வேறவழியே இல்லை..ராகுல்தான் காங். தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

India oi-Mathivanan Maran ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியை ராகுல் காந்திதான் ஏற்க வேண்டும்; இதனை ராகுல் நிராகரித்தால் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் விரக்தி அடைந்துவிடுவார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு தேவை; அகில இந்திய தலைமையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது கலகக் குரல் எழுப்பிய ஜி 23 தலைவர்களின் கோரிக்கை. இதனை காங்கிரஸ் மேலிடம் முதலில் நிராகரித்து கொண்டே வந்தது. கடந்த ஆண்டு … Read more

விப்ரோ-வை தொடர்ந்து இன்போசிஸ்.. கடுப்பில் ஐடி ஊழியர்கள்..!

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், ஜூன் காலாண்டுக்கான ஊழியர்களின் சராசரி வேரியபிள் பே ஊதியத்தை 70 சதவீதமாகக் குறைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐடி நிறுவனங்கள் 10 லட்சம் 20 லட்சம் எனப் பெரிய தொகையைச் சம்பளமாகக் கொடுத்தாலும் இதில் பெரும் தொகையை வேரியபிள் பே- ஆகக் கொடுக்கிறது. வேரியபிள் பே பிரிவில் இருக்கும் 2 லட்சமோ அல்லது 4 லட்சமோ அதை 4 காலாண்டுகளுக்கு ஊழியரின் செயல்திறன் அடிப்படையில் அளிக்கப்படும். இந்தத் தொகையைத் … Read more

Doctor Vikatan: தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைக்காத உடல்… பிரச்னை தீருமா, தொடர்கதையாகுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த மாதம் திருமணமானது. முதல் நாளிலிருந்தே என் உடல் தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. பதற்றம், பயம் காரணமாக அப்படியிருக்கலாம் என ஒவ்வொரு நாளையும் கடந்து கொண்டிருக்கிறேன். இதை வெளியிலும் சொல்ல முடியவில்லை. கணவர் அனுசரணையோடு இருப்பதால் பிரச்னை இல்லை என்றாலும் இது தொடர்கதையாகுமோ என பயமாக இருக்கிறது. எனக்கு என்ன பிரச்னையாக இருக்கும்…. தீர்வு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் மகப்பேறு மருத்துவர் நித்யா … Read more

இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு துணை தேர்வு ரிசல்ட்

சென்னை: பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கான முடிவு இன்று வெளியாகிறது. இதுகுறித்து அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் துணை தேர்வு நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள்,www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு வெளியாக உள்ளது என்றும், மறுகூட்டலுக்கு, வரும் 25, 26ம் தேதிகளில், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கி கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் முருகன் உட்பட 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது வில்லிவாக்கம் பாரதி நகரை சேர்ந்த கேப்ரியல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம்பூருக்குள் புகுந்த ஐடி.. தோல் தொழிற்சாலையில் ரெய்டு! ஃபரிதா குழுமத்துக்கு குறி

News oi-Noorul Ahamed Jahaber Ali ஆம்பூர்: தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வரும் வருமான வரித்துறை, இன்று காலை இந்தியாவின் முன்னணி காலணி உற்பத்தி நிறுவனமான பரிதா குழுமத்துக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பிரபலங்களுக்கு தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல், முறைகேடான வருமானம், வரி ஏய்ப்பு … Read more

வாக்காளர் அட்டை – ஆதார் இணைப்பு திரிணமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி: “வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவரவர் விருப்பம் என தேர்தல் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், ஆதாரை இணைக்கவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என பூத்அதிகாரிகள் மிரட்டி வருகின்றனர்,” என, திரிணமுல்காங்., செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே கூறியுள்ளார்.அவர், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுதும் நடக்கிறது. இதற்கென 6-பி என்ற படிவத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. … Read more

அன்று ரூ.1.50 லட்சம் சம்பளத்தில் ஐடி பணி… இன்று ரூ.199க்கு பீட்சா விற்கும் முதலாளி!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 1.5 லட்சம் சம்பளத்தில் ஐடியில் பணிபுரிந்து கொண்டிருந்த பஞ்சாபி சர்தார் ஒருவர் தற்போது 199 ரூபாய்க்கு அன்லிமிட் பீட்சா விற்கும் கடை முதலாளியாக மாறியுள்ளார். பஞ்சாபை சேர்ந்த மொஹபத் தீப் சிங் என்பவர் தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்கா உள்பட பல நாடுகளில் இவர் ஐடி நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார். ஆரம்பத்தில் 5,000 ரூபாய் பணியில் சேர்ந்த இவர் படிப்படியாக முன்னேறி 1.5 லட்சம் ரூபாய் வரை சம்பளம் … Read more

சாத்தூர்: அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – கோயில் பூசாரி மீது வழக்கு

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியை சேர்ந்தவர் குருசாமி. இவரின் மகளுக்கு இந்து சமய அறநிலையதுறையில் வேலை வாங்கிதருவதாக கூறி இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் ராமர் பூசாரி என்பவர் ரூ.3 லட்சம் பணம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால், தான் சொன்னதுபோல் குருசாமியின் மகளுக்கு இதுவரையில் ராமர் பூசாரி வேலை வாங்கித்தரவில்லை என கூறப்படுகிறது ராமர் பூசாரி இதனால் சந்தேகமடைந்த குருசாமி, வேலைக்காக கொடுத்த 3 லட்ச ரூபாய் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை … Read more

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து, ஈ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், … Read more