அவள் பயங்கரமானவள்… மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள்

* தனக்கும், தன்னுடைய மனைவிக்கும் பல வித்தியாசங்கள் இருந்ததாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் பிரதமர் வேட்பாளரான ரிஷி சுனக். * என் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடிந்ததால் நான் அதிர்ஷ்டசாலி எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் வேட்பாளரான ரிஷி சுனக், தன் மனைவி, பிள்ளைகள் குறித்து பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்கு மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார். The Sunday Times பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், தனது திருமண வாழ்வு மற்றும் பிள்ளைகள் குறித்த … Read more

ஆளுநருடன் அரசியல் பேசியதாக கூறிய ரஜினி! சிபிஎம் பாலகிருஷ்ணன் கண்டனம்..

சென்னை: ஆளுநருடன் அரசியல் பேசியதாக கூறிய ரஜினிகாந்த்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை,  நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆளுநருடன் அரசியல் பேசினேன், ஆனால், அதுகுறித்து சொல்ல முடியாது என்று கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, திமுக கூட்டணியைச் சேர்ந்த  சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து டிவீட் செய்துள்ளார். அதில், அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் … Read more

கடலூர் அருகே 13 வயது சிறுவன் ஒட்டிய பைக் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு

கடலூர்: விருத்தாலம் அருகே விஜயமாநகரில் 13 வயது சிறுவன் ஒட்டிய பைக் மோதி 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. பைக் ஒட்டிய சிறுவன் மற்றும் அவரது தந்தை சிவகுருவை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவில் 12,751 ஆக குறைந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 16,167 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 12,751 ஆக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,751 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,41,74,650 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 16,412 பேர் நலமடைந்து வீடு திரும்பினர். இதுவரை கோவிட் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை … Read more

தங்கம் விலை இன்றும் ஏற்றம்.. என்ன காரணம்.. இனி குறையவே குறையாதா?

தங்கம் விலையானது சற்று வலுவானதாக காணப்பட்டாலும், சர்வதேச சந்தையில் தற்போது சற்று குறைந்து காணப்படுகின்றது. எனினும் தற்போது 1801 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. பத்திர சந்தையானது தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காணலாமோ என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இதற்கிடையில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். தடுமாறும் தங்கம் விலை.. இன்று வாங்கலாமா.. விலை எப்படியிருக்கு? வட்டி அதிகரிக்கலாம் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் … Read more

மேற்கூரையில்லாத குரோம்பேட்டை ரயில் நிலையம்; சிரமத்தில் பயணிகள் – தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்குமா?

குரோம்பேட்டை ரயில்நிலையத்தை ஹஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, ஜமீன் ராயப்பேட்டை, திருமுடிவாக்கம், பழந்தண்டலம், திருநீர்மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஜி.எஸ்.டி சாலை நுழைவுபகுதிக்கு அருகே பிளாட்பார்ம் 1 A நடைமேடை ஒரு வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டது. இதனால் மின்சார ரயில்கள் இரட்டை பிளாட்பாரத்தின் நன்மையைப் பெறுகின்றன. மேற்கூரையில்லாத குரோம்பேட்டை ரயில்நிலையம் பயணிகள் மின்சார ரயில்களில் ஒரு பெட்டியின் இருபுறமும் இறங்கலாம் அல்லது ஏறலாம். அதாவது 1A அல்லது … Read more

சுயேச்சை மாநகராட்சி கவுன்சிலர் லியோ சுந்தரம் பாஜகவில் இணைந்தார்…

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த லியோ சுந்தரம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்ற நிலையில்,  தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இதனால், மாநகராட்சியில் பாஜகவின் பலம் 2ஆக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் தேர்தலுக்கு பாஜக தனித்துப் போட்டியிட்டது. சென்னையின் 134-வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார். அதுபோல,   மாநகராட்சியின் 198-வது வார்டில் சுயேட்சையாக நின்று போட்டியிட்ட … Read more

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி சுற்று ஆட்டம் தொடங்கியது

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி சுற்று ஆட்டம் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி அமெரிக்க அணியுடன் மோதுகிறது.

ஒரு விசா வாங்குவதற்கு இவ்வளவு அக்கப்போரா? ட்விட்டர் பயனாளியின் புலம்பல்!

வெளிநாடு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட், விசா என்பது ஒரு மிகப்பெரிய வேலை என்பதும் குறிப்பாக விசா எடுப்பதற்கு பலர் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விசா விண்ணப்பத்தை பூர்த்தி செய்த அனுபவம் குறித்து ட்விட்டர் பயனாளி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பல பக்கங்கள் கொண்ட விசா விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ள அந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது. விசா விண்ணப்பம் வெளிநாட்டுப் பயணத்திற்கான விசா விண்ணப்பம் என்பது … Read more

"அந்த செட்ல பாதுகாப்பே இல்ல; காய்ச்சலப்போ மழை சீன் வச்சாங்க!" – `கன்னத்தில் முத்தமிட்டால்' மனிஷா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’. இந்தத் தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்தவர் மனிஷா ஜித். திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நம்மிடையே அறிமுகமானவர். இந்தத் தொடர் 100-வது எபிசோட் நெருங்கியிருக்கும் வேலையில் மனிஷா அந்தத் தொடரிலிருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவரிடம் பேசினோம். மனிஷா “முதல் நாளில் இருந்தே சம்பள பாக்கி இருந்தது. கோவிட் காலத்தில் கூட தொடர்ந்து ஒரு நாள் கூட லீவு … Read more