28-ம் தேதி நடக்க இருந்த காங்கிரஸ் பேரணி ஒத்திவைப்பு…

புதுடெல்லி: வரும் 28-ம் தேதி நடக்க இருந்த காங்கிரஸ் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கொரோனா காரணமாக டெல்லியில் வரும் 28-ம் தேதி நடக்க இருந்த காங்கிரஸ் பேரணி ஒத்திவைப்பு வைக்கப்படுவதாகவும், செப்டம்பர் 4-ம் தேதி பேரணி நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை வடபழனி நிதிநிறுவன கொள்ளை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

சென்னை: சென்னை வடபழனி நிதிநிறுவன கொள்ளை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த தினேஷ், சந்தோஷ் ஆகியோர் வேலூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். வடபழனியில் செயல்படும் நிதி நிறுவனத்தில் 7 பேர் கொண்ட கும்பல் ரூ.30 லட்சத்தை கத்திமுனையில் கொள்ளையடித்தது.

தென்காசியில் இன்று முதல் செப்.2 வரை 144 தடை..ஆட்சியர் உத்தரவிட்ட காரணம் என்ன தெரியுமா?

Tamilnadu oi-Jeyalakshmi C தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி ஒண்டிவீரன் வீர வணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டெம்பர் 1ஆம் தேதி மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி ஆகியவை கொண்டாடப்பட உள்ளன. இந்நிலையில், இன்று காலை 6 மணி தொடங்கி செப்டம்பர் 2ஆம் தேதி மாலை 6 … Read more

ராஜஸ்தான்: எஸ்.பி.ஐ-லிருந்து காணாமல் போன ரூ.11 கோடி மதிப்பிலான நாணயங்கள் – தீவிர தேடுதலில் சிபிஐ!

ராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கிளையில், பாதுகாப்பு பெட்டகங்களிலிருந்து ரூ.11 கோடி மதிப்பிலான நாணயங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், வங்கியின் ரொக்க கையிருப்பில் முரண்பாடுகள் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, வங்கி கிளையின் பணத்தை எண்ணுவது என முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஸ்டேட் பேங்க ஆஃப் இந்தியா பின்னர் பணத்தை எண்ணும் பணி தனியாருக்கு அவுட்சோர்ஸ் … Read more

உலகில் மிக மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடம்

புதுடெல்லி: உலகில் மிக மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடம் பெற்றுள்ளது. அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலை ஸ்டேட் ஆஃப் க்ளோபல் ஏர் (State of Global Air) சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் டெல்லி முதல் இடத்திலும் கொல்கத்தா இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஸ்டேட் ஆஃப் க்ளோபல் ஏர் என்பது கொலம்பியா பல்கலைகழகத்தில் உள்ள அறிஞர்களும், ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (HEI) மற்றும் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் ஏவல்யூஷன் (IHME) என்ற இரு நிறுவனக்களின் … Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: அடுத்த ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எளியமுறையில் பெட்ரோல், டீசல் சேமிக்க 10 வழிகள்

தினமும் உயரும் பெட்ரோல், டீசல்  விலை கார், பைக் வாங்க நினைபவர்களுக்கு கவலையாகவும் கார், பைக் வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த சவாலாக உள்ள நிலையில் இவற்றை சமாளிக்க பெட்ரோல், டீசல் சேமிக்க மிக எளிய 10 வழியை நாம் தெரிந்து கொள்ளலாம். எரிபொருளை எவ்வாறு சேமிக்கலாம் என சில முக்கிய குறிப்புகளை கவனிப்போம். முன்னணி ஆட்டோமொபைல் வல்லுனர்கள் பரிந்துரைக்கும் டிப்ஸ் தெரிந்து கொள்வோம். பெட்ரோல் டீசல் சேமிக்க டிப்ஸ் 1. வாகனங்களின் டயர்களில் சரியான காற்றழுத்ததை சீராக பராமரிப்பு … Read more

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர்கள் ஷிகர் தவான் 88 ரன்களும், ஷூப்மான் கில் 82 ரன்களும் … Read more

தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இன்று (19-08-2022) முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‛பிராமணர்கள்‛ மிகவும் நல்லவர்கள்! பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையான 11 பேர் பற்றி பாஜக எம்எல்ஏ பரபர

India oi-Nantha Kumar R காந்திநகர்: குஜராத்தை உலுக்கிய பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 11 பேரும் நன்னடத்தை அடிப்படையில் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், ‛‛அவர்கள் பிராமணர்கள். மிகவும் நல்ல குணம் கொண்டவர்கள்” என விடுதலைக்கு பரிந்துரைந்த பாஜக எம்எல்ஏ சிகே ராவ்ல்ஜி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ல் கோத்ரா கலவரம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. … Read more