சாலமன் தீவில் சீனாவின் விளையாட்டு ஆரம்பம்.. எவ்வளவு கடன் கொடுக்க போகுது.. எதற்காக!

பசிபிக் கடலில் உள்ள சாலமன் தீவு பற்றி பலரும் கேள்வி பற்றிருக்கலாம். ஏற்கனவே இந்த தீவில் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தினை சீனா மேற்கொள்வதாக வெளியானதை அடுத்து பல கேள்விகள்,சர்ச்சைகள் எழுந்தன. பல நாடுகளும் தங்கள் நாட்டின் இறையாண்மை தன்மையை பாதுகாக்கும் விதமாக சீன நிறுவனங்களுக்கு தடை விதித்து வருகின்றன. அப்படி இருக்கையில் இது எதற்காக? இது உண்மையா என்ற பல கேள்விகளை எழுப்பின. ஆனால் இதனை உறுதிபடுத்தும் விதமாக தற்போது சாலமன் தீவு முழுக்க 161 தொலைத் … Read more

அடையாளம் தெரியாத 600 உடல்கள்வரை நல்லடக்கம் – கோவை பெண் காவலர்களின் மகத்தான சேவை!

காவல்துறை என்றாலே கறார், கடுமை என்ற முன் உதாரணங்களே அதிகம் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற காவல்துறையின் அடிப்படை பணிகளுடன், சேவையிலும் அசத்தி வருகின்றனர் கோவையைச் சேர்ந்த இரண்டு பெண் காவலர்கள். பேரூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பிரவீனா, ஆதரவற்ற குழந்தையின் உடலை அடக்கம் செய்யும் பெண் காவலர்கள் கோவை அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை சிக்கியது! அதன் தற்போதைய நிலை என்ன? மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் அமினா இருவரும், தன்னார்வலர்களுடன் … Read more

இன்னும் எத்தனை நாள் இலவசம்.. UPI சேவைக்குச் செக் வைக்கும் ஆர்பிஐ..?!

இந்திய டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் சேவை குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய மிக முக்கியமான காரணம் என்றால் அதற்கு முக்கியக் காரணம் ஆர்பிஐ தலைமையில் NPCI அமைப்பு உருவாக்கிய யூபிஐ செயல்பாடுகள் தான். யூபிஐ பரிவர்த்தனை முறையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருவதால் இந்தியாவில் சேவையைத் தற்போது உலகில் பல நாடுகள் வாங்கிப் பயன்படுத்தத் துவங்கியுள்ளது. இந்நிலையில் ஆர்பிஐ யூபிஐ சேவை தொடர்பாக முக்கிய முடிவை எடுக்க முடிவு செய்துள்ளது. கூகுள் பே, … Read more

மின்சாரம் வாங்க, விற்க மத்திய அரசு தடை: “நிலுவைத் தொகை வழங்கப்பட்டுவிட்டது!"- செந்தில் பாலாஜி தகவல்

தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் மின் பரிமாற்றங்களில் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த மாநிலங்கள் சுமார் 5,100 கோடி ரூபாய் கட்டணத்தை மின் உற்பத்தியாளர்களுக்கு செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பிலிருந்து இத்தகைய தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது ட்விட்டரில் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். செந்தில் பாலாஜி, “ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் … Read more

கனடாவில் அதிகம் பேசப்படும் 4-வது மொழியான இந்திய மொழி!

