இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 6.6% ஆக சரிவு.. ஹரியானா மோசம்.. தெலுங்கான டாப்பு..!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் வேகமாக குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான துறையின் முன்னணி நிறுவனங்கள் கொரோனாவுக்கு முந்தைய வர்த்தகத்திற்கு இணையான வர்த்தகத்தை பெற துவங்கியுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு சந்தையும் தொடர்ந்து மீண்டு வருகிறது, குறிப்பாக வகைப்படுத்தப்படாத துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது. இதன் வாயிலாக நாட்டின் வேலைவாய்பின்மை ஜனவரி மாதத்தில் சரிந்துள்ளது. 4 நாள் மட்டுமே வேலை, அதே சம்பளம்.. ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..! ஜனவரி மாதம் … Read more

`சுப நிகழ்ச்சிக்கு ஷாமியானா; துக்க நிகழ்வுக்கு ஐஸ் பாக்ஸ்' – அமமுக வேட்பாளரின் `அடடே' வாக்குறுதிகள்!

தமிழ்நாட்டில் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. பிரசாரத்தின் போது, பல்வேறு அரசியல் கட்சியினரும் புதுமையான வகையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு, மக்களை கவர்ந்தனர். பொதுவாக சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களாக இருந்தால், அதில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை வசீகரிக்க தாங்கள் வெற்றிப் பெற்றால், பேருந்து நிலையம், கல்லூரி, தொழிற்சாலை உள்ளிட்டவைகளை கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுப்பார்கள். அதே உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை … Read more

ஒத்துழைக்காவிட்டால் ரஷ்யாவுக்கு இது தான் கதி! ஜேர்மன் எச்சரிக்கை

 உக்ரைன் உடனான பதற்றத்தை தணிக்க ஒத்துழைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிம் என ரஷ்யாவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளையும் ஆயுதங்களையும் குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஆனால், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, சமீபத்தில் உக்ரைன் எல்லைக்கு அருகே பயிற்சியில் ஈடுபட்ட அதன் சில படைகள் முகாமிற்கு திரும்பியுள்ளதாக ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில், உக்ரைன் … Read more

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இரு நாட்டினருக்கும் அனுமதி இல்லை

கொழும்பு இலங்கை மற்றும் தமிழக பக்தர்களுக்குக் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு தற்போது இலங்கைக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அது ஒரு காலத்தில் இந்திய நாட்டின் பகுதியாக இருந்தது.   இங்கு வருடா வருடம் நடைபெறும் அந்தோணியார் திருவிழாவுக்குத் தமிழக மீனவர்கள் சென்று வழிபடுவது வழக்கமாகும்.   அந்த விழாவில் இலங்கை மீனவர்களும் கலந்துக் கொள்வார்கள். கச்சத்தீவு தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதாலும் மேலும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவதாலும் … Read more

ஷ்ரேயாஸ் அய்யருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்காதது ஏன்?- ரோகித் சர்மா விளக்கம்

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் மிடில் ஆர்டர் வரிசையில் இடம் பிடித்திருந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷ்ரேயாஸ் அய்யருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இது சிலரை முனுமுனுக்க வைத்தது. இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் … Read more

பெங்களூரு விமான நிலையத் தாக்குதல் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கத் தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெங்களூரு விமான நிலையத் தாக்குதல் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் மகா காந்தி என்பவரை பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி, மேலாளர் தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்தியாவில் மாஸ்-ஆ களமிறங்கிய மாஸா.. எப்படி தெரியுமா?

கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே நமது ஊர்களில் ஆங்காங்கே சிறு கடைகள் முளைத்து விடும். பழக்கடைகள், ஜூஸ் கடைகள், வெயிலை தணிக்கும் மோர், கூழ் இப்படி ஏராளமானவற்றை பார்க்கலாம். இப்படி ஏராளமானவற்றிற்கும் மத்தியில் மாஸா, கோகா கோலா என பாட்டில்களில் அடைக்கப்பட்ட ஜூஸ் வகைகளும் களை கட்டும். வியாபாராம் கல்லா கட்டும். இப்படி மக்கள் விரும்பி குடிக்கும் குளிர்பானங்கள் என்னென்ன? குறிப்பாக இந்தியர்கள் அதிகம் விரும்பும் பானம் எது? அதன் விற்பனை எப்படி? வாருங்கள் பார்க்கலாம். அசைக்க … Read more

காரைக்குடி: தொழிற்பயிற்சி நிறுவன ஆசிரியருக்கு கத்திக்குத்து: மாணவர் கைது! – நடந்தது என்ன?

காரைக்குடி அமராவதிப்புதூரில் அரசு ஐ.டி.ஐ உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இயந்திரவியல் பிரிவில் ஓவிய ஆசிரியராக அரியக்குடியைச் சேர்ந்த ராஜா ஆனந்த் என்பவர் (48) பணியாற்றி வருகிறார். கடந்த 8-ம் தேதி ஓவிய வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, 18 வயது மாணவன் ஒருவன் வகுப்பறையில் செல்போன் பார்த்துக் கொண்டு இருந்துள்ளான். அதைக் கண்ட ஆசிரியர் ராஜா ஆனந்த், அவனைக் கண்டித்ததுடன் செல்போனை பறித்துள்ளார். ஆத்திரமடைந்த மாணவன், ஆசிரியருடன் தகராறில் … Read more

ஒரே நேரத்தில் 20 கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு! பெண்ணொருவர் கொடுத்த புகாரையடுத்து பொலிஸ் அதிரடி

தமிழகத்தின் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி அனைவரும் சாமி கும்பிட சென்ற பெண் ஒருவரை சாதிப்பெயரை சொல்லி அங்கிருந்த தீட்சிதர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை … Read more

கார்ப்பரேட்டுகளிடம் தலை வணங்கிய மோடி : பிரியங்கா காந்தி கடும் தாக்கு

பதான்கோட் மோடி ஏற்கனவே கார்ப்பரேட்டுகளிடம் தலை வணங்கி உள்ளார் எனக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.   தற்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த மாநிலத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் நிலையில் பாஜக இங்கு ஆட்சியைப் பிடிக்க கடும் பிரயத்தனம் செய்து வருகிறது.   பாஜகவுக்காகப் பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, அமைச்சர்கள் என பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சிக்காக … Read more