இன்றுமுதல் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாது..

சென்னை:  சென்னை பூக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் பிராட்வே பேருந்து நிலையம், மேம்படுத்தும் பணிக்காக  மூடப்படுவதால், இன்றுமுதல்,  பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் ராயபுரம், தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது. சென்னை குறளகம் அருகே இருந்த பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை ( 24.01.2026) முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் … Read more

“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது”! பிரதமர் மோடி

சென்னை: ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது.  இதை  தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என பிரதமர் மோடி இன்று என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதை முன்னிட்டு பதிவிட்டு உள்ளார். சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில் இன்று அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் இன்று மாலை தமிழ்நாடு வருகை தருகிறார். மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு … Read more

தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் பாக்கி! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி…

சென்னை: தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? என பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை தர உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? … Read more

எடப்பாடி – டிடிவி – அண்ணாமலை; மனக்கசப்புகள் மறந்து மேடையேறி கரம்கோர்த்த NDA தலைவர்கள்! – Photo Album

NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் NDA தலைவர்கள் Source link

தாம்பரம் – திருவனந்தபுரம், நாகர்கோவில் – மங்களூரு உள்பட அம்ரித் பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

திருவனந்தபுரம்:  பிரதமர் மோடி இன்று காலை  தாம்பரம் – திருவனந்தபுரம், நாகர்கோவில் – மங்களூரு உள்பட 4 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி இன்று மாலை தமிழ்நாடு வருகை தர உள்ள நிலையில், இன்று காலை  கேரளத்துக்குப் பயணம் மேற்கொண்டு 4 புதிய ரயில்களையும், பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். ண்மையில் திருவனந்தபுரம் மாநகராட்சித் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்தச் சூழ்நிலையில் பிரதமரின் கேரள பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது … Read more

`என்னால் பலனடைந்த பலர் என்னுடன் நிற்கவில்லை..!' – இணைப்பு விழா ஆலோசனையில் மனம் திறந்த வைத்திலிங்கம்

டெல்டாவில் அதிமுக முகமாக அறியப்பட்ட `சோழமண்டல தளபதி’ என கட்சியினரால் அழைக்கப்பட்ட ஓ.பி.எஸ் அணியில் இருந்த வைத்திலிங்கம், அதிலிருந்து விலகி கடந்த 21ம் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார். உடன் அவரது மகன் டாக்டர் சண்முகபிரவும் இருந்தார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த உடனே கிளம்பிய அவரது கார் நேராக அறிவாலயத்தில் போய் நின்றது. இணைப்பு விழா குறித்த ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம் “அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இணைந்திருக்கிறேன், நல்லாட்சி செய்து வரும் … Read more

கறிக்கோழி வளர்ப்புப் பிரச்சினைக்கு தீர்வு காண தொழில்நுட்பக் குழு அமைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: கறிக்கோழி வளர்ப்புப் பிரச்சினைக்கு தீர்வு காண தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் பண்ணை விவசாயிகள் முத்தரப்பு கூட்டம் நடத்திட வலியுறுத்தியும், கூலி உயர்வு கேட்டும், இலவச மின்சாரம் வழங்கிடவும், தரமான குஞ்சுகள் மற்றும் தீவனங்கள் வழங்கிடவும், பிளாங் செக், பட்டா, பத்திரம் போன்ற ஆவணங்களை விவசாயிகளிடம் வாங்குவதை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நலவாரியம் அமைத்து இஎஸ்ஐ மருத்துவ வசதி செய்து கொடுத்திடவும் … Read more

கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் – திருவனந்தபுரத்தில் நடந்தது என்ன?

அம்ருத் பாரத் ரயில் தொடக்கவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி இன்று கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் சென்றிருந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். இதில் பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் புத்தரிகண்ட மைதானம் வரை ரோடு ஷோ  நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். அதேசமயம் பிரதமரை வரவேற்க திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ் … Read more

மத்தியஅரசின் ‘ஜி ராம் ஜி’ திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை : மத்தியஅரசின் 125 நாள் வேலை திட்டமான ‘ஜி ராம் ஜி’ திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் வாழக்கூடிய எளிய மக்கள் மற்றும் விவசாயிகள்தான். சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பைத் தந்து பயன்பெற்று வந்தனர். அதனால், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. … Read more

" 'டபுள் இன்ஜின்' எனும் 'டப்பா இன்ஜின்' தமிழ்நாட்டில் ஓடாது!"- மோடிக்கு ஸ்டாலின் பதிலடி

மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ்நாட்டுக்கு ‘டபுள் இன்ஜின்’ சர்க்கார் தேவை. மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்” என்றார். பிரதமர் மோடி இந்நிலையில் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “பிரதமர் … Read more