பஞ்சாபி இப்போது கனடாவில் அதிகம் பேசப்படும் 4-வது மொழியாக மாறியுள்ளது. கனடாவில் மாண்டரின் மொழி பேசுபவர்களை விட பஞ்சாபி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்துள்ளது. 2016 மற்றும் 2021 க்கு இடையில், பஞ்சாபி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 49 சதவீதம் அதிகரித்து 5,20,000 ஆக இருந்தது. Statistics Canada வெளியிட்ட 2021-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகளின்படி, கனடாவில் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சுக்குப் பிறகு நாட்டில் பொதுவாகப் பேசப்படும் மொழிகளாக மாண்டரின் மற்றும் பஞ்சாபி ஆகிய … Read more

மின்சாரம் வாங்க தமிழ்நாட்டுக்கு தடையா? தமிழக அரசு விளக்கம்

சென்னை: மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால், தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள், மின்வர்த்தகத்தில் ஈடுபட தடை மத்திய அரசு தடை விதித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அரசு  விளக்கம் அளித்துள்ளது. மின் வினியோக நிறுவனங்களுக்கு  தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள் 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தெலங்கானா ஆயிரத்து 380 கோடி ரூபாயும், தமிழ்நாடு 926 கோடி ரூபாயும் … Read more

பிளாக்செயின் தொழில் நுட்பத்தில் விவசாயிகளுக்கு விதை.. ஜார்கண்டின் புதிய அணுகுமுறை!

ஜார்கண்ட் வேளாண்மை இயக்குனகரம் மற்றும் பிளாக்செயின் தொழில் நுட்ப நிறுவனமான செட்டில் மிண்ட் ஆகியவை, பிளாக்செயின் அடிப்படையிலான தளத்தை பயன்படுத்தி விவசாயிகளுக்கு சப்ளை செய்து வருவதாக அறிவித்துள்ளது. பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பணபரிவர்த்தனை, நிதி துறை சம்பந்தமான வணிகம் என பலவற்றில் பயன்படுத்தியதை பற்றி கேள்வி பட்டிருப்போம். ஆனால் விசாயிகளுக்கு விதையை வழங்குவதில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தியிருப்பது ஜார்ஜ்கண்ட் தான். யார் இந்த ஜமீல் அகமது.. இவர் தான் பாகிஸ்தான் மத்திய வங்கியின் புதிய தலைவரா? என்ன காரணம்? … Read more

Formula E 2021-22: சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றார் வண்டூரனே!

ரேஸிங் கார்களுக்கென பிரத்யேகமாக நடத்தப்படும் போட்டிதான் ஃபார்முலா ஒன் ரேஸிங் பந்தயம். அதில் மின்சார வாகனங்களுக்காக மட்டுமே நடத்தப்படுவது ஃபார்முலா இ ரேஸிங் போட்டி. கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வரும் இப்போட்டியின் 8-வது சீசன் (2021-22) ஆண்டு தொடங்கியது. அதில் பல ரேஸர்கள், பல்வேறு ரேஸிங் கார் நிறுவனங்களுடன் கலந்து கொண்டனர். இந்த சீசனின் இறுதி போட்டி கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. ஆரம்பத்தில் நடைபெற்ற சுற்றுகளில் மிட்ச் இவான்ஸ் நான்கு முறை முதல் … Read more

தமிழ்நாட்டில் இன்று 639 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 98 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 98, செங்கல்பட்டில் 50, திருவள்ளூரில் 17 மற்றும் காஞ்சிபுரத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 87, திருநெல்வேலி 8, தூத்துக்குடி 7, சேலம் 42, கன்னியாகுமரி 18, திருச்சி 21, விழுப்புரம் 10, ஈரோடு 45, ராணிப்பேட்டை 16, தென்காசி 4, மதுரை 13, திருவண்ணாமலை 12, விருதுநகர் 4, கடலூர் 9, தஞ்சாவூர் 7, திருப்பூர் 23, … Read more

கோவையில் கனமழையால் யானையை தேடும் பணி சவாலாக உள்ளது: வனத்துறையினர் தகவல்

கோவை: கனமழையால் தமிழ்நாடு- கேரளா எல்லையில் யானையை தேடும் பணி சவாலாக உள்ளது என வனத்துறையினர் தகவல் அளித்தனர். ஆனைக்கட்டி அட்டப்பாடி பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருவதால் 2 குழுக்களாக பிரிந்து வனத்துறை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தனிமையில் இருந்த யானை, தற்போது மற்ற யானைகளோடு இணைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.