15 நிமிட கார் பயணத்திற்கு ஒரு கோடி கட்டணம்! அதிர்ந்துபோன பிரித்தானியர்

மான்செஸ்டரில் 15 நிமிட கார் பயணத்திற்கு கோடிக்கணக்கில் கட்டணம் விதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த இளைஞர் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு பேசியதால் இளைஞருக்கு தெரிய வந்த உண்மை பிரித்தானிய நபர் ஒருவர் டாக்சியில் பயணித்ததற்கு தவறுதலாக 35 ஆயிரம் பவுண்ட்கள் கட்டணம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மான்செஸ்டர் நகரில் உள்ள மதுபான விடுதிக்கு செல்ல ஓலிவர் கப்லன் (22) என்ற இளைஞர் கார் டாக்சியை செயலி மூலம் பதிவு செய்துள்ளார். அந்த இடத்திற்கு செல்ல இலங்கை மதிப்பில் 4403 … Read more

உதகை அருகே தடுப்பு சுவர் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உதகை: உதகை அருகே தடுப்பு சுவர் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மங்சனக்கொரை என்ற இடத்தில் கட்டிட வேலை நடைபெற்றபோது மண்ணில் புதைந்த இருவர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் புதிதாக 2,756 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,756 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,756 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,12,013 ஆனது.கடந்த 24 மணி நேரத்தில், 3,393 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,40,54,621 ஆனது. தற்போது 28,593 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 5 பேர் … Read more

“ஆளுநர், பிரதமர் திருக்குறளைப் பற்றி பேசுவது தமிழ் மொழிக்கு பெருமையாக உள்ளது” – ஆர்.பி.உதயகுமார்

மதுரையிலுள்ள காந்தி அருங்காட்சியக வளாகத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் சுத்தம் செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கழக பொன்விழா ஆண்டையொட்டி தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அருங்காட்சியக வளாகத்தை அம்மா பேரவை சார்பில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.  ஆர்.பி.உதயகுமார் கடந்த 2017-ஆம் ஆண்டு எடப்பாடியார் ஆட்சியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நாட்டிலயே தூய்மையான கோயிலாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசிடம் … Read more

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா ஒருமணி நேரத்தில் முடிந்துவிடும்: கசிந்த ரகசிய திட்டம்

ராணியாருக்கு முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சடங்குகள் எதுவும் இருக்காது, குறைவான சடங்குகளுடன் முடிவுக்கு வரும் சிறப்பு விருந்தினர்கள் எண்ணிக்கையும் 8,000ல் இருந்து 2,000 என குறைக்கப்படும் – மன்னர் சார்லஸ் கோரிக்கை பிரித்தானிய மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவானது ஒருமணி நேரத்திற்குள் முடிவுக்கு வந்துவிடும் என ராஜகுடும்ப வட்டாரத்தில் கூறப்படுகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்படும் முடிசூட்டும் விழாவானது குறைவான சடங்குகளுடன் முடிவுக்கு வரும் எனவும், ராணியாருக்கு முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சடங்குகள் எதுவும் இருக்காது என்றே தெரிய வந்துள்ளது. @PA பொதுவாக … Read more

முதுநிலை மருத்துவம் கட்டணம் செலுத்த அவகாசம் தேவை

சென்னை: தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக இடங்களில் முதுநிலை மருத்துவம் சேர ஆன்லைனில் பணம் செலுத்த முடியாமல் தவித்தனர். இன்று மாலை 5 மணியுடன் கட்டணம் செலுத்துவதற்கான கெடு முடிவடையும் நிலையில் இணையதளம் இயங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி| Dinamalar

லக்னோ: 2024-ம் ஆண்டு முடிவதற்குள், உ.பி.,யில் அமெரிக்காவுக்கு இணையாக சாலை உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது: 2024-ம் ஆண்டு முடிவதற்குள், உ.பி யில் அமெரிக்காவுக்கு இணையாக சாலை உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக, உத்தர பிரதேசத்தில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்ட பணிகள் நடைபெறும். அரசாங்கத்திடம் தரமுள்ள சாலைகளை அமைப்பதற்கு பண பற்றாக்குறை இல்லை.உ.பி.யில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் சாலை கட்டுமானத்திற்கு, தேவையான பொருட்களை … Read more

“பொறுப்புகளில் தொடர கழக உடன்பிறப்புகள் இதை மறந்துவிட வேண்டாம்…” – பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின்

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க கட்சியின் தலைவராக மீண்டும் ஸ்டாலின் ஒருமனதாக போட்டியின்று தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக கனிமொழியை நியமனம் செய்து ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், ராசா, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீண்டும் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக பொதுக்குழு கூட்டத்தில் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் … Read more

மகள் இந்த காரியத்தை செய்திருப்பாளோ! பயத்தில் இருந்த மொத்த குடும்பமும் தற்கொலை

மகள் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்ய ஓடி போய்விட்டாள் என பயந்து மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீராமப்பா (69), இவர் மனைவி சரோஜா (55), மகன் மனோஜ் (25), மகள் அர்ச்சனா (28). அர்ச்சனாவை காணவில்லை என ஸ்ரீராமப்பா சமீபத்தில் பொலிசில் புகார் அளித்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா வேறு சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொள்ள அவருடன் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

சென்னை: திமுகவின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்தார். பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.