற்று தான் வருகிறது. குற்றத்தைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சென்னையை பொறுத்தவரை, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு … Read more

கன்னியாகுமரியில் செப்.17, 18 ஆகிய தேதிகளில் கமல் சுற்றுப்பயணம்

சென்னை: கன்னியாகுமரியில் செப்.17, 18 ஆகிய தேதிகளில் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் விஸ்டா சிறப்பு அம்சங்கள்| Dinamalar

புதுடில்லி: தலைநகர் டில்லியில், 106 கழிப்பறைகள், 16 நிரந்தர பாலங்கள், 140 புதிய மரங்களுடன் ரூ.477 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட ‘சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை திறந்து வைக்க உள்ளார். ”சென்ட்ரல் விஸ்டா” திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு கடந்த 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். டில்லி இந்தியா கேட் முதல் ஜனாதிபதி மாளிகை வரையிலான ராஜ்பாதையில் புதிய பார்லிமென்ட் கட்டடம், பிரதமர், துணை ஜனாதிபதி இல்லங்கள், மத்திய அரசின் … Read more

நீட்டால் மாணவி தற்கொலை.. மத்திய அரசே காரணம்! ஆளுநர் ரவி என்ன சொல்லப்போகிறார்? அன்புமணி ஆவேசம்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali மயிலாடுதுறை: நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெற்றோர்கள் தரும் அழுத்தமும் ஒரு காரணமாக இருப்பதாகவும், தமிழக மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணம் மத்திய அரசுதான் என்றும் மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள இந்த உத்தவேதீஸ்வரர் ஆலயத்தில் பாமக நிர்வாகி கணேஷ் என்பவரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் … Read more

மெர்சிடஸ் பென்ஸ் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி… ஆயிரக்கணக்கில் வேலைநீக்கம்!

உலகம் முழுவதும் கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். பணவீக்கம், மோசமான பொருளாதார நிலைமை உள்பட பல காரணங்களால் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் … Read more

ஆயிரம், இரண்டாயிரம் அல்ல… 21 லட்சம் அக்கவுன்ட் – உ.பி.யில் விவசாயிகள் நிதியில் மோசடியா?!

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 எனப் பிரித்து மூன்று தவணைகளாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2.85 கோடி விவசாயிகளில் 21 லட்சம் விவசாயிகள் தகுதியற்றவர்கள் என்று மாநில விவசாய அமைச்சர் சூர்ய … Read more

உயிரை மாய்த்துக் கொள்வதால் ஒன்றும் சாதிக்க போவதில்லை! மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுரை

சென்னை: தேர்வில் தோல்வி காரணமாக உயிரை மாய்த்துக் கொள்வதால் ஒன்றும் சாதிக்க போவதில்லை என்று  மாணவர்களுக்கு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு தேவையான திட்டங்கள் தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ.வும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிம் பேசிய அமைச்சர்,  சமூக நீதி என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். அதுதான் முதல்வரின் கொள்கை. பணம் இருப்பவர்களுக்கு … Read more