வரும் 10ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: வரும் 17ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தற்போதைய இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  வரும் திங்களன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தனது  தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதிமுகவின் 51-வது ஆண்டுவிழா வருகிற 17-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி  கூட்ட முடிவு … Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 14,556 கனஅடியாக குறைப்பு

சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 14,818 கனஅடியிலிருந்து 14,556 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் ஆணையின் நீர்மட்டம் 118.79 அடி மற்றும் நீர் இருப்பு 91.55 டி.எம்.சியாக உள்ள நிலையில் 13,000 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுகிறது. 

ஒடிசா: நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகில் திடீர் தீ விபத்து – 10 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

புவனேஸ்வர், ஒடிசா கடற்கரையில் உள்ள நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகில் திடீரென தீப்பிடித்தது. படகில் இருந்த மீனவர்கள் 10 பேர் காயமின்றி உயிர் தப்பினர். ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள தாம்ரா பகுதியில் உள்ள தோசிங்கா கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென படகில் தீப்பிடித்தது. வீலர்ஸ் தீவு அருகே சென்றபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதைத் தொடர்ந்து, கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீப்பிடித்த படகில் இருந்த … Read more

தசரா பேரணி; திடீரென 500 ஆண்டுகள் பழைமையான மதரஸாவுக்குள் நுழைந்து பூஜை செய்த இந்து அமைப்புகள்!

கர்நாடகா மாநிலம், பிடார் என்ற இடத்தில் 500 ஆண்டுகள் பழைமையான மதரஸா ஒன்று இருக்கிறது. மெஹ்முத் கவன் என்ற அந்த மதரஸா புராதான சின்னங்களில் ஒன்றாகவும், தேசிய நினைவுச் சின்னமாகவும் இருக்கிறது. தொல்லியல் துறை இதனை பராமரித்து வருகிறது. இந்த நிலையில், பிடாரில் இந்து அமைப்புகள் சார்பாக தசரா பேரணி நடத்தப்பட்டது. பேரணி மதரஸா அருகே வந்தபோது திடீரென சிலர் மட்டும் `ஜெய் ஸ்ரீராம்’, `இந்து தரம் ஜெய்’ என்று கோஷமிட்டவாறு மதரஸாவின் வெளிக் கதவை உடைத்துக்கொண்டு … Read more

அடுத்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம் – பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: அடுத்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களிலும் டெங்கு பாதிப்பு மேலும் வேகம் எடுக்கும். இந்நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, பள்ளி கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து 82.33ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஷிண்டேவுக்கு வந்த கூட்டம், எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுகிறது பட்னாவிஸ் கருத்து

மும்பை, சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அந்த கட்சியின் பாரம்பரியமான தசரா பொதுக்கூட்டம் வரலாற்றில் முதல் முறையாக 2 இடங்களில் நடந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் பொதுக்கூட்டம் தாதர் சிவாஜி பார்க்கிலும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் கூட்டம் பி.கே.சி. மைதானத்திலும் நடந்தது. 2 கூட்டங்களிலும் லட்சக்கணக்கில் அந்த கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டம் எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுவதாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் … Read more

வார ராசிபலன்: 07/10/2022 முதல் 13/10/2022 வரை! வேதாகோபாலன்

மேஷம் சோம்பலைத் தவிர்ப்பது நல்லது. ஆபீஸ் தொடர்பான பணிகள் கொஞ்சம் தாமதப்பட்டாலும்கூட நல்லபடியா முடிஞ்சுடும். குடும்பத்துல இருக்கறவங்க கூட, ஹாப்பியாப் பொழுது போகும்.  தள்ளிப்போட்ட விஷயங்களை உடனுக்குடன் முடிச்சுடப் பாருங்க. கற்பனை பயங்களால் கவலை அடைய வேணாம். ஃப்ரெண்ட்ஸ்கூட இத்தனை நாளறா இருந்துக்கிட்டிருந்த மனஸ்தாபங்கள் விலகும். வாக்கு வாதங்கள் எதுவும் செய்ய வேணாங்க. ஏதாச்சும் விவாதம் நடந்துக்கிட்டிருந்தா அந்த எடத்தைவிட்டு நீங்க வாயை மூடிக்கிட்டு நகர்ந்து வந்துடுங்க. கடன் குடுக்கறதையும் வாங்கறதையும் தவிர்ப்பது நல்லது. எப்போதோ செய்த … Read more

திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் 3 குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை குழு அமைப்பு: தமிழக அரசு

திருப்பூர்: திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள நேற்று உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசகம் தலைமையில் கமிட்டி நியமனம் செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு நியமித்துள்ள கமிட்டி இன்று விசாரணையை தொடங்கவுள்ளது என்று தகவல் அளித்துள்ளனர்.