குடிநீரை சூடு செய்து குடிக்க வேண்டும்; பொதுமக்களுக்கு, பஞ்சாயத்து நிர்வாகம் வேண்டுகோள்

சிக்கமகளூரு; சிக்கமகளூர் மாவட்டம் முழுவதும் இடைவிடாது பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழைகாலம் என்பதால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் பகுதிக்கு வரும் குடிநீர் நிறமாறி சிவப்பு நிறத்தில் வருவதாக கூறப்படுகிறது. அதாவது மழைநீர், குடிநீரில் கலந்து வருவதாக தெரிகிறது. இதனால் கடூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், … Read more

உலகில் எந்த நாட்டு மக்கள் அதிக டிஜிட்டல் கரன்சியை வைத்துள்ளனர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?

டிஜிட்டல் கரன்சிகள் எனப்படும் கிரிப்டோகரன்சிகள் மீதான ஆர்வம் சமீபத்திய ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றது. எனினும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இன்றளவிலும் கிரிப்டோகரன்சி குறித்தான மசோதா உருவாக்கப்படும். இந்தியா சொந்தமாக அதன் டிஜிட்டல் கரன்சியினை வெளியிடும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிரந்தமாக இந்த டிஜிட்டல் கரன்சிகளில் முதலீடு செய்ய முடியுமா? என்ற சந்தேகமும் இருந்து வருகின்றது அது சரி உலக நாடுகளில் எந்த நாடு அதிக டிஜிட்டல் கரன்சியினை வைத்துள்ளது? எந்த நாட்டின் வசம் அதிகம் உள்ளது? … Read more

சிறுதொழில் நிறுவனங்கள் பிசினஸில் ஜெயிக்கும் வழிகளைக் கற்றுத் தரும் புதிய கருத்தரங்கம்!

நம் நாட்டில் எத்தனை பெரிய நிறுவனங்கள் இருந்தாலும், பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் ஒவ்வொரு துறையிலும் கோலோச்சினாலும், இந்தியாவின் வளர்ச்சியில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமல், கொரோனா பெருந்தொற்று இப்படி தொடர்ச்சியாகப் பல்வேறு சவால்களைச் சந்தித்துவரும் நிலையிலும் சற்றும் துவண்டு விடாமல் தொடர்ந்து மீண்டுவந்து இந்தியத் தொழில்துறையை வளர்ச்சியின் பாதையில் கொண்டு சென்றுகொண்டிருக்கின்றன சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள். சவால்களையும் மாற்றங்களையும் எதிர்கொண்டு … Read more

பிரபத் ஜெயசூரியா தான் அவரது எதிரி! இலங்கையில் அவர்..புகழ்ந்து தள்ளிய மஹேல ஜெயவர்த்தனே

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் பாபர் அசாம் டி20, ஒருநாள் அல்லது டெஸ்ட் ஆகிய எந்த வடிவிலான ஆட்டத்திலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் – ஜெயவர்த்தனே பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை இலங்கையின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்த்தனே புகழ்ந்து தள்ளியுள்ளார். சமீபத்தில் இலங்கை டெஸ்ட் தொடரில் அவரது துடுப்பாட்டம் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இந்த நிலையில் பாபர் … Read more

ஓபிஎஸ் மீது சிபிஐ விசாரணை கோரிய வழக்கு! காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம உத்தரவு…

சென்னை: அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதல் , அலுவலக பூட்டு உடைப்பு, ஆவணங்கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி இபிஎஸ் தரப்பு அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில், தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு நடைபெற்ற ஜூலை 11ந்தேதி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்து, அங்குள்ள ஆவணங்களை போலீசார் முன்னிலையில் ஒபிஎஸ் தரப்பினர் அள்ளிச் சென்றது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் ஊடகங்களில் வெளியானது. … Read more

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பதிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பதிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். வீரர் லட்சுமணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோதுமை ஏற்றுமதிக்கு தடை நடவடிக்கைக்கு பலன் – தட்டுப்பாடின்றி கிடைப்பதால் விலை வீழ்ச்சி!

போபால், கோதுமை சேமிப்பு அங்காடிகளில் கோதுமைக்கான மொத்த கொள்முதல் விலை கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தியாகும் கோதுமையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் பயனாக கோதுமை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டின் முக்கிய கோதுமை சேமிப்புக்கிடங்கான மத்திய பிரதேசத்தின் இந்தூர் கோதுமை மண்டியில்,100 கிலோ கோதுமையின் விலை ரூபாய் 2500 வரை உயர்ந்த நிலையில் விலை சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷியா போர் காரணமாக கோதுமைக்கு … Read more

எப்போ தான் விடிவு வரும்.. ஜூன் காலாண்டில் ரூ.390.1 நஷ்டம் கண்ட ஜெட் ஏர்வேஸ்!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வந்த ஜெட் ஏர்வேஸ், அதன் ஜூன் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன் படி முதல் காலாண்டில் 390.1 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 129 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே இந்த விமான சேவை நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் விகிதம் 83% குறைந்து, 12.53 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது இன்னும் ஆய்வில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிக சம்பளம் … Read more

அடுத்தடுத்து சரியும் அந்நிய மரங்கள்; தொடரும் மண்சரிவுகள்! – இடைவிடாத மழையால் அச்சத்தில் ஊட்டி மக்கள்

நீலகிரியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. அணைகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வண்ணமே இருப்பதால் அவலாஞ்சி, பைக்காரா, கிளன்மார்கன், குந்தா ஆகிய அணைகள் திறக்கப்பட்டு உபரிநீரை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர். ஊட்டி இடைவிடாது செய்துவரும் மழை காரணமாக ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும்… மரங்கள் பெயர்ந்து விழுந்தும், அடுத்தடுத்து … Read more

தமிழ்நாட்டில் இன்று 892 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 178 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 178, செங்கல்பட்டில் 69, திருவள்ளூரில் 25 மற்றும் காஞ்சிபுரத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 101, திருநெல்வேலி 17, தூத்துக்குடி 8, சேலம் 49, கன்னியாகுமரி 15, திருச்சி 22, விழுப்புரம் 11, ஈரோடு 55, ராணிப்பேட்டை 22, தென்காசி 10, மதுரை 14, திருவண்ணாமலை 16, விருதுநகர் 10, கடலூர் 17, தஞ்சாவூர் 18, திருப்பூர் 23, … Read more