உலகிற்கு உணவளிப்போம் என்று உரக்க கூறிய சில மாதங்களில் கோதுமை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளான இந்தியா…

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு ‘உலகிற்கு உணவளிக்க’ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து நான்கு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் உள்நாட்டு தேவைக்காக இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்தியா. இந்திய உணவுக் கழகத்தின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது, அதே நேரத்தில் கோதுமை பற்றாக்குறை 12% ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கடும் வெப்பம் நிலவுவதால் … Read more

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார ஊர்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார ஊர்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. கச்சிராயப்பாளையம், கல்வராயன்மலை, சங்கராபுரம், தியாகதுருக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது.

வளர்ந்த நாடுகளில் இப்படியா இருக்கு.. 'கர்வா சௌத்' மூட நம்பிக்கை..ராஜஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு!

India oi-Mani Singh S ஜெய்பூர்: வளர்ந்த நாடுகளில் பெண்கள் அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் இன்னமும் சல்லடை வழியாக நிலவை பார்த்து தங்கள் கணவர் ஆயுள் விருத்திக்காக பெண்கள் வேண்டுவது துரதிருஷ்டவசமானது என்று ராஜஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இவரது அமைச்சரவையில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக இருப்பவர் கோவிந்த் ராம் மேக்வால். கணவரின் நீண்ட ஆயுள் … Read more

மகாராஜா டி20 கோப்பை மங்களூரை வீழ்த்திய ஷிவமொகா| Dinamalar

பெங்களூரு : ‘மகாராஜா டி20 கோப்பை’ கிரிக்கெட் போட்டியில், மங்களூரு யுனைடெட் அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில், ஷிவமொகா ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது.பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், ‘மகாராஜா டி20’ கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.நேற்று நடந்த போட்டியில் முதலில் மங்களூரு யுனைடெட் அணியினர் களமிறங்கினர். முதலில் பேட் செய்த பாவலுார் (1) ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய சமர்த், நிகின் ஜோஸ் ஜோடி நிதானமாக விளையாடினர்.சமர்த் (12) ரன்னுக்கும், அமித் வர்மா (10) ரன்னுக்கும் … Read more

நடுக்கடலில் மூன்று நாள்களாக தவித்த இலங்கை அகதிகள்… கடல்நீரை குடித்து உயிர் பிழைத்த சோகம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக நுழைந்து வருகின்றனர். இதுவரை 142 பேர் அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை மூன்றாம் மணல் திட்டில் நான்கு குழந்தைகளுடன் எட்டு இலங்கை அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளதாக இந்திய கடற்படையினருக்கு … Read more

காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல்

புதுச்சேரி: காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் புதுச்சேரி வந்தார். மேலும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றக்கோரி கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியாதல் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆலோசனை கூட்டத்திலிருந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி பாதியில் வெளியேறினார். இந்நிலையில், மாநில தலைவர் வாகனத்தில் ஏறிப் புறப்பட முயன்ற மேலிடப் பொறுப்பாளரைக் கட்சியினர் போக விடாமல் அவரது வாகனத்தை … Read more

புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல்

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்தினார்கள். புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவரை மாற்றக்கோரி கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்திலிருந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி பாதியில் வெளியேறினார்.

சொகுசு பைக் ஓட்டும் ஆசையில்யூ-டியூப் பார்த்து திருடியவர் கைது

சொகுசு பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசையில், ‘யூ-டியூப்’ பார்த்து பைக் திருடிய புதுச்சேரி வாலிபர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர் புதுச்சேரி மாநிலம், சேதராப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று காலை சேதாரப்பட்டு – மயிலம் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது அவ்வழியே பதிவெண் இல்லாத பைக்கில் வந்த இருவரை நிறுத்தி, பைக்கின் ஆவணங்களை கேட்டனர். இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் தீவிர விசாரணை … Read more

Happy Streets: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுட்டீஸ்களுடன் முதல்வர்! – ஓர் புகைப்படத் தொகுப்பு

Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 92 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I (குரூப் 1) தேர்வு வரும் 30.10.2022 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.