இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கு பணிபுரிவது…கடுமையாக நடத்தப்பட்ட முன்னாள் உதவியாளர் வெளிப்படை

இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கான தனிப்பட்ட உதவியாளர் பதவியை சமந்தா கோஹன் அக்டோபர் 2019ல் ராஜினாமா செய்தார். சமந்தா கோஹன் கடுமையாக நடத்தப்பட்டதாக ராயல் நிருபர் வாலண்டைன் லோ கருத்து. இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்காக பணிபுரிவது இரண்டு பதின்ம வயதினருடன் பழகுவது போன்று இருந்தது என அவர்களது முன்னாள் உதவியாளர் சமந்தா கோஹன் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட செயலாளரிடம் பொதுவாகக் கேட்கப்படாத விஷயங்களைச் செய்யும்படி கேட்கப்பட்டதால், சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் உடனான தனிப்பட்ட செயலாளர் பதவியை சமந்தா … Read more

சென்னை பரங்கிமலையில் மாணவி சத்யாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சதீஷுக்கு அக்.28 வரை நீதிமன்ற காவல்

சென்னை: சென்னை பரங்கிமலையில் மாணவி சத்யாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சதீஷுக்கு அக்.28 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சதீஷை அக்.28 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை 9-வது நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனாம்பாள் உத்தரவிட்டுள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி ரஷ்ய விமானம் தரையிறக்கம்| Dinamalar

புதுடில்லி, :ரஷ்யாவில் இருந்து வந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அந்த விமானம் புதுடில்லியில் நேற்று தரையிறக்கப்பட்டது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து ௩௮௬ பயணியருடன், ரஷ்யாவின், ‘ஏரோப்ளோட்’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புதுடில்லி நோக்கி நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. விமானம் புதுடில்லியை நெருங்கிய போது, அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. உடனே, அந்த விமானத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து … Read more

அம்மியில அரைச்சு, விறகடுப்புல வெச்ச நாட்டுக்கோழி குழம்பு; நேட்டிவிட்டி ரெசிப்பி! #DeepavaliRecipe

தீபாவளியன்று காலை பலர் வீடுகளிலும் சுடச் சுட இட்லியுடன் தவறாமல் நாட்டுக்கோழி குழம்பு மணக்கும். கிராமத்து ஸ்டைலில் அரைத்துவிட்ட நாட்டுக்கோழி குழம்பு தளதளக்க, ஆவி பறக்க இட்லி பரிமாறினால்… டஜன் கணக்கில் சாப்பிடுவோம். அம்மியில் அரைக்கத் தேவையான பொருள்கள் சொல்லும்போதே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அந்த அரைத்துவிட்ட நாட்டுக்கோழி குழம்பை, கிராமத்து ஸ்டைலில் அம்மியில் அரைத்து, விறகடுப்பில் சமைத்து காட்டுகிறார் திருச்சியை மாவட்டம் மருதாண்டக்குறிச்சியை சேர்ந்த கோமதி அக்கா. தேவையான பொருள்கள் 1. சின்ன வெங்காயம் … Read more

கமிலாவா ஹரியா..? காதல் மனைவிக்காக மகனை கைவிட தயங்கமாட்டார் மன்னர் சார்லஸ்

குயின் கன்சார்ட் கமிலாவிற்காக ஹரி மேகன் தம்பதியை விலக்கிவிட தயாராக இருக்கலாம்.  அவர் கமிலாவை நேசிக்கிறார். அவரை நம்பமுடியாத அளவிற்கு பாதுகாக்கிறார் ராணி கமிலாவா அல்லது இளவரசர் ஹரியா என தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டால், மன்னர் மூன்றாம் சார்லஸ் மனையின் பக்கம் தான் நிற்பார் என அரச குடும்பத்திற்கு நெருக்கமான நபர் ஒருவர் கூறியுள்ளார். இளவரசர் ஹரி குயின் கன்சார்ட் கமிலாவைப் பற்றி தீங்கு விளைவிக்கும் உரிமைகோரல்களைச் செய்தால், மன்னர் மூன்றாம் சார்லஸ் இளவரசர் ஹரி மற்றும் … Read more

தமிழ்நாட்டில் புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதன் பின்னணி என்ன?… அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதன் பின்னணி என்ன என்பது குறித்து விவரங்களை தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த முத்துமாலை ராணி என்பவர் ஓய்வூதிய பலன்களை வழங்க ஆணையிடக் கோரிய வழக்கில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு: 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு| Dinamalar

புதுடில்லி: நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் 12 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. தற்போது இந்த மனுவில் சில திருத்தங்கள் செய்து மீண்டும் தமிழக அரசு தாக்கல் செய்தது. அந்த மனுவில், மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு … Read more

வருமானம் ரூ.1,150 கோடி; கடன் ரூ.2,500 கோடி…! அர்விந்த் மில்ஸின் திருப்புமுனைக் கதை!

தொழில் துறையைப் பொறுத்தவரை, மூன்று தலைமுறைகளைத் தாண்டுவது என்பதே பெரிய சவால். ஆனால், 400 ஆண்டுகளுக்கு மேலாக 17 தலைமுறைகளாக தொழில் குடும்பமாக இருந்து வருகிறது அர்விந்த் குழுமம். அக்பர் முதல் ஜவகர்லால் நேரு வரை அர்விந்த் குழுமத்துக்கு நெருக்கம். இந்த குழுமம் பல நெருக்கடிகளையும் சவால்களையும் கடந்து வந்திருக்கிறது. இதில் தற்போதைய தலைவர் சஞ்சய் லால்பாய் கையாண்ட சில விஷயங்களை மட்டும் இந்த வார திருப்புமுனையில் பார்க்கலாம். Arvind பல தொழில் நிறுவனங்களை உருவாக்கினார்… சஞ்சய் … Read more

ஒரே டிக்கெட்டில் நாடு முழுவதும் பயணம்! 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தும் ஜேர்மனி

49 யூரோ பொது போக்குவரத்து பயணச்சீட்டு நாடு முழுவதும் செல்லுபடியாகும். ஆனால், 9 யூரோ டிக்கெட்டைப் போலவே, இது நகரங்களுக்கு இடையேயான ரயில்களுக்கு செல்லுபடியாகாது. ஒரு மாதத்திற்கு 49 யூரோக்கள் (இலங்கை ரூ. 17,427) செலவாகும் பொதுப் போக்குவரத்து அனுமதிச்சீட்டை அறிமுகப்படுத்த ஜேர்மனி விரும்புகிறது. இந்த பயணச்சீட்டு நாடு முழுவதும் செல்லுபடியாகும். முன்னதாக 9 யூரோ டிக்கெட் திட்டம் ஜேர்மனியில் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. அதனை பின்பற்றி, அதிகாரிகள் நிதியுதவிக்கு உடன்பட்டால் இப்போது இந்த புதிய 49 … Read more

கடலூரில் எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்தியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது: வி.கே.சசிகலா

சென்னை: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலையை சேதப்படுத்தியிருப்பது வெட்கக்கேடான செயல், இது மிகவும் கண்டனத்திற்குரியது என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமீப காலமாக, தலைவர்களின் திருவுருவ சிலைகள் சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. பொது அமைதியை சீரழிக்கும் இது போன்ற செயல்கள் நடைபெறாத வகையில் அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்த இழி செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை … Read more