மின் கம்பத்தை அகற்றாமல் வாறுகால் அமைப்பு! – புளியங்குடி நகராட்சியின் அலட்சியம்

அரசு ஒப்பந்தங்களை மேற்கொள்பவர்கள், தரம் குறித்தோ அல்லது மக்களின் நலன் பற்றியோ கவலைப்படாமல் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அலட்சியம் காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு காலம்காலமாக தொடர்கிறது. அதனால், சாலைகள் அமைக்கும்போது அதில் இருக்கும் வாகனங்களைக் கூட அகற்றாமல் அதைச் சுற்றிலும் சாலை அமைக்கும் அவலங்கள் நடக்கின்றன. வேலூர்: “ஸ்மார்ட் சிட்டி குளறுபடிகளுக்கு அதிமுக-தான் காரணம்!” – மேயர் சுஜாதா விளக்கம் வேலூரில் அடிபம்பை அகற்றாமல் அதைச் சுற்றிலும் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு எழுந்ததால் … Read more

இலங்கையில் இருந்து மேலும் 4 பேர் தமிழகம் வருகை

ராமநாதபுரம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 4 பேர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வழியாக வந்த 4 பேர் மண்டபம் அகதிகள் முகாமிற்கு சென்றனர்.

கருணை கொலையை தடுக்க நீதிமன்றத்தில் மனு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : மருத்துவர்கள் உதவியுடன் உயிரை மாய்த்துக் கொள்ளும் கருணை கொலைக்கு தன்னை உட்படுத்திக் கொள்வதற்காக, சுவிட்சர்லாந்து செல்லும் நண்பருக்கு, ‘விசா’ வழங்கக் கூடாது எனக்கோரி, அவரது தோழி புதுடில்லி உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்துஉள்ளார். குணப்படுத்த முடியாத அல்லது மிகுந்த வலியை தரும் நோயினால், நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு, நோயுடன் போராட முடியாதவர்கள், மருத்துவர்களின் துணையுடன் கருணை கொலைக்கு தங்களை உட்படுத்திக் கொள்வது, ‘ஈஸ்தனேஷியா’ என … Read more

ஆகஸ்ட் 13: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 84-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 84-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆக-13: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,451,112 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.51 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,451,112 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 593,842,184 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 565,920,097 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,747 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சல்மான் ருஷ்டியின் தலையை துண்டிப்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர்! ஈரான் அறிவித்தது ஏன்?

சல்மான் ருஷ்டியின் தலையை துண்டிப்பவர்களுக்கு 3.3 அமெரிக்க டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டது. சல்மான் ருஷ்டி தனது The Satanic Verses நாவலை 1988-ல் வெளியிட்டார் அமெரிக்காவின் நியூயார்க்கின் மேற்கு பகுதியில் சொற்பொழிவு நிகழ்த்த மேடையில் இருந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை ஒரு நபர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு ருஷ்டி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எழுத்தாளருக்கு மேடையிலேயே கத்திக்குத்து! 33 ஆண்டுகள் கழித்து ஈரானால் பழிதீர்க்கப்பட்டதா? சல்மான் … Read more

பீகாரில் நிதிஷ்குமார் எடுத்த முடிவு பாஜகவுக்கு விழுந்த சரியான அடி! சோனியா காந்தியை சந்தித்த பிறகு தேஜஸ்வி யாதவ் பேச்சு

புதுடெல்லி, நிதிஷ் குமார் எடுத்த முடிவு பாஜகவுக்கு விழுந்த சரியான அடி என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அம்மாநில துணை முதல் மந்திரியாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள முன்னாள் மத்திய மந்திரி லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு டெல்லி சென்ற அவர், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ் தெரிவித்ததாவது, “நான் சந்தித்த தலைவர்கள் … Read more

13.08.22 சனிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | August – 13 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

பள்ளி பாடத் திட்டத்தில் ராணுவ வீரர்களின் வீர தீர செயல்கள்: மாணவர்களுக்கான "வீர கதை" போட்டியில் கல்வித்துறை மந்திரி பேச்சு!

புதுடெல்லி, ராணுவ வீரர்கள் நாட்டுக்காக ஆற்றிய பணிகள் மற்றும் செய்த தியாகங்கள் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் நோக்கில், “வீர கதை” போட்டி நடைபெற்றது. அக்டோபர் 21 முதல் நவம்பர் 20, 2021 வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், 4,788 பள்ளிகளைச் சேர்ந்த 8.04 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கட்டுரைகள், கவிதைகள், வரைபடங்கள் மற்றும் மல்டிமீடியா விளக்கக்காட்சிகள் மூலம் உத்வேகம் தரும் கதைகளைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்பட்டனர். பல சுற்று மதிப்பீட்டிற்குப் பிறகு, 25 மாணவர்கள் … Read more