நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு

புதுடெல்லி, வங்கிகளில் 2 மற்றும் 4- வது சனிக்கிழமைகள் விடுமுறையாக உள்ள நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சம்மேளனத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்று (செவ்வாய் கிழமை) திட்டமிட்டபடி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துகின்றனர். … Read more

"ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள், மார்க்கெட்டிங்" – பாலிவுட் சினிமா குறித்து பிரகாஷ் ராஜ் காட்டம்

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய கேரள இலக்கியத் திருவிழா நேற்று (ஜன.27) முடிவடைந்தது. இதில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பாலிவுட் சினிமாவை விமர்சித்துப் பேசியிருக்கிறார். பிரகாஷ் ராஜ் “பாலிவுட் சினிமா அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. அவை இப்போது மெழுகு அருங்காட்சியகத்திலுள்ள பிளாஸ்டிக் சிலைகளைப் போல இருக்கின்றன. பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அவற்றில் உயிர் இருக்காது. இன்றைய இந்திப் படங்கள் வெறும் ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மற்றும் மார்க்கெட்டிங் … Read more

ரூ. 417 கோடியில் குழந்தைகளுக்கு உயர்சிகிச்சைக்கான மருத்துவமனை! அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  சென்னையில்,  ரூ. 417 கோடி மதிப்பில், 6 மாடி கட்டிடத்துடன் கூடிய குழந்தைகளுக்கு உயர்சிகிச்சைக்கான பிரம்மாண்ட மருத்துவமனை கட்டுவதற்கு  தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். ரூ. 417 கோடி மதிப்பீட்டில் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் 6 மாடிகளைக்கொண்ட கட்டித்தில்,   குழந்தைகளுக்காக பிரம்மாண்ட மருத்துவமனையை தமிழக அரசு அமைக்கவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. கிண்டி, கிங் நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை (ம) … Read more

வாட்ஸ்அப்பில் விரைவில் கட்டணம் கொண்டு வர மெட்டா நிறுவனம் முடிவு: பயனர்களுக்கு அதிர்ச்சி

புதுடெல்லி, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் செல்போனில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்றிருப்பது வாட்ஸ்அப் தான். உலக முழுவதும் 3 பில்லியன் பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பும் வசதியுடன் அறிமுகமான வாட்ஸ்அப், நாளடைவில் புகைப்படங்கள், கோப்புகள், வீடியோ உள்ளிட்டவற்றையும் பகிரும் வசதியை அறிமுகம் செய்தது. வாட்ஸ்அப்பில் குழு அரட்டை, ஸ்டேட்டஸ் என புதுப்புது வசதிகள் கொண்டு வரப்பட்டன. இதனால் எத்தனை நிறுவனங்கள் போட்டிக்கு வந்தாலும் … Read more

"அமைச்சரவையில் இடம்; சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது!" – கூட்டணி ஆட்சி குறித்து டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி மதுரையில் இன்று (ஜன.27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். செங்கோட்டையன் குறித்து பேசிய அவர், ” நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார். செங்கோட்டையனும் பலமுறை டெல்லி சென்றார். டெல்லியில் இருந்தவர்கள் அவருடனும் பேசினார்கள். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செங்கோட்டையன் – டிடிவி தினகரன் நான் டெல்லி சென்றபோது கூட ‘செங்கோட்டையன் ஏன் தவெகவிற்கு சென்றார். நம்முடன் வந்து இணைந்துகொள்ள சொல்லுங்கள்’ என்று அங்கிருந்தவர்கள் … Read more

சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  முதல்வர் ஸ்டாலின்,  தமிழ்நாட்டில், சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவில் முதல்முறையாக சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் (HPV) தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த தடுப்பூசிக்கு  தனியார் மருத்துவமனைகளில் ரூ.28 ஆயிரம் வரை செலவாகும் நிலையில், அரசு சார்பில் 14 வயதுக்கு உட்பட்ட 3.38 லட்சம் சிறுமிகளுக்கு இலவசமாக செலுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி … Read more

பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

புதுடெல்லி, 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி முதல் கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நடக்கிறது. 2-ம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் மாதம் 9-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடரையொட்டி 28-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது மத்திய நிதி மந்திரி நிர்மலா … Read more

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம்! எடப்பாடி பழனிச்சாமி

நாமக்கல்: அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம்  நிவாரணம் வழங்கப்படும் என்றும், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படும் என்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து பேசிய அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.  நாமக்கல் சாலப்பாளையத்தில்  இன்று (செவ்வாய்க்கிழமை)  காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி போட்டியை தொடங்கி வைத்தார்.  இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் … Read more

திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்தில் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், கோவிலில் நேற்று முன்தினம் 84 ஆயிரத்து 14 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்று அறிவிக்கப்பட்ட ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம். 35 ஆயிரத்து 131 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். 1 More update … Read more