“தொடர் மழை குவிந்து கிடக்கும் நெல்” கண்ணீரில் தஞ்சை விவசாயிகள்..!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்து பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. ஈரப்பதம் அதிகமான நெல்லை அறுவடை செய்ய நெல் கொள்முதல் நிலையங்கள் முன் வராததால் சாலை யோரங்களில் மழை போல் நெல் மணிகள் குவித்து கிடக்கிறது. விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் கண்ணீர் மல்க காத்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மழையில் நனைந்த நெல் `வெள்ளம் பெருக்கெடுத்தும் பாசனத்துக்கு தண்ணீர் இல்லை!” – இது கடைமடை விவசாயிகளின் பரிதாபம் டெல்டா … Read more

ஆசியக் கோப்பையில் த்ரில் வெற்றி! இலங்கையின் பெண் சிங்கப்படை மிரட்டல்

அதிகபட்சமாக இலங்கை வீராங்கனை நிலக்ஷி டி சில்வா 28 ஓட்டங்கள் எடுத்தார்   இரண்டு ஓவர்கள் வீசி 7 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இனோக ரணவீர சிறந்த வீராங்கனை விருதை பெற்றார் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய டி20 போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை மகளிர் அணி 18.1 ஓவர்களில் … Read more

பாஜக-வுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் சேராத கட்சிகளை நாடு மன்னிக்காது : லாலு பிரசாத் பேச்சு

பாஜக-வுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் சேராத கட்சிகளை நாடு மன்னிக்காது என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். உடல்நிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கட்சி விவாகரங்களில் இருந்து ஒதுங்கி இருந்த லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் இன்று நடந்த ஆர்ஜேடி தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கட்சியின் செயற்குழு உறுப்பினர்களிடையே பேசிய அவர் பாஜக-வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று … Read more

அந்தியூர் அருகே மீன்பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் குட்டை நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு: அந்தியூர் அருகே மீன்பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 5-ம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் சிபிநேசன் (11), ராகவன் (10), நந்தகிஷோர் (10) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

“கடன் தள்ளுபடி ஆகும்ணு நம்பி கட்டாம விட்டுட்டேன்!" – விவாசயி புகார்… விளக்கமளித்த வங்கி

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்த சிசில் என்பவர் நெல்லை மாவட்டம், மன்னார்புரத்தில் 19 ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்திருக்கிறார். விவசாயப் பணிகளுக்காக டிராக்டர் தேவைப்பட்டதால் வங்கியொன்றில் கடன் பெற்றிருக்கிறார். கடந்த 2005-ம் ஆண்டு கடன் பெற்ற விவசாயி, அதற்காக தன்னுடைய 9.5 ஏக்கர் நிலத்தை அடமானமாக வைத்திருக்கிறார். பணத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயி விவசாயி சிசில் கடன் பெற்ற காலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்ததால் அப்போது அரசியல் கட்சியினர் வங்கிக் கடன் தள்ளுபடி … Read more

இங்கிலாந்தில் மூன்று மாடி வீட்டின் கூரையில் கிடந்த சடலம்: மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவம்…

இங்கிலாந்தில், மூன்று மாடி வீடு ஒன்றின் கூரையில் சடலம் ஒன்று போர்வையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த விடயம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தீயணைப்புத்துறையினர் ஏணிகள் உதவியுடன் அந்த வீட்டின் மாடியில் ஏறி, போர்வையில் சுற்றிவைக்கப்பட்டிருந்த அந்த உடலை கீழே இறக்கியுள்ளனர். மேற்கு யார்க்‌ஷையரிலுள்ள லீட்ஸ் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு மூன்று மாடி வீட்டின் கூரையில் சந்தேகத்துக்குரிய ஒரு பொருள் கிடப்பதாக நேற்று பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. Credit: Ben Lack உடனடியாக பொலிசார், அவசர உதவிக்குழுவினர் மற்றும் … Read more

நவராத்திரி திருவிழாக் காலத்தில் கார் உள்ளிட்ட வாகன விற்பனை 57% அதிகரிப்பு: வாகன டீலர்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நவராத்திரி திருவிழாக் காலத்தில் கார் உள்ளிட்ட வாகன விற்பனை 57% அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கார்கள் அனைத்தின் விற்பனையும் உயர்ந்துள்ளது. 2021 நவராத்திரியில் 3,42,459-ஆக இருந்த வாகனங்களின் விற்பனை இந்தாண்டு நவராத்தரியில் 5,39,227 ஆக உயர்ந்துள்ளது. 2021 நவராத்திரி காலத்தில் 3,42,213 ஆக இருந்த ஸ்கூட்டர் மோட்டார் பைக் விற்பனை இவ்வாண்டு 3,69,020 ஆக உயர்ந்துள்ளது. நவராத்தரி விழாக்காலத்தில் செப்.26 முதல்  … Read more

“எங்களுக்கும் அதுதான் வேண்டும்!" – உத்தவ் தாக்கரே கேட்கும் சின்னத்தையே கேட்கும் ஷிண்டே

மகாராஷ்டிரா சிவசேனாவில் பிளவு ஏற்பட்டிருப்பதால் அந்தக் கட்சியின் சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்க உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து உத்தவ் தாக்கரேவும், ஏக்நாத் ஷிண்டேவும் தாங்கள் விரும்பும் கட்சியின் பெயர் மற்றும் சின்னங்கள் பட்டியலை கொடுக்கும்படி தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டது. தேர்தல் கமிஷனின் தீர்ப்பை முன்கூட்டியே எதிர்பார்த்திருந்த உத்தவ் தாக்கரே உடனே தங்களது கட்சி விரும்பும் மூன்று சின்னங்கள் பட்டியலை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்திருந்தார். உதய சூரியன், திரிசூலம், டார்ச்லைட் ஆகிய மூன்றில் ஒன்றை ஒதுக்கும்படி கேட்டிருக்கிறார். தேர்தல் … Read more

காலை, மாலை வேளைகளில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை! தமிழகஅரசு

சென்னை: தீபாவளியையொட்டி, காலை, மாலை வேளைகளில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் நாட்டு மக்களிடையே பிரபலம். ஆனால்,  காற்று மாசு காரணமாக,  பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு  உச்சநீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க உத்தரவிட்டு உள்ளது. மேலும் டெல்லி உள்பட பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு … Read more

சென்னை-கூடூர் மார்க்கத்தில் இயக்கப்படும் 86 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை-கூடூர் மார்க்கத்தில் இயக்கப்படும் 86 விரைவு ரயில்களின் வேகம் 110 கி.மீ-ல் இருந்து 130 கி.மீ ஆக அதிகரித்துள்ளது. சென்னை-டெல்லி, ஹவுரா, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்களின் 130 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.