தலைப்பு செய்திகள்
ராக்கெட் வேகத்தை மிஞ்சும் தங்கம் விலை – என்ன நடந்தால் கட்டுக்குள் வரும்?
ராக்கெட்டைத் தாண்டிய ‘சர்ர்ர்…’ வேகத்தில் தங்கம் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. எப்போது தான் இந்த வேகத்திற்கு ‘என்ட் கார்டு’ வரும் என்பது நம் எல்லோரின் எதிர்பார்ப்பு. தங்கம் விலையின் வேகம் எப்போது மட்டுப்படும் என்பதைப் பார்ப்பதற்கு முன், தங்கம் விலை ஏன் உயர்கிறது என்பதை பார்க்கலாம். தங்கம் > ஈரான் உள்நாட்டு போராட்டம் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை… அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிடும் ‘திடீர்… அதிர்ச்சிகர’ அறிவிப்புகள், ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் அவ்வப்போது பாலஸ்தீனத்தின் … Read more
`ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை' – மதுரை மாவட்ட நீதிமன்றம்
ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் துன்புறுத்தபடுவதாக பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினால், 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை செய்யபட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரையில் உள்ள அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. அலங்காநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டி போராடினர். இவர்களுக்கு பொதுமக்கள் உணவு சமைத்து வழங்கும் நிகழ்வுகளும் நடந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் இளைஞர்களும் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் வாடிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தமிழகம் … Read more
பாராமதி விமான நிலையம்: அடிக்கடி VIP-க்கள் வந்து சென்றாலும் முறையான விமான வழித்தட வசதி இல்லாத நிலை!
பாராமதி விமான நிலையத்தின் ஈடுதளம் அருகே நேற்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அதிக அளவில் வி.ஐ.பி.க்கள் வருவார்கள் என்பதால் விமான நிலையத்தை தற்போது விமானப்படை தனது கட்டுப்பாட்டில் எடுத்து இருக்கிறது. பாராமதி விமான நிலையத்தில் விமானங்கள் வந்து தரையிறங்க போதிய வழித்தட வழிகாட்டி வசதி இல்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த விமான நிலையத்தை … Read more
இந்தியா- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா கடும் விமர்சனம்
இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், இந்த ஒப்பந்தம் மூலம் உக்ரைன் போரைவிட ஐரோப்பா வர்த்தகத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளது என்று குற்றம் சாட்டினார். சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், “ஐரோப்பாவின் இந்த முடிவால் நான் மிகுந்த கவலை அடைந்துள்ளேன். உக்ரைனில் நடக்கும் போரை குறைப்பதற்குப் பதிலாக, வர்த்தகமே முக்கியம் என்று ஐரோப்பா நினைத்துள்ளது” என்று தெரிவித்தார். உலகளவில் பதற்றம் அதிகரித்து வரும் … Read more
"எனக்கு பிரதீப் ரங்கநாதனின் மேனரிஸமா?" – விமர்சனத்துக்குப் பதில் அளித்த அபிஷன் ஜீவிந்த்
‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘வித் லவ்’. இந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் ‘வித் லவ்’ படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ‘டூரிஸ்ட் பேமிலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். வித் லவ் படத்தில்… இப்படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருப்பதால் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த … Read more
"Helicopter விபத்து குறித்த பயத்தில் கேட்டேன்; ஆனா பின்னாடி வேற அரசியல்" – விசிக MLA பாலாஜி பேட்டி
‘லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார்’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி மீது சட்டப்பேரவைச் சபாநாயகர் அப்பாவுவிடம் ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனம் புகார் கொடுத்த விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 2023 ஆம் ஆண்டே மாவட்ட ஆட்சியரால் இந்தக் கோவளம் சுற்றுலாச் சேவைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஜனவரி 12 ஆம் தேதி அமைச்சர் தா.மோ. அன்பரசனால் துவக்கி வைக்கப்பட்டது இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இது குறித்து எஸ். எஸ். … Read more
திருப்பாலைவனம் அருள்மிகு பாலீஸ்வரர்: சோழர் திருப்பணி செய்த கோயிலில் கோலாகலக் கும்பாபிஷேகம்!
முதலாம் ராஜேந்திர சோழன் தன் கடல்போன்ற படைகளை நடத்தி கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாடித் தமிழகத்துக்குத் திரும்பினான். அப்படித் திரும்பும் வழியில் பொன்னேரியை அடுத்த பாலை மரங்கள் அடர்ந்திருந்த அந்த வனத்தில் ஓய்வெடுக்கத் தீர்மானித்தது அவன் படை. அதுவரை ஒளிவீசிய சூரியன் மேகங்களுக்குள் சென்று மறைந்தான். அந்தச் சூழலே கொஞ்சம் இருள் கொண்டது. மழை வருமோ என்று கண்களை இடுக்கி கை கொண்டு வெளிச்சம் மறைத்து வானைப் பார்த்தனர் வீரர்கள். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. … Read more
'திமுக மா.செக்கள் திருடர்கள்; மே 10 ஆம் தேதி விஜய் முதல்வர்!' – தவெக
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெகவின் தேர்தல் பிரசாரக்குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்திருந்தது. TVK அதில் பேசிய செங்கோட்டையன், ‘234 தொகுதிகளிலும் விஜய்தான் நிற்கிறார். விஜய் அடையாளம் காட்டப்போகும் வேட்பாளர்கள்தான் கோட்டைக்கு செல்லப்போகிறார்கள். தவெகவில் பெண்களுக்கு முழு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் 90 நாட்கள்தான். அதிகாரிகள் உங்களை வரவேற்று வாருங்கள் உட்காருங்கள் என பணிவன்போடு பேசப்போகிறார்கள்’ என்றார். தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், ‘சென்னையில் நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அத்தனை பேர் இருந்தும் … Read more