ஆக-16: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தெற்கு ரயில்வே வருவாய் உயர்வு; பொது மேலாளர் மால்யா தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை-”கடந்த நான்கு மாதங்களில், மொத்தம் 3,154 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது,” என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா தெரிவித்தார். சென்னை பெரம்பூர் விளையாட்டு திடலில், நேற்று நடந்த 75வது சுதந்திர தின விழாவில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா, தேசியக் கொடி ஏற்றி வைத்து, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின், பி.ஜி.மால்யா பேசியதாவது: பயணியருக்கான சேவைகள், சரக்கு போக்குவரத்து … Read more

இந்த ஒரு செயலி இருந்தால் போதும்.. விமான நிலையத்தில் செக்-இன் ரொம்ப ஈஸி!

உள்ளூர் விமான பயணமாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு விமான பயணமாக இருந்தாலும் சரி, விமான நிலையத்தில் சோதனை என்பது உண்மையாகவே சோதனையாக இருக்கும். மணிக்கணக்கில் விமான பயணிகள் சோதனையிடப்படுவது என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். இந்த நிலையில் டிஜியாத்ரா என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த செயலியை பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களில் அனைத்து சோதனைகளும் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள விமான விபத்து நடந்த இடத்தில் மருத்துவமனை.. பலியானவர்களின் குடும்பத்தினர் கொடுத்த நிதி..! டிஜியாத்ரா செயலி … Read more

இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 16 முதல் 21 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

'அங்கு சென்றுவந்த பிறகுதான் மாறிவிட்டான்' சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவரின் தாய் வேதனை!

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை 24 வயதான ஹாடி மாதர் எனும் இளைஞர் கத்தியால் பலமுறை குத்தினார். சர்ச்சைக்குரிய ‘The Satanic Verses’ என்ற புத்தகத்தை எழுதியதால் இஸ்லாமியர்களின் கோபத்துக்கு ஆளானவர் சல்மான் ருஷ்டி. லெபனான் பயணத்திற்குப் பிறகு தனது மகன் மாறிவிட்டதாக சல்மான் ருஷ்டியைக் கத்தியால் குத்திய நபரின் தாய் கூறியுள்ளார். இந்தியாவில் பிறந்த பிரபல பிரித்தானிய எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (75), நியூயார்க்கில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு இலக்கிய நிகழ்வில் சொற்பொழிவு செய்யவிருந்தபோது … Read more

இன்று வெளியாகிறது இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல்

சென்னை: இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்பில் சேர, உயர் கல்வித் துறை சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,455,846 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.55 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,455,846 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 595,575,975 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 569,151,185 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,687 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட வீரரின் உடல்., முழு இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு!

சியாச்சினில் காணாமல் போன இந்திய ராணுவ வீரரின் உடல் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டது. ரோந்துப் பணியின்போது பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன அந்த ராணுவ வீரர் யார் என அடையாளம் காணப்பட்டது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர் ஒருவரின் உடல் 38 ஆண்டுகளுக்குப் பிறகு சியாச்சினில் உள்ள பழைய பதுங்கு குழியில் கண்டெடுக்கப்பட்டது. அவர், 19 குமாவோன் படைப்பிரிவைச் சேர்ந்த சந்திரசேகர் ஹர்போலாவின் (Chandrashekhar Harbola) உடல் என … Read more

38 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஜவான் உடல் கண்டெடுப்பு

சியா்ச்சின்: சியாச்சின் பனிமலைப்பகுதியில் 38 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஜவான் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. உலகின் மிகவும் உயரமான போர்க்களமான சியாச்சின் மலைப்பகுதியில் கடந்த ஞாயிறன்று ஜவான்கள் வழக்கமான ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜவானின் உடல் கண்டெடுக்கப்பட்டது.அவர் குறித்த விசாரணையில், கடந்த 1984-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேசன் மெகதூத் ‘ என்ற பெயரில் குமாவோன் ரிஜிமெண்ட் படைப்பிரிவை சேர்ந்த 20 பேர் கொண்ட ஜவான்கள் சியாச்சின் பகுதியில் முகாமிட்டிருந்தனர். அப்போது இவர்கள் விபத்தில் … Read more

ஒமைக்ரானுக்கு தடுப்பூசி விரைவில் கிடைக்கும் | Dinamalar

புதுடில்லி : “நம்நாட்டில் விரைவில் ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்; இதற்காக நோவவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் தீவிரமாக ஆய்வில் ஈடுபட்டுள்ளது,” என, சீரம் நிறுவன தலைவர் அடர் பூனவாலா கூறினார். கடந்த 2020ல் பரவிய கொரோனா தொற்று உலகையே முடக்கியது. பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்த பின் தொற்று பரவல் கட்டுக்குள் வந்து, உலக நாடுகளில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால், கொரோனாவின் உருமாறிய பல வைரஸ்கள் இந்தியா … Read